Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, April 21, 2015

    அரசு ஊழியர், ஆசிரியர்கள் அசையும் சொத்து, அசையா சொத்து வாங்க அனுமதி கோரும்போது கவனிக்க வேண்டியவை

    ஆணயர்(கா.ப) ந.க. எண் :82801/எம்.3/2004-2. தமிழ்நாடு அரசு ஊழியர் நன்னடத்தை விதி:1973, சார்விதி:2. அசையும் சொத்து -----------------------------
    (1) ரூபாய் 15000/ க்கு மேல் அசையும் சொத்து வாங்கினாலோ, விற்பனை செய்தாலோ, நிர்னயிக்கப்பட்ட அதிகாரிக்கு (controling officer ) ஒருமாதத்திற்குள் உரிய நிதி ஆதாரம், சொத்து விபரங்களுடன் தெரிவித்தால் போதுமானது .
    அசையா சொத்து. -------------------------- 

    (1) காலி வீட்டுமனை அல்லது கட்டப்பட்ட வீடு வாங்கும் போது அதன் விலைமதிப்பை. (guiding value) அரசு பதிவுத்துறையிடமிருந்து பெற்று அனுப்பி வைக்க வேண்டும். 
    (2) கட்டிடம் கட்ட உரிய அலுவலரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். 
    (3)கட்டிட மதிப்பு, அங்கீகரிக்கப்பட்ட வரைபடம் இணைக்கப்பட வேண்டும். 
    (4)சொத்தோ அல்லது கட்டப்பட்ட வீடோ வாங்கப்படும் நேர்வில் உரிய பனம் ஆதாரம் (source of income ) அவசியம் இணைக்கப்பட வேண்டும். 
    (5) வங்கி கடன் எனில் அதற்கான சான்று, ஒப்புதல் கடிதம், தவணைத் தொகை, தவணை மாதம, ஊதியத்தில் கையில் எடுத்துச் செல்லும் தொகை குறிப்பிடப்பட வேண்டும். 
    (6) நபரின் ஊதியச்சான்று. 
    (7)உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். குறிப்பு. ----------- அரசாணை எண் :409, P& AR 24/12/92 ன்படி அரசு ஊழியரின் குடும்ப உறுப்பினரால், குடும்ப உறுப்பினரின் தொகை மூலம் வாங்கப்படும் சொத்திற்கு முன் அனுமதி தேவை இல்லை. கவனத்திற்கு. --------------------' துறை ரீதியான கடன் பெற (department loan) பெற கட்டாயம் மேற்கண்ட துறை அனுமதி பெற வேண்டும்.

    No comments: