கட்டாய தமிழ் கற்கும் கல்விச் சட்டத்தின்படி, 2012 - 2013 ஆம் கல்வியாண்டில் 07ஆம் வகுப்பு வரை தமிழ் கற்றுத் தரப்பட வேண்டும். இதன் அடிப்படையில் கன்னடம் / மலையாளம் / தெலுங்கு மொழிவாரி சிறுபான்மைப் பள்ளிகளில், தொடக்கப் பள்ளிகளில் 1 - 5 வகுப்புகளுக்கு 01 இடைநிலை ஆசிரியர் பணியிடமும் (தமிழ் வழி), நடுநிலைப்பள்ளியினை பொறுத்துவரை 6 - 8 வகுப்புகளுக்கு 01 தமிழாசிரியர் பணியிடமும் கூடுதலாக நிரப்பி கொள்ளலாம்.
அதற்குரிய கருத்துருவினை இயக்குநருக்கு அனுப்பி வைக்க அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment