கல்லூரி ஆசிரியர்களாகப் பணியாற்ற உள்ளவர்கள்,
பல்கலைக்கழக மான்யக்குழு சார்பில் நடத்தப்படும், 15 நாள் பயிற்சியில்
கட்டாயம் பங்கேற்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
பல்கலைக்கழக
மானியக்குழு கூட்டம், கடந்த சில தினங்களுக்கு முன் டில்லியில் நடைபெற்றது.
இதில், நாட்டில் உயர் கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை, 15
சதவீதத்தில் இருந்து, 25 சதவீதமாக உயர்த்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இதுதவிர, உயர்கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, தரமான
கல்வி வழங்குவது, ஆசிரியர்களின் திறனை மேம்படுத்துவது குறித்து, ஆலோசனைகள்
வழங்கப்பட்டன.
உத்தரவு: இதுநாள் வரை,
பி.எச்.டி., முடித்தவர்கள், நெட், ஸ்லெட், சி.ஐ.எஸ்.ஆர்., தேர்வில் வெற்றி
பெற்றவர்கள் கல்லூரி ஆசிரியர்களாகப் பணி அமர்த்தப்பட்டனர். இனி, இந்த
தேர்வுகளில் வெற்றி பெற்றாலும், பல்கலைக்கழக மான்யக் குழு சார்பில்
நடத்தப்படவுள்ள, 15 நாள் பயிற்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அரசு
உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளுக்கும் இந்த விதிமுறை
பொருந்தும்.
இந்தப் பயிற்சியில், மாணவர்களின் மனநிலையை
புரிந்து கொள்ளுதல், பாடம் நடத்தும் முறை, நவீன தொழில்நுட்பங்களை
பயன்படுத்துதல் குறித்து பயிற்சி அளிக்கப்படும். சென்னை பல்கலை, நடப்பு
கல்வி ஆண்டில் பயிற்சியை துவங்க திட்டமிட்டு உள்ளது.
நடப்பாண்டில் துவக்கம்:
இதுகுறித்து சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவாசகம் கூறியதாவது:
டி.டி.எட்., - பி.எட்., முடித்தவர்கள் தான் பள்ளிகளில் ஆசியர்களாக
நியமிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு, படிக்கும்போதே உளவியல் ரீதியான
பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ஆனால், கல்லூரிகளில் பணியாற்றும்
ஆசிரியர்கள், இந்த பயிற்சிகளை பெறுவதில்லை. இதனால், ஆசிரியர், மாணவர்
உறவில் விரிசல் ஏற்படுகிறது.
இதை களையும் நோக்கில், இதுபோன்ற பயிற்சிகளை
நடத்த பல்கலைக்கழக மான்யக் குழு, அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும்
சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்த பயிற்சியின் மூலம், ஆசிரியர்களின் திறன்
மேலும் மேம்படும். ஆசிரியர் கல்வி கல்லூரி ஆலோசனைக்குழு கூட்டத்தில்
எடுக்கப்பட்ட முடிவின் படி, ஆட்சி மன்றக்குழுவின் ஒப்புதலை பெற்று, சென்னை
பல்கலைக் கழகம் நடப்புக் கல்வியாண்டில், இந்த பயிற்சியை துவங்க திட்டமிட்டு
உள்ளது. இதற்கான அறிவிப்புகள், விரைவில் வெளியாகும்.இவ்வாறு திருவாசகம்
கூறினார்.
No comments:
Post a Comment