Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, January 10, 2013

    பிளஸ் 2 தேர்ச்சி பெறாமல் பட்டம் பெற்ற ஆசிரியர்களை பதவி உயர்வு பட்டியலில் சேர்க்கக் கூடாது

    தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெறாமல் பட்டம் பெற்ற ஆசிரியர்களை சேர்க்கக் கூடாது உள்ளிட்ட 10 கட்டளைகள் பிறப்பித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப்
    பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், சிறுபான்மை பாட மொழி ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு 1.1.2013 அடிப்படையில் தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழ் ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு 31.12.1998 வரையும், இதர பாட பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு 31.12.2012 வரையும் விவரங்களை அனுப்பி வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. பதவி உயர்வுக்காக அரசு 10 கட்டளைகளை பிறப்பித்துள்ளது. அவை வருமாறு:
    * பதவி உயர்வு பட்டியலில் இடம் பெறும் ஆசிரியர்கள் 31.12.2012 அன்று குறிப்பிட்ட பாடத்தில் இளங்களை பட்டச் சான்று, பிஎட் பட்டச் சான்று வைத்திருக்க வேண்டும். (குறைந்த பட்சம் புரோவிஷனல் சர்டிபிகேட்டாவது இருக்க வேண்டும்)
    * வெளி மாநில சான்று எனில் மதிப்பீடு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
    * பட்டியலில் இடம் பெறும் ஆசிரியர்கள் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்ச்சி பெற்று பின்னர் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேல்நிலைக் கல்வி தேர்ச்சி பெறாதவர்களை எந்தக் காரணம் கொண்டும் பட்டியலில் சேர்க்கக் கூடாது.
    கடைசியாக பெறப்பட்ட உயர் கல்வித் துறை அரசு ஆணைப்படி பதினோராம் வகுப்புக்கு (பழைய எஸ்எஸ்எல்சி) பின்னர் இரண்டு ஆண்டு ஆசிரியர் பட்டயப் படிப்பு படித்து பின்னர் தொலை தூரக் கல்வி மூலம் இளங்கலை பட்டம் பெற்றவர்களை எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2, டிகிரிக்கு இணையாகக் கருதி பதவி உயர்வு முன்னுரிமை பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.
    * 1.1.2010 அல்லது அதற்கு பின்னர் பட்டதாரி ஆசிரியர் (தமிழ் ஆசிரியர்கள் உட்பட) மற்றும் சிறுபான்மை பாட, மொழி ஆசிரியர் பதவி உயர்வை தற்காலிகமாக துறந்தவர்கள், ஏற்கனவே பட்டதாரி ஆச¤ரியர், சிறுபான்மை மொழி ஆசிரியர் பதவி உயர்வை நிரந்தரமாக துறந்தவர்களின் பெயர் பட்டியலில் எந்தக் காரணத்தை கொண்டும் இடம் பெறக் கூடாது.
    * ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 1995ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டவர்கள் சார்ந்த விவரங்கள் அளிக்கும் போது, அவர்கள் தேர்வு செய்யப்பட¢ட ஆண்டு, தர எண் தவறாமல் குறிப்பிட
    வேண்டும்.
    * ஆசிரியர்களின் பிறந்த தேதி, நியமன முறை, கடந்த 5 ஆண்டுகளில் தண்டனை ஏதும் இருந்தால் அதன் விவரம், ஒழுங்கு நடவடிக்கை நிலுவை இருந்தால் அதன் வ¤வரம் போன்றவற்றை உறுதி செய்து அளிக்க வேண்டும்.
    * நகராட்சி பள்ளிகளில் 1.6.1986க்கு முன்பு நகராட்சி ஆணையரால் நியமனம் செய்யப்பட்டு பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்களின் பெயர்கள் பட்டியலில் இடம் பெறுதல் கூடாது.
    * தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது ஆகிய சிறுபான்மை மொழியில் இளங்கலை பட்டம் பெற்றிருந்தால், அந்த ஆசிரியர்களின் அனைத்து விவரங்களும் பாடம், மொழி வாரியாக தனித்தனியே பட்டியலிட்டு அனுப்ப வேண்டும்.
    * தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டு பின்னர் 1.9.92, 1.6.2006ல் முறையான ஊதிய விகிதத்திற்கு கொண்டு வரப்பட்ட ஆசிரியர்களின் முதன் முதலில் நியமனம் செய்யப்பட்ட நாள் பணி பதிவேட்டை சரிபார்த்து பூர்த்தி செய்ய வேண்டும்.
    * சென்னை ஐகோர்ட் 14.8.2012 நாளிட்ட தீர்ப்பின்படி ஓராண்டு முறையில் இரட்டை பட்டம் பெற்றவர்கள் 1.1.2012ம் ஆண்டு முன்னுரிமை பட்டியலில் இருந்து நிறுத்தப்பட்டு விட்டதால், தற்போதைய முன்னுரிமை பட்டியலில் அவ்வாறு பயின்றவர்களின் விவரங்கள் இடம் பெறக் கூடாது. இவ்வாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

    No comments: