Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, April 1, 2015

    குளறுபடி பாடத்திட்டத்தை ரத்து செய்யக்கோரி கல்வித்துறைக்கு'நோட்டீஸ்': கலை ஆசிரியர் சங்கம் நடவடிக்கை

    'ஓவியம் தொடர்பான குளறுபடியான பாடத்திட்டத்தை ரத்துசெய்யாவிட்டால், வழக்குதொடரப்படும்' என, கல்வித்துறை அதிகாரிகளுக்கு, கலை ஆசிரியர் சங்கம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.அரசு பள்ளிகளில், 16 ஆயிரம் கலை ஆசிரியர்கள், தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றுகின்றனர். 

    இந்த இடங்களில், ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய, போட்டித் தேர்வை நடத்த, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., போட்டித் தேர்வு நடத்த உள்ளது. இதற்கான பாடத்திட்டத்தை, தமிழக கல்வியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்து, அரசின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டது. இதற்கு கலை ஆசிரியர்கள், ஓவியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாடத் திட்டத்துக்குரிய புத்தகங்கள், ஆன் - லைன் உட்பட எங்கும் கிடைக்கவில்லை.
    இப்பாடத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, கலை ஆசிரியர் சங்கம் சார்பில், கல்வித் துறைக்கு சட்ட ரீதியாக, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு கலை ஆசிரியர் நலச் சங்க தலைவர் ராஜ்குமார் கூறியதாவது: சிறப்பு ஆசிரியர் போட்டி தேர்வுக்கு, கொஞ்சமும் புரியாத பாடத் திட்டம், ஆங்கில மொழியில் உருவாக்கப்பட்டுள்ளது. ஐந்து தலைப்புகளில், 95மதிப்பெண்களுக்கு வினாக்கள் அமையும் என, பாடத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 'கலையின் வரலாறு' தலைப்பில், வெளிநாட்டுக் கலைகளின்வரலாறு மற்றும் அதன் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றுக்கு இங்கே புத்தகங்களே கிடையாது. 'கலையும், தமிழ் இலக்கியமும்' தலைப்பில், ஓவியங்கள் மட்டுமே உள்ளன. எழுத்துத் தேர்வுக்கான தகவல்கள் கிடைக்கவில்லை. பாடத்திட்டத்தை ரத்து செய்து, வேறு பொருத்தமான பாடத்திட்டம் உருவாக்க வேண்டும். இல்லையென்றால், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

    2 comments:

    Unknown said...

    Hello rajkumar pls contact me i want ur phone no, 9750367463 vijaianand parttime PET

    Unknown said...

    Part time teachers i confirm pannuratha yaaru sir sonathu , Exam nadathurathe muthu valavan case nalathan atha vittutu Part time teachers i confirm pannurathuku exam vaikiranganu thappa publish pannathenga . i want call u pls call Rajkumar sir 9750367463 vijaianand part time PET