Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, April 15, 2015

    தமிழ்நாட்டில் ஆசிரியர் நியமன தேர்வு முறைக்கு எதிரான வழக்கில் 21-ந் தேதி இறுதி விசாரணை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

    தமிழ்நாட்டில் ஆசிரியர் நியமனத் தேர்வில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள‘வெயிட்டேஜ்’ முறையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான இறுதி விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு 21-ந் தேதிக்கு (செவ்வாய்க்கிழமை) ஒத்தி வைத்தது.

    ஆசிரியர் தேர்வு முறைக்கு எதிர்ப்பு
    ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள ‘வெயிட்டேஜ்’ முறையை ரத்து செய்யுமாறு அந்த தேர்வில் பங்கேற்ற லாவண்யா உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
    தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட உத்தரவில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதும் அனைத்து பிரிவினருக்கும் 5 சதவிகித மதிப்பெண் விலக்கும், மேலும் வெயிட்டேஜ் முறையும் பணி நியமனத்தின்போது கருத்தில் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசின் முடிவு சரி என உத்தரவு பிறப்பித்தது. அதே நேரத்தில் சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசின் முடிவு தேர்வு எழுதுபவர்களுக்கு பாதகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.ஒரே வழக்கில் நீதிமன்றத்தின் இதுபோன்ற கருத்து வேறுபாடு அச்சத்தைத் தருவதாக இருக்கிறது. எனவே, சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு இந்த வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
    அவகாசம் தேவையில்லை
    இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, இந்த மனுவின் மீதான பதிலை 6 வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தது.இந்நிலையில் இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் பக்கீர் முகமது இப்ராகிம் கலிபுல்லா மற்றும் கோபால கவுடா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.தமிழக அரசு சார்பில் பதில் மனுவை தாக்கல் செய்ய மேலும் 3 வாரங்கள் கால அவகாசம் கோரி கடிதம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனை சுட்டிக் காட்டிய மனுதாரர் தரப்பு வக்கீல்கள் நீதிபதிகளிடம் ‘சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பு தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களுக்கும் பொதுவானவை. மேலும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களும் ஒரே மாதிரியான கோரிக்கையை முன்வைத்து இருப்பவை என்றும் அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக பதிலளிக்க தமிழக அரசு சார்பில் அவகாசம் கோரத்தேவையில்லை என்றும் சுட்டிக்காட்டினார்கள்.
    இறுதி விசாரணை
    இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் முதல் மனுதாரரின் மனுவின் மீது தமிழக அரசு ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதுவே இந்த வழக்கு விசாரணையில் தொடர்புடைய மற்ற அனைத்து மனுக்களுக்கும் பொருந்தும் என்றனர்.எனவே முதல் மனுதாரரின் மனுவின் மீது தமிழக அரசு தாக்கல் செய்த பதிலையே இந்த வழக்கு விசாரணை தொடர்புடைய மற்ற மனுக்களுக்கும் பதிலாக ஏற்றுக்கொள்ளப்படும் என்று கூறிய நீதிபதிகள் இந்த வழக்கின் மீதான இறுதி விசாரணயை வரும் 21-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

    2 comments:

    http://csthalaimurai.blogspot.com said...

    தர்மபுரியில் ஏப்ரல் 20ம் தேதி தமிழக அரசை ஈர்க்கும் வகையில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெறயுள்ளது(அனுமதி பெறப்பட்டது). இதில் 6 முதல் 10ம் வகுப்பு வரை கணினி பாடத்தை நடைமுறை படுத்தி B.Ed Computer Science படித்த ஆசிரியர்களை பணியில் அமர்த்த கோரியும் அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள +1 மற்றும் +2 கணினி ஆசிரியர் பணி இடங்களை நிரப்பக்கோரியும் தர்மபுரியில் வரும் ஏப்ரல் 20ம் தேதி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற உள்ளது. B.Ed கணினி பட்டதாரி ஆசிரியர்கள் தாங்கள் மட்டும் அல்லாமல் தங்கள் பெற்றோர்களுடன் வந்து கலந்து கொள்ள வேண்டுகிறோம். மற்றும் தமிழ்நாட்டில் B.Ed கணினி அறிவியல் பயிலும் மாணவ மாணவிகளும் மற்றும் கணினி பட்டதாரிகளும் தவறாமல் கலந்துகொண்டு ஆர்பாட்டத்தை வெற்றி பெற செய்யும்மாறு நமது தர்மபுரி மாவட்டத்தின் B.Ed கணினி பட்டதாரிகள் சங்கம் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.
    நாள்: 20-04-2015
    நேரம்: காலை 10 மணி
    இடம்: மாவட்ட கலெக்டர் அலுவலகம்
    தொடர்ப்புக்கு -
    மாவட்ட தலைவர் திரு. பெ. வேல்முருகன் 9751078810,9489047718
    மாவட்ட செயலாளர் திரு .கண்ணன் 9788151383
    மாநில செயலாளர் திரு . குமரேசன் 9626545446,9489047713
    திரு. மூர்த்தி -9788314484
    திரு. திருவேங்கடம்- 9787041511
    திரு. கார்த்தி - 9626942087
    திரு. கணேசன் சேலம்-9489047714
    திரு. புகழ் விழுப்புரம்-9677111106
    திரு. சேகர் கரூர் -9489047720
    திரு.நாமக்கல் கார்திக் -9789180422


    www.tnbedcsvips.com
    V.KumaresaN
    9626545446

    watch video


    https://www.youtube.com/watch?v=jd_aWzYkzYo

    Md said...

    Govt aided school bt asst history vacant tet pass any canditate pls contact 9585143266