தமிழ்நாட்டின் அரசுப் பணி இடங்களை டி.என்.பி.எஸ்.சி., எனப்படும் தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நிரப்பி வருவது நாம் அறிந்ததுதான். மெட்ராஸ் சர்வீஸ் கமிஷன் என்ற பெயரில் 1929ல் நிறுவப்பட்ட இந்த அமைப்பு 1970ல் தமிழ் நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் என்று பெயர் மாற்றம் பெற்றது.
இந்த அமைப்பின் சார்பாக அரசுக் காலி இடமான சப்இன்ஸ்பெக்டர் ஆப் பிஷரீஸ் பிரிவில் உள்ள 24 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
தேவைகள்
டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ள மீன்வள துணை ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.07.2012 அடிப்படையில் 18 வயது நிரம்பிய வராக இருக்க வேண்டும். மும்பையிலுள்ள சென்ட்ரல் இன்ஸ்டியூட் ஆப் பிஷரீஸ் எஜூகேஷன் வழங்கும் பிஷரீஸ் சயின்ஸ் பிரிவு அஸோசியேட் டிப்ளமோ அல்லது இந்திய அரசு வழங்கும் இன்லேண்டு அல்லது மரைன் பிஷரீஸ் வகுப்புகளை வெற்றிகரமாக முடித்ததற்கான சான்று, அல்லது தமிழக அரசின் தொழில் நுட்ப கல்வி வாரியம் வழங்கும் பிஷரீஸ் டெக்னாலஜி அண்டு நேவிகேஷன் பிரிவில் டிப்ளமோவை முடித்தவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்தப் பதவிகளுக்கு மேற்கண்ட கல்வித் தகுதியுடன் உடல் நலம் குறித்த சில சான்றுகளையும் கூடுதலாக தர வேண்டியிருக்கும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற 2 நிலை களிலான தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
மற்றவை
மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இதற்காக ரூ.150/ஐ தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை வங்கி அல்லது தபால் அலுவலகம் மூலமாக செலுத்த வேண்டும். கட்டண விலக்கு சலுகை பெறத் தகுதியானவர்கள் ரூ.50/ மட்டும் செலுத்தினால் போதுமானது.
இந்தப் பணி இடங்களுக்கு ஆன்லைன் முறையிலேயே விண்ணப்பிக்க வேண்டும். முழுமையான தகவல்களைப் பின்வரும் இணையதளத்திற்கு சென்று முழுமையாக அறிந்து அதன் பின்னரே விண்ணப்பிக்குமாறு
அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆன்லைனில் பதிவு செய்ய இறுதி நாள்: 18.01.2013
கட்டணம் செலுத்த இறுதி நாள்: 22.01.2013
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 10.02.2013
No comments:
Post a Comment