Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, January 17, 2013

    பள்ளி நேரத்தை மாற்றியமைப்பது அவசியம் தானா?

    சென்னை பெருங்குடியில் பஸ் படிக்கட்டில் பயணித்த நான்கு மாணவர்கள், லாரி மோதி உயிரிழந்தனர். இவ்வழக்கை, ஐகோர்ட், தாமாக முன்வந்து விசாரித்தது. அப்போது, போக்குவரத்து துறை தாக்கல் செய்த மனுவில், "பள்ளி நேரத்தை காலை 7.30 மணியில் இருந்தும், கல்லூரி நேரத்தை காலை 8.00 மணி
    முதல் துவக்கும் வகையில் மாற்றம் செய்யலாம். இதுதொடர்பாக, பள்ளி கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறையிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது,' என தெரிவித்துள்ளது. அத்துறை அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். இது, பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பெற்றோர், ஆசிரியர்கள் கருத்து:
    ஜெயலட்சுமி, தலைமை ஆசிரியை, தொரவலூர் ஊராட்சி ஒன்றிய பள்ளி: பள்ளி நேரத்தை மாற்றியமைத்தால், மாணவர்களின் கல்வித்தரத்தை மோசமான தாக்கும். திருப்பூர், தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்று வருபவர்களாக உள்ளனர். தற்போது, 9.00 மணிக்கு வகுப்பு துவங்கும்போதே, பாதி குழந்தை கள் காலை உணவு எடுத்துக் கொள்ளாமல் வருகின்றன. பள்ளியில் சோர்வாக இருப்பதோடு, மயக்கமும் அடைந்து வருகின்றனர்.
    வேலை முடிந்து இரவில் வீடு திரும்பும் பெற்றோர், மறுநாள் காலை 4.00 மணிக்கு எழுந்து, உணவு தயாரித்தால் மட்டுமே, குழந்தைகளை காலை 7.30க்கு பள்ளிக்கு அனுப்ப முடியும். குழந்தைகளும் அதிகாலையில் எழ வேண்டிய நிலை ஏற்படுவதோடு, உணவும் உண்ண முடியாமல், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்படுவர்.
    வளர் இளம்பெண்களுக்கு, ஊட்டச்சத்து அதிகம் தேவைப்படும். அவர்களுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். கிராமத்து குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவர். பள்ளி நேரம் மாற்றம் என்பது குழந்தைகள் கல்வியுடன் விளையாடும் மிக மோசமான செயல்.
    கிருஷ்ணமூர்த்தி, காலேஜ் ரோடு: கடும் குளிர், வட கிழக்கு, தென்மேற்கு பருவ மழை என சிக்கலான சீதோஷ்ண நிலையை கொண்டது நமது நாடு; ஒன்பது மாதங்கள் வரை, விடிவதற்கே 7.00 மணியாகிறது. இதில், 7.30க்கு, பள்ளி நேரம் துவக்கப்படும் என்பது கற்பனை கூட செய்து பார்க்க முடியாதது. பெரியவர்களாலேயே, குளிர், மழையை சமாளிக்க முடியாது. அதிகாலையில் எழுந்து, ஒரு மணி நேரம், போராடினால்தான், குழந்தைகள் ஓரளவு சாப்பிடுகின்றன. வெகுதூரத்திலுள்ள பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கு, போக்குவரத்துக்கான காலம், இரண்டு மணி நேரமாகிறது. எனவே, பள்ளி நேரத்தை மாற்றியமைப்பது சாத்தியமில்லாதது.

    சாந்தி, வீரபாண்டி: பள்ளி வேலை நேரத்தை மாற்றும் திட்டத்தை எந்த பெற்றோரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தற்போது, குழந்தைகளை கிளப்பவே, 5.00 மணிக்கு எழுந்திருக்க வேண்டியுள்ளது. நேரத்தை மாற்றினால், இரண்டு வேளை உணவு கொடுத்து விட வேண்டும். காலையில், எழுந்து கொஞ்ச நேரம் படிக்கின்றனர்; அதுவும் பாதிக்கும்.
    சரோஜினி, பல்லடம் ரோடு: நீண்ட தூரமுள்ள பள்ளிக்கு செல்ல, தற்போதே, 5.30க்கு தயாராக வேண்டியுள்ளது. குழந்தைகள் காலைக்கடன் முடித்து, குளித்து கிளம்புவதற்கே இரண்டு மணி நேரம் செலவழிக்கின்றன. இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், அதிகாலை 3.00 மணிக்கே, எழுந்து, சமையல் செய்தால் மட்டுமே சாத்தியமாகும். குழந்தைகள் மட்டுமின்றி, பெற்றோருக்கும் உடல், மன ரீதியாக மிகவும் சிரமத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்படும்.
    மோகன்பாபு, அரண்மனைப்புதூர்: குழந்தைகளுக்கு 10 முதல் 12 மணி நேரம் வரை உறக்கம் தேவை. தற்போது, சில தனியார் பள்ளிகள் 8.30 மணிக்கே பள்ளி நேரத்தை வைத் துள்ளன. வாரம் முழுவதும், எழுந்து, கிளம்பி, படித்து என மெஷின் போல், இயங்கி வரும் பெற்றோரும், குழந்தைகளும், தற்போதே, விடுமுறை நாளை எதிர்பார்த்துள்ளனர். தற்போதுள்ள சூழ்நிலையில், குழந்தைகளை விட பெற்றோரே, பள்ளி விடுமுறையை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். உறக்கமும் பாதிப்பதோடு, குழந்தைகளின் காலை உணவும் பாதிக்கும்.
    முருகன், 15 வேலம்பாளையம்: ஒரு குடும்பத்தில் இரண்டு பேரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால், அதிகாலையில் எழுந்து குழந்தைகளை பள்ளிக்கு கிளப்ப வேண்டும். மாலையில் சீக்கிரமே வகுப்பு முடிந்து, குழந்தை திரும்பி வந்தால், யார் கவனித்துக் கொள்வது என்ற சிக்கல் ஏற்படும். அரசு அலுவலகம், தனியார் அலுவலகங்களின் வேலை நேரம் ஒன்றாகவும், பள்ளி வேலை நேரம் ஒன்றாகவும் இருந்தால், பாதிப்புகள் இரு தலைமுறையையும் பாதிக்கும். குடும்பத்தில் சிக்கல் அதிகரிக்கும்.
    குழந்தைகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்படைவர்; அவர்களின் கல்வி வீணாகும். பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், அதிகாலை நேரத்தில் படிப்பதை வழக்கமாக கொண் டுள்ளனர். நேரத்தை மாற்றியமைத்தால், அதிகாலையில் படிக்க முடியாமல், பாதிப்பர். புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது, பெற்றோர், மாணவர்கள் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
    பாரதி, சாமளாபுரம் லிட்ரசி மிஷன் மேல்நிலைப்பள்ளி முதல்வர்: இன்றைய சூழ் நிலையில், நான்கில், மூன்று பங்கு குழந்தைகள் சாப்பிடாமல்தான் பள்ளிக்கு வருகின்றன. எழுந்ததும், பால் உள்ளிட்ட பானங்கள் ஏதாவது குடித்து விடுவதால், சாப்பிட முடிவதில்லை. பள்ளிக்கு வந்து, ஸ்நாக்ஸ் என்ற பெயரில், பெரும்பாலும் உடலுக்கு தீங்குவிளைவிக்கும் உணவுகளை எடுத்துக் கொள்கின்றன.
    முன்னதாகவே வகுப்பு துவங்கும்போது, காலை உணவை பள்ளிக்கு கொண்டு வந்து, 9.00 மணியளவில் சாப்பிடும்போது, அனைத்து குழந்தைகளும் உணவு எடுத்துக்கொள்ளும். பெற்றோரை பொருத்தவரை, உணவு தயாரிக்கும் பணியை காலை 7.00 மணிக்குள் முடித்து விடுகின்றனர்.
    குழந்தையை எழுப்பி, தயாராக்குவதிலேயே நேரம் வீணாகிறது. தற்போதைய குழந்தைகள், அதிகாலை எழுந்து படிப்பது இல்லை; இரவு வெகுநேரம் "டிவி' பார்த்து விட்டு, நேரம் கழித்தே எழுந்திருக்கின்றன. எனவே, நேரத்தை மாற்றியமைப்பதால் பாதிக்காது. காலை நேரத்தில் பள்ளிக்கு வந்ததும், யோகா உள்ளிட்ட ஏதாவது ஒரு விளையாட்டு அரை மணி நேரம், ஒரு பாட வேளை; சாப்பிட நேரம் என ஒதுக்கினால், குழந்தைகளின் பழக்க வழக்கத்தில் மாற்றம் ஏற்படும். குழந்தைகளின் மூளையும், காலை நேரத்தில் புத்துணர்ச்சியோடு இருக்கும்.
    அந்நேரத்தில் படித்தால், நன்றாக இருக்கும். வகுப்பு முடிந்து வீட்டுக்கு சென்றதும், மதிய உணவு சாப்பிட்டு விடலாம். சில பகுதிகளில், சில பள்ளிகளில் காலை 7.00 மணிக்கே, வகுப்புகள் செயல்படுகின்றன. அத்திட்டத்தை அரசே முன் வந்து செயல்படுத்தினால், போக்குவரத்து நெரிசலில் இருந்து குழந்தைகள் தப்பிப்பதோடு, புத்துணர்ச்சியோடு பாடம் படிப்பர்.
    இவ்வாறு, அவர்கள் கூறினர்.

    No comments: