Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
 • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
 • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

  Sunday, June 10, 2012

  ஆசிரியர் தகுதித் தேர்வு : தமிழ் வினா-விடை.

  தமிழகத்தில் ஜூலை 12ஆம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வெழுத உள்ள இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் தங்களின் தரத்தினை உயர்த்திக் கொள்ளும் வகையில் தற்போது தமிழ் பாடத்திற்கான தொடர் மாதிரி வினா விடைகள்...
  *  தொல்காப்பியம் அமைந்துள்ள "பா" வகை -  கலிப்பா
  *  ஐந்திணை எழுபதின் ஆசிரியர் - மூவாதியார்
  * சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் - காரைக்கால் அம்மையார்

  * தமிழின் தொடர் அமைப்பு எந்த அடிப்படையில் அமையும் - செயப்படுபொருள் - எழுவாய் - பயனிலை
  *  யசோதர காவியத்தின் ஆசிரியர் - வெண்ணாவலுடையார்
  *  உள்ளத்துணர்வுகளின் வெளிப்பாட்டை விளக்குவது - மெய்ப்பாட்டியல்
  "இலக்கியம் வாழ்வின் கண்ணாடி என்றும் காலத்தைக் காட்டும் கண்ணாடி என்றும்" எதனைக் கூறுவர் - சங்க இலக்கியம்.
  *  99 வகை மலர்களின் வருணை அமைந்து வரும் பாடல் - மலைபடும்கடாம்
  *  பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள அறநூல்களின் எண்ணிக்கை -  11
  *  "முடி பொருள் தொடர்நிலைச் செய்யுள்" என்று அழைக்கப்படுவது - சீவக சிந்தாமணி
  *  வேளாண் வேதம் என அழைக்கப்படும் நூல் - நாலடியார்
  *  உத்திரவேதம் என அழைக்கப்படும் நூல் - திருக்குறள்
  *  திருக்குறளில் தனமனிதனது வாழ்வின் மேன்மையைக் குறிக்கும் பகுதி - அறத்துப்பால்
  *  காலந்தோறும் தமிழ் சங்க காலத் தமிழ், பல்லவர் காலத் தமிழ் என வழங்கப்படுகிறது.
  *  மூவேந்தர்களின் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தோர் -  பாண்டியர்
  *  தொல்காப்பியம் பொருளாதிகாரம் எதற்கு இலக்கணம் கூறுகிறது - அகத்திணை, புறத்திணை.
  *  தொல்காப்பியம் -  முழுமையாகக் கிடைத்த எழுத்து சொல்பொருள் நூல்.
  *  தினையியல், களவியல், கற்பியல் பொருளியல் ஆகிய நான்கும் உரைப்பது -  அகப்பொருள்.
  *  பூதத்தாழ்வார் பிறந்த இடம் - காஞ்சிபுரம்
  *  நம்மாழ்வாரின் சீடராகக் கருதப்படுபவர் -  திருப்புளி ஆழ்வார்.
  *  சுந்தரர் பிறந்த ஊர் - திருமுனைப்பாடி
  *  சுந்தரரின் இயற்பெயர் - நம்பி ஆரூரர்
  *  "வையம் தகளியாக, வார்கடலே நெய்யாக" என்று முதல் திருவந்தாதியைப் பாடியவர் - பொய்கையாழ்வார்.
  *  தமிழ்மாறன் என்று அழைக்கப்படுபவர் - நம்மாழ்வார்
  *  புறப்பொருளுக்கு இலக்கணம் உரைக்கும் நூல் - புறப்பொருள் வெண்பாமாலை
  *  மூன்று சீர்களாய் அமைவது - நேரிசை ஆசிரியப்பா
  *  ஈற்றயலடி முச்சீராய் வருவது - நேரிசை ஆசிரியப்பா
  *  மூன்று சீர்களாய் அமைவது - நெடிலடி
  *  சார்பெழுத்துக்களின் வகைகள் - ஐந்து
  *  தமிழில் வேர்ச்சொல் ஆராய்ச்சியில் மிகவும் புகழ் பெற்றவர் - தேவநேயப் பாவாணர்
  *  இடைச்சங்கத்தின் கால எல்லை - 3700 ஆண்டுகள்
  *  இடைச்சங்கம் இருந்த இடம் - கபாடபுரம்
  *  அறிவுடை நம்பியைப் பாடியவர் - பிசிராந்ததையார் பாண்டியன
  *  தலைமுடி நரைக்காததற்கு விளக்கம் தந்தவர் - பிசிராந்தையார்
  *  சோழ மன்னனின் உள்ளம் கவர்ந்த நண்பர் - பிசிராந்ததையார்
  *  காரைக்கால் அம்மையார் அந்தாதித் தொடையில் பாடியுள்ள பாடல்கள் - அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணி மாலை
  *  காரைக்கால் அம்மையாரின் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ள திருமுறை - பதினோராம் திருமுறை
  *  மணிமேகலையின் அமுதசுரபியில் முதன் முதலில் சோறிட்டவர் - ஆதிரை
  *  மணிமேகலையில் உள்ள காதைகள் - 30 காதைகள்
  *  மணிமேகலைக்கு உதவிய பெளத்தமதத் துறவி - அறவண அடிகள்
  *  மணிமேகலை நூல் அமைந்துள்ள பா - அகவற்பா
  *  மணிமேகலை பெரிதும் வலியுறுத்துவது - பசிப்பிணி நீக்கம்
  *  தென்னவன் பிரமராயன் என்ற விருது பெற்ற நாயன்மார் - மாணிக்கவாசகர்
  *  திருத்தொண்டத் தொகையை எழுதியவர் - மாணிக்கவாசகர்
  *  சமுதாய சீர்திருத்தங்களைக் கூறிய காப்பியம் (பரத்தை ஒழிப்பு, மது ஒழிப்பு, நிறை ஒழிப்பு, சாதி ஒழிப்பு) - மணிமேகலை
  *  சீவகன் ஆட்சி எய்திய சிறப்புப் பற்றிக் கூறும் இலம்பகம் - நாமகள் இலம்பகம்
  *  வளையாபதி எந்தச் சமயத்தைச் சார்ந்த நூல் - சமண சமயம்
  *  தருமசேனர் என்று அழைக்கப்பட்டவர் - அப்பர்
  *  "வடமேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறு நல்லுலகம்" எனத் தமிழ்நாட்டின் எல்லையைக் குறிப்பிடுபவர் - பனம்பாரனார்
  *  "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே, வானொடு முன்தோன்றி மூத்தகுடி" எனும் தொடர் அமைந்துள்ள பாடல் - புறப்பொருள் வெண்பாமாலை
  *  "இவள் என்று பிறந்தவள்" என்றறியாத இயல்பினலாம் எங்கள்தாய்" என்று தமிழின் தொன்மையைக் குறிப்பவர் - பாரதியார்.
  *  "விண் இயங்கும் ஞாயிற்றைக் கை மறைப் பாரில்" இவ்வடி இடம்பெறும் நூல் - கார் நாற்பது.
  *  திருமாலின் பாஞ்சசன்யம் என்னும் சங்கின் அவதாரமாகக் கருதப் பெறுபவர் - பொய்கையாழ்வார்
  *  தமிழ்மொழியியல் ஆய்வுக்கு வித்திட்டவர் - தெ.பா.மீ
  *  மொழி என்பது - கருத்துக்களின் பரிமாற்றம்
  *  தமிழ்மொழி வழங்கிய பகுதியின் வட எல்லை, தென் எல்லைகளாக அமைந்தவை - வடவேங்கடம் முதல் தென் குமரி வரை
  *  சங்கங்கள் கடல்கோள்களால் அழிந்தன.
  *  சங்கங்கள் பாண்டியர்களால் புரக்கப் பெற்றன.
  *  சங்கங்கள் தமிழ் வளர்த்தன.
  *  களவியலுரை என்பது ஒர் உரைநூல்.
  *  களவியலுரை என்பது ஒர் இலக்கண நூல்
  *  களவியலுரை என்பது காலத்தால் பழமையான நூல்
  *  பண்பட்ட திராவிட மொழிகளில் தொன்மையானது - தமிழ்
  *  பத்துப்பாட்டு நூலில் மிகவும் பெரிய நூல் - மதுரைக் காஞ்சி
  *  பொருநராற்றுப்படையைப் பாடியவர் - முடத்தாமக் கண்ணியார்.
  *  மலைபடுகடாம் என்னும் இலக்கியம் - கூத்தாற்றுப்படை
  *  முல்லைப்பாட்டைப் பாடியவர் - நப்பூதனார்.
  *  தமிழ் நிலைபெற்ற மதுரை எனக்கூறும் நூல் - சிறுபாணாற்றுப்படை
  *  உலா நூல்களுள் மிகப் பழமையைனது -  திருக்கைலாய ஞான உலா
  *  தூது இலக்கியத்திற்குரிய யாப்பு - கலிவெண்பா
  *  கலிங்கத்துப் பரணி பாட்டுடைத்தலைவன் - குலோத்துங்கன்
  *  ஆண்பால் பிள்ளைத் தமிழின் இறுதி நான்கு பருவங்கள் - அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்
  *  திருக்கோவையார் என்னும் சிற்றிலக்கியத்தை இயற்றியவர் - மாணிக்கவாசகர்
  *  கலம்பக இலக்கியம் பாடுவதில் வல்லவர் - இரட்டைப் புலவர்
  *  தமிழ் மொழியில் தோன்றிய முதல் குறவஞ்சி இலக்கியம் - அழகர் குறவஞ்சி
  *  கண்ணனே வந்து தன் கைத்தலம் பற்றக் கனவு கண்டதாகக் கூறும் பாடலைப் பாடியவர் - ஆண்டாள்
  *  "நாமார்க்கும் குடியேல்லோம், நமனை அஞ்சோம்" என்று பாடியவர் - திருநாவுக்கரசர்
  *  "பொய்கை ஆழ்வார்" பாடிய பக்திப் பாடல் தொகுதியின் பெயர் - முதல் திருவந்தாதி
  *  "சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே" பாடியவர் - பொன்முடியார்
  *  திருமாலின் பல்வேறு அம்சமாகத் தோன்றிய ஆழ்வார்கள்
  *  பாஞ்ச சன்யம் - பொய்கையாழ்வார்
  *  கருடாம்சம்    - பெரியாழ்வார்
  *  சுதர்சனம் - திருமழிசை
  *  களங்கம் -  திருமங்கையாழ்வார்
  காலமுறைப்படி வரிசைப்படுத்துதல்: பொய்கையாழ்வார், பூத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார்
  *  நற்றினண, நல்ல குறுந்தொகை, ஐங்குறு நூறு, ஒத்தபதிற்றுபத்து
  *  அம்புலி, சிற்றில் சிறுபறை, சிறுதேர்
  *  காப்பு, செங்கீரை, தாலாட்டு, சப்பாணி
  *  அரியணையைத் துறந்து வைணவத் தொண்டர் கோலத்தை ஏற்றவர் - குலசேகரர்
  *  சுந்தர் பாடிய திருத்தொண்டர் தொகை - தொண்டர் தம் பெருமை கூறும் நூல்
  *  பிள்ளைத் தமிழின் இலக்கியம் குறித்து விளக்கம் தரும் நிகண்டு - திவாகர நிகண்டு
  *  குலோத்துங்க சோழனின் பிள்ளைத்தமிழ் பாடியவர் - ஒட்டக்கூத்தர்
  *  பகழிக்கூத்தர் பாடிய பிள்ளைத்தமிழ் - திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்.
  *  திருத்தக்கதேவர் சார்ந்த சமயம் - சமண சமயம்
  *  சீவகன் கதையைப் பெருங்காப்பியமாகப் பாடியவர் -  திருத்தக்கதேவர்
  *  அறிவு அற்றம் காக்கும் கருவி - முப்பால்
  *  செல்வம் சகடக் கால்போல் வரும் - நாலடியார்
  *  சிறு மாலை கொல்லுனர் போல வரும் - ஐந்திணை எழுபது
  *  காதலி மாட்டுள்ளம் வைப்பார்க்குத் துயிலில்லை - நான்மணிக்கடிகை
  *  ஊனைத் தின்று ஊனைப் பெருக்குதல் - இன்னா நாற்பது
  *  இளமையை மூப்பு என்றுணர்தல் இனிதே - இனியவை நாற்பது
  *  புல் நுனிமேல் நீர் போல் நிலையாமை - நாலடியார்
  *  அகம் குன்றி மூக்கில் கரியாருடைத்து - முப்பால்
  *  முல்லையும் குறிஞ்சியும் நல்லியல்பு இழந்தால் பாலையாகும்
  *  மருந்துப் பெயர் அல்லாத பதினெண் கீழ்க்கணக்கு நூல் - கைந்நிலை
  *  தூது இலக்கியத்திற்குரிய யாப்பு - கலிவெண்பா

  No comments: