Pages

Saturday, February 28, 2015

மத்திய பட்ஜெட்- 2015

-மாத ஊதியம் பெறுவோருக்கான பயண அலவன்ஸ் உச்சவரம்பு ரூ. 800ல் இருந்து ரூ. 1,600 ஆக அதகரிப்பு

-மருத்துவ காப்பீட்டு பிரீமியத்துக்கான வரி விலக்கு ரூ. 15,000ல் இருந்து 25,000 ஆக அதிகரிப்பு


-தூய்மை இந்தியா திட்டத்துக்கு நிதி வழங்கும் நிறுவனங்களுக்கு முழு வரிவிலக்கு

பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் புதிய நடைமுறை: தேர்வுத்துறை உத்தரவு

பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத் தேர்வில் மாற்றங்களை செய்து தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: இத்தேர்வில் முதல் பிரிவில் 75 ஒரு மதிப்பெண் கேள்விகள் இடம் பெறும். கடந்த ஆண்டு வரை இதற்கான விடையை ஓ.எம்.ஆர்., தாளில், வட்டமிட்ட பகுதியை பென்சிலால் கருமைப்படுத்தினர்.

டி.இ.ஓ.,க்கள் பதவி உயர்வுக்கு இருவகை பரிந்துரை பட்டியல்: கல்வித் துறையில் குழப்பம்

தமிழகத்தில் மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,க்கள்) பதவி உயர்வுக்கு இரண்டு வகை பணி மூப்பு பட்டியல்கள் பரிந்துரைக்கப்படுவதால் பதவி உயர்வு வழங்குவதில் குழப்பம் நீடிக்கிறது. டி.இ.ஓ.,க்கள் பணிமூப்பு பட்டியல் ஜனவரியில் வெளியிடப்பட்டு, பிப்.,க்குள் பதவி உயர்வு அளிக்கப்படும். இந்த முறை பின்பற்றப்பட்டால் தான் பொதுத் தேர்வுகளை கண்காணிக்க முடியும். ஆனால் சில ஆண்டுகளாக செப்டம்பரில் பதவி உயர்வு வழங்கப்படுவதால் தேர்வுகள் முடிந்து தேர்ச்சி பாதிப்பதாக சர்ச்சை எழுகிறது.

பிளஸ் 2 தேர்வு பணியில் குளறுபடி: முதுகலை ஆசிரியர்கள் எதிர்ப்பு

பிளஸ் 2 தேர்வு மார்ச் 5 ல் துவங்குகிறது. முதன்மை கண்காணிப்பாளர், துறைஅலுவலர், பறக்கும்படையினர், அறை கண்காணிப்பாளர் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுவருகிறது. 

மரத்தடி பள்ளிக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்: மழைக்கால சோகத்திற்கு தீர்வு

கோவை மாவட்டம், முத்துக்கவுண்டனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், மரத்தடியில் பிளஸ் 2 வகுப்பு நடக்கும் அவலத்தை கண்டு வருந்திய முன்னாள் மாணவர்கள், 3 லட்சம் ரூபாய் செலவில், மூன்று வகுப்பறைகளை கட்டிக்கொடுத்துள்ளனர்.

652 கணினி பயிற்றுநர் நியமனம்: சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கியது

தமிழகம் முழுவதும் 652 கணினி பயிற்றுநர்களை நியமிப்பதற்கானசான்றிதழ் சரிபார்ப்பு வெள்ளிக்கிழமை தொடங்கியது.வேலூர், விழுப்புரம், சேலம், மதுரை ஆகிய 4 இடங்களில் வரும் திங்கள்கிழமை (மார்ச் 2) வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.

Friday, February 27, 2015

பள்ளிக் கல்வித் துறை ஆய்வுக் கூட்டம்

மார்ச் 5ம் தேதி ப்ளஸ் டூ பொதுத் தேர்வுகளும், மார்ச் 19ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் தொடங்கவுள்ள நிலையில், அவற்றுக்கான ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன், அரசு ஆலோசகர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், கே.ராமானுஜம்,

மாணவர்களை அரசு பள்ளிகள் 'உற்பத்தி' செய்வது எப்படி? கை.இளங்கோவன்

வருடந்தோறும் மே மாதம் முதல் வாரம் என்றால் தேர்வு முடிவுகள் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகிவிடுகிறது. தேர்ச்சி முடிவுகளில் எந்தெந்த பாடங்களில் எத்தனை பேர் நூற்றுக்கு நூறு, எத்தனை பேர் மாநிலத்தில் முதலிடம், எத்தனை பேர் மாவட்ட முதலிடம் என்ற செய்திகள் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும். அடுத்த நாள் செய்தித்தாள்கள் முழுவதும் தனியார் பள்ளி விளம்பரங்களும், அவர்கள் நிகழத்திய சாதனைகளும் (?) நிறைந்திருக்கும்.

பள்ளிக்கல்வி - 122 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு மார்ச் 1ம் தேதி நடைபெறவுள்ளது

தமிழகத்தில் காலியாக உள்ள 122 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வு கல்ந்தாய்வு மார்ச்1ம் தேதி நடைபெறவுள்ளது. இக்கலந்தாய்வில் முன்னுரிமை பட்டியல் வரிசை எண்.685 வரை உள்ள ஆசிரியர்கள் கலந்து கொள்ளலாம்

மத்திய அரசு ஊழியர்களுக்கு திறமைக்கு ஏற்ப சம்பள உயர்வு

பொது பட்ஜெட்டில் நாளை அறிவிப்பு மத்திய அரசின் பொது பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. இதில் பல்வேறு சலுகைகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வருமான வரி சலுகை, வேலை வாய்ப்பு திட்டங்கள், வேளாண்மைத்துறைக்கு சலுகைகள் போன்றவையும் எதிர்பார்க்கப்படுகின்றன.

கல்வி அதிகாரிகளுக்கு திடீர் தேர்வு

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுப் பணிகள் தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு திடீரென தேர்வு நடத்தப்பட்டது.

பொதுத்தேர்வை கண்காணிக்க 1 லட்சம் பேர் நியமனம் : பள்ளி கல்வித்துறை செயலாளர் தகவல்

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகள் நேர்மையாகவும், முறைகேடு நடக்காமல் இருக்கவும் கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக கண்காணிப்பு அலுவலர்கள், பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 1 லட்சம் பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிளஸ் 2 தேர்வு மையங்களில் செல்லிடப்பேசிகளைப் பயன்படுத்தக் கூடாது: அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு மையங்களில் செல்லிடப்பேசிகளைப் பயன்படுத்தக் கூடாது என தேர்வு அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

பிளஸ் 2 விடைத்தாள்களை கையாள்வதில் புதிய முறை

“பிளஸ் 2 தேர்வில் விடைத்தாளில் எழுதாத பக்கங்களில் மையால் அடித்த பின் 'என்னால் அடிக்கப்பட்டது' என மாணவரே எழுதுவது அவசியம்,” என பள்ளிக்கல்வி இணை இயக்குனர் செல்வராஜ் தெரிவித்தார்.

பிளஸ் 2 விடைத்தாள் மையங்கள் பாதுகாப்பு:குழப்பத்தில் கல்வி அதிகாரிகள்

பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் மற்றும் வினாத்தாள் 'நோடல்' மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்புகள் குறித்து உயர் கல்வி அதிகாரிகள் பிறப்பிக்கும் உத்தரவுகள் குழப்பத்தை ஏற்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. மார்ச் 5ல் பிளஸ் 2 தேர்வு துவங்கவுள்ளது. தேர்வுகள் நடத்துவது தொடர்பாக சில நாட்களுக்கு முன் தேர்வுத் துறை ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

வேலை செய்யாத அரசு ஊழியர்களுக்கு 'செக்!'

அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பணித் திறனுக்கேற்ப, ஊதிய உயர்வு வழங்க, ஏழாவது சம்பள கமிஷன் முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக, சம்பளம் வாங்கிக் கொண்டு, வேலை செய்யாமல் இருக்கும் ஊழியர்களுக்கு மத்திய அரசு, 'செக்' வைத்துள்ளது. பா.ஜ., கட்சியின் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு, தனது இரண்டாவது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது.

பட்ஜெட்டில் என்னென்ன தேவை? இயக்குனர்களிடம் கருத்து கேட்பு

தமிழக பட்ஜெட்டில், பள்ளிக்கல்வித் துறைக்குத் தேவையான திட்டங்கள் குறித்து, துறை இயக்குனர்களிடம், அரசு கருத்து கேட்டுள்ளது.ஆண்டுதோறும், பட்ஜெட் கூட்டத்தொடர் கூடும் முன், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் நிதித் துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறை செயலகம் சார்பில், கருத்துரு கேட்கப்படும். 

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகளை சிறப்பாக நடத்தி முடியுங்கள்: அமைச்சர் வேண்டுகோள்

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகளை சிறப்பாக நடத்தி முடிக்கும்படிஅதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Thursday, February 26, 2015

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின் 5% மதிப்பெண் தளர்வு திரும்ப கிடைக்குமா?

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின் 5% மதிப்பெண் தளர்வு மீண்டும் கிடைப்பது இல்லை ஏனெனில் உச்சநீதிமன்றத்தில் 5%மதிப்பெண் தளர்வு திரும்ப கிடைக்க  யாரும் எந்த வழக்கும்  தொடுக்கவில்லை....

உச்சநீதிமன்ற வழக்குகள்:

1)தமிழகத்தில் ஆசிரியர் பணிநியமனத்தில் தகுதிகாண் முறை என்னும் வெய்ட்டேஜ் முறை கடைப்பிடிக்கப்படுகிறது அதனை ரத்து செய்ய வேண்டும் என 3 குழுவினர் வழக்கு தொடுத்துள்ளனர்....

சீரழியும் ஆரம்ப கல்வி: மேல்நிலை வகுப்பில் மாணவர்களோடு போராடும் ஆசிரியர்கள்!! - டி.கார்த்திகேயன்


மத்திய அரசும், மாநில அரசும் கல்விக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி பலகோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. இதில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ஆரம்ப கல்வியாக இருந்து வருகிறது. ஒருகாலத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் ஆரம்பப்பள்ளி மற்றும் துவக்கப்பள்ளிகள் இருந்தன. இன்றைக்கு பள்ளிகள் இல்லாத குக்கிராமங்களே இல்லை என்ற நிலை உள்ளது. ஒரு சில ஆசிரியர்கள் ஏதோ கடமைக்காக வேலைக்கு வந்தோம். மாதம் பிறந்தால் சம்பளம் பெற்றுக் கொள்கிறோம் என்ற நினைப்புடன் தான் வேலைக்கு வருகின்றனர். அரசு கட்டாயக்கல்வி திட்டம் கொண்டு வந்தும், ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி அளித்தும், தரமான மாணவர்களை உருவாக்குவதில் அக்கறை காட்டுவதில்லை.

பள்ளிகள் அங்கீகாரம் அறிய இணையதளம் :பெற்றோர் வசதிக்காக துவக்கியது கல்வித்துறை

தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளிகளின் அங்கீகாரம் மற்றும் இதர விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் முதன் முறையாக, tnmatric.com என்ற இணையதளத்தை அறிமுகம் செய்ய, பள்ளிக் கல்வித் துறை முன்னோட்டம் நடத்தி வருகிறது.

அடிப்படை வசதிகள் இருந்தும் மாநகராட்சி பள்ளிகளில் குறையுது மாணவர் சேர்க்கை: தேவை ஆங்கிலத்தில் சிறப்புக் கவனம்!!

மதுரை மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இருந்தும் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. இதனை அதிகரிக்க மாநகராட்சி போதிய கவனம் செலுத்தாமல் சுணக்கம் காட்டி வருகிறது. ஆங்கிலம் கற்பிப்பதில் சிறப்புக் கவனம் செலுத்தி, தனியார் பள்ளிகளைப் போல பஸ், வேன் வசதிகளை ஏற்படுத்தி மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க மாநகராட்சி தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகம் முழுவதும் மார்ச் 8-ல் பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் - தி இந்து

சென்னையில் மார்ச் 8-ம் தேதி திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும் என்று ஆசிரியர் அமைப்பு தெரிவித்துள்ளது.

சென்னையில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டு நடவடிக்கைக் குழு நிர்வாகிகள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தனர்.

அரசு பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட நிதி ஒதுக்கீடு

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் நிகழாண்டு பள்ளி இறுதித் தேர்வு முடிவதற்குள், ஆண்டு விழா கொண்டாட அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

பயணிகள் கட்டணம் உயரவில்லை; ரயில்வே பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

2015 - 16 ஆம் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை நாடாளுமன்ற மக்களவையில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தற்போது தாக்கல் செய்து, புதிய ரயில், பயணிகளுக்கான புதிய வசதிகள், திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு உரையாற்றி வருகிறார்.

‘சீட்’ ஒதுக்க லஞ்சம் கேட்ட கல்வி அதிகாரி கைது

கல்வி உரிமை சட்டத்தின் கீழ், ’சீட்’ ஒதுக்க லஞ்சம் கேட்ட, பிளாக் கல்வி அதிகாரியை, லோக் ஆயுக்தா போலீசார் கைது செய்தனர்.

முதல்வரை சந்திக்க மறுப்பு; ஏமாற்றத்துடன் திரும்பிய ‘ஜாக்டோ’ ஆசிரியர் குழு

பள்ளி ஆசிரியர்களின், 15 ஆண்டுகால கோரிக்கை குறித்து, பேச்சு நடத்த அழைக்கப்பட்ட, ’ஜாக்டோ’ ஆசிரியர் குழு, முதல்வரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், நான்கு மணி நேரம் காத்திருந்த ஆசிரியர் குழுவினர், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

உதவிப் பேராசிரியர்களின் கல்வித் தகுதியை ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் நியமிக்கப்பட்ட, உ கல்வித் தகுதியை ஆய்வு செய்யும் பணியை, ஆறு மாதங்களில் முடிக்கும்படி, பல்கலைக்கழக மானியக் குழுவான - யு.ஜி.சி.,க்கு, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நெருங்குகிறது பொதுத்தேர்வுகள்; பள்ளிகளில் சிறப்பு பயிற்சிகள் துவக்கம்

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் மார்ச் 1ம் தேதியும், பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்ச் 2ம் தேதியும் துவங்குகின்றன. கோவை மாவட்டத்தில் செயல்படும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் சிறப்பு பயிற்சிகள் நடந்து வருகின்றன.

மொழிப்பாடத் தேர்வில் முதல் இரு பக்கங்கள் எழுதப்பட கூடாது

வரும் மார்ச், 5ம் தேதியில் இருந்து, பிளஸ் 2 தேர்வும், மார்ச், 19ம் தேதியில் இருந்து, பத்தாம் வகுப்பு தேர்வும் நடக்கிறது. இதையொட்டி, மாணவ, மாணவியரும், ஆசிரியர்களும் கடைபிடிக்க வேண்டிய செயல்பாடுகள் குறித்து, தேர்வுத்துறை, அவ்வப்போது சுற்றறிக்கை அனுப்புகிறது. அதன்படி சமீபத்திய சுற்றறிக்கை:

மொபைல் போன் எண்ணை மாற்றாமல் பயன்படுத்தும் வசதி நாடு முழுவதும் அமல்

மொபைல் போன் எண்ணை மாற்றாமல், தொலை தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களை மாற்றிக் கொள்ளும் வசதி, வரும் மே மாதம் முதல், நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. வாடிக்கையாளர்கள் வசதிக்கேற்ப, மொபைல் போன் எண்களை மாற்றாமல், சேவை வழங்கும் நிறுவனங்களை மாற்றிக் கொள்ளும் வசதி, சில ஆண்டுகளுக்கு முன் அமலுக்கு வந்தது.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியீடு

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 1,700-க்கும் அதிகமானோர் அடங்கிய தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் புதன்கிழமை வெளியிட்டது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மார்ச் 8-இல் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் மார்ச் 8-இல் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

Wednesday, February 25, 2015

தேர்வு வாரிய ஊழல் வழக்கு: மத்திய பிரதேச கவர்னர் ராஜினாமா

மத்திய பிரதேசத்தில் வனக்காவலர் பணிக்கு ஆட்களை தேர்ந்தெடுக்க தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த தேர்வு முறை கேட்டில் மத்திய பிரதேச மாநில கவர்னர் ராம்நரேஷ் யாதவும் (வயது 86) நேரடியாக சம்பந்தப்பட்டுள்ள அதிர்ச்சி தகவலை வெளியிட்ட சிறப்பு அதிரடிப் படையினர் அவர் மீது முதல் தகவல் அறிக்கையையும் (எப்ஐஆர்) பதிவு செய்தனர். 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான 2 நாளில் தற்காலிக மதிப்பெண் சான்று வழங்க ஏற்பாடு

தற்காலிக மதிப்பெண் சான்று 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான 2 நாளில் தற்காலிக மதிப்பெண் சான்று வழங்க ஏற்பாடு.மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு காலதாமதத்தை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை.தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும்: பள்ளிக்கல்வித்துறை செயலர்.

இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ரூபாய்.750/- தனி ஊதியம் பெறுவது தொடர்பான தணிக்கை தடை நீக்கம்

இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ரூபாய்.750/- தனி ஊதியம் பெறுவது தொடர்பான தணிக்கை தடை எவருக்கேனும் இருப்பின் அரசாணை எண்.23 நிதித் துறை நாள்.12.01.2011ன்  படி அரசு கடித எண்.8764/சி.எம்.பி.சி/2012, நாள்.18.04.12ன் படி தணிக்கை தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறையை சார்ந்த மண்டல கணக்கு அலுவலர், கோயம்புத்தூர் அவர்களால்

சற்றுமுன்: ஜாக்டோ பொறுப்பாளர்கள் அரசுடனான பேச்சுவார்த்தையில் முரண்பாடு

இன்று காலை முதல் தலைமை செயலகத்தில் முதல்வருடனான சந்திப்புக்கு காத்திருந்த ஜாக்டோ பொறுப்பாளர்கள் பேச்சுவார்த்தையில் சுனுக்கும் ஏற்பட்டுள்ளது. ஜாக்டோ அமைப்பில் 16 பேர் கொண்ட குழு பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டதாகவும், இறுதியில் ஜாக்டோ அமைப்பில் உள்ள முதல் 3 பேர் கொண்ட குழு முதல்வரை சந்திக்க அழைக்கப்பட்டதாகவும், ஆனால் அந்த 3பேர் கொண்ட குழுவும் முதல்வரை சந்திப்பதற்கான அனுமதி (Appointment) பெறவில்லையெனவும்,

ஜாக்டோ பொறுப்பாளர்கள் 16 பேர் மாண்புமிகு முதல்வர் அவர்களை சந்திக்க முதல்வர் ஓய்வு அறையில் காத்திருக்கின்றனர்.

ஜாக்டோ பொறுப்பாளர்கள் தொடக்கக் கல்வித்துறை சார்பில் 7 பேரும், பள்ளிக்கல்வித்துறையை சார்ந்த சங்கங்கள் சார்பில் 8 பேரும் ஆக மொத்தம் 16 பேர் பேச்சுவார்த்தை நடத்த CM'S Waiting Hallல் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் அனைவருடைய செல்பேசிகளை அதிகாரிகளிடத்தில்

பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளும் தடுப்பு முறைகளும்: ஓர் எளிய வழிகாட்டுதல்

உலகையே அச்சுறுத்தி வரும் பன்றிக்காய்ச்சல் 1920 - 1930-ம் ஆண்டுகளில் பன்றிகளிடம் காணப்பட்டது. ஆரம்பத்தில் பன்றிகளிடம் இருந்து பன்றிகளுக்கு காய்ச்சல் பரவி வந்தது. நாளடைவில் பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவத் தொடங்கியது. அதன்பின் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி வருகிறது. இதனால் இந்தக் காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது.

ஆங்கிலத்திலும் அள்ளலாம் 100க்கு 100 !!

ஆங்கிலம் தவிர்த்த மற்ற பாடங்களில் மதிப்பெண்களை அள்ளும் மாணவர்களில் சிலர்கூட ஆங்கிலத்தில் அதிக மதிப்பெண்களைப் பெறத் தவறுவார்கள். சிலர் ஆங்கிலம் என்றாலே பெரிதாகப் பயப்படுவார்கள். ஆனால், இது போன்ற பயம் எதுவும் எஸ்.எஸ்.எல்.சி. ஆங்கிலத் தாளுக்குத் தேவையில்லை.

வருமா... வராதா...? : மத்திய அரசின் கல்வி உதவித் தொகை... : வருவாய் வழி தேர்வு எழுதிய மாணவர்கள் ஏக்கம்

கடந்த ஆண்டு நடைபெற்ற, தேசிய வருவாய் வழி தேர்வில், தேர்ச்சியடைந்தவர்களில் பெரும்பாலான மாணவர்களுக்கு, மத்திய அரசின் கல்வி உதவித்தொகை இன்று வரை கிடைக்கவில்லை. உதவித்தொகை எப்போது கிடைக்கும் என, தெரியாமல், வங்கிக்கும், கல்வி அலுவலகங்களுக்கும் மாணவர்களின் பெற்றோர் நடையாய் நடந்து கொண்டிருக்கின்றனர்.

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு முறைகேடுகளை தடுப்பது எப்படி? அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுரை

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னையில் கலெக்டர் சுந்தரவல்லி தலைமையில் நடந்தது. அப்போது, தேர்வு மையங்களுக்கு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதி, தடையில்லா மின்சாரம் வழங்குவது தொடர்பாக கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் 'தக்கல்' முறையில் விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள், இன்றும், நாளையும் 'தக்கல்' முறையில் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விருப்பமுள்ள தனித்தேர்வர்கள் சிலர், பல்வேறு காரணங்களால் அறிவிக்கப்பட்ட தேதிக்குள் விண்ணப்பிக்க இயலாமல் போயிருக்கலாம். அவர்களின் நலன் கருதி, 'தக்கல்' முறை எனப்படும் சிறப்பு அனுமதி முறையில் விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் வழியில் படித்த பெண்ணுக்கு ஆசிரியர் பணி வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவு

தேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்த முருகேஸ்வரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நான், பிஏ, எம்ஏ மற்றும் பிஎட் தமிழ் வழியில் படித்துள்ளேன். பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணிக்கான 2,881 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை 9.5.2013ல் டிஆர்பி வெளியிட்டது.

TPF இருந்து முன்பணம் வேண்டி விண்ணப்பித்தால் எத்தனை நாட்களில் வழங்க வேண்டும்?

ஆசிரியர் வருங்கால வைப்புநிதியில் (TPF) இருந்து முன்பணம் வேண்டி விண்ணப்பித்தால் எத்தனை நாட்களில் முன்பணம் வழங்க வேண்டும்?அரசாணை நிலை எண்.687, பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை நாள்.16.7.82ன்படி ஆசிரியர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து முன்பணம்

முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம்: டிஆர்பி சான்றிதழ் சரிபார்ப்பில் குளறுபடி

முதுகலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் குளறுபடி நடந்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் படித்த முருகேஸ்வரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு இவ்வாறு கூறியுள்ளார்.

மீண்டும் ஒரு பரபரப்பு சம்பவம் : மாணவனை கண்டித்த ஆசிரியர் மீது தாக்குதல் - கேட்கும் திறனை ஆசிரியர் இழந்தார்


பள்ளி மாணவனை கண்டித்த உடற்கல்வி ஆசிரியரை, தந்தை, உறவினர்கள் சரமாரியாக தாக்கியதால், அவரது காது கிழிந்தது. நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து சக ஆசிரியர்கள், காவல் நிலை யத்தை முற்றுகையிட்டனர்.

Tuesday, February 24, 2015

அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டத்துக்கு சேவை வரி வசூல்: பொதுமக்கள் அதிருப்தி

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தை (எல்.ஐ.சி.) தொடர்ந்து, அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டத்துக்கும் ஜனவரி மாதம் முதல் சேவை வரி வசூல் செய்யப்படுவது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அஞ்சல் துறையில், கடந்த 1884-ஆம் ஆண்டு முதல் அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராமப் புறங்களிலும், இந்தத் திட்டம் 1995-ஆம் ஆண்டு "கிராமப்புற அஞ்சலக ஆயுள் காப்பீடு' என்ற பெயரில் விரிவுப்படுத்தப்பட்டது.

ஆசிரியர்கள் ஆர்வமுடன் பங்கேற்ற ‘சி-டெட்’ தேர்வு

மத்திய அரசு பள்ளிகளில், ஆசிரியராக சேர நடத்தப்படும் தகுதித் தேர்வான, ’சி - டெட்’ தேர்வு நேற்று நடந்தது. தமிழகத்தில், பல ஆயிரம் ஆசிரியர்கள் இத்தேர்வில் பங்கேற்றனர்.

ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆர்பாட்டம்

15 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அடுத்த மாதம் 8ம் தேதி ஆர்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அறிவித்துள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கணினி ஆசிரியர் நியமனத்தில் அதிரடி: சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு

கணினி ஆசிரியர் நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதியை, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., அறிவித்து உள்ளது. அரசு பள்ளிகளில் பணி நீக்கம் செய்யப்பட்ட, 652 கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., கடந்த ஆண்டு நடவடிக்கை எடுத்தது.

தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் பாதுகாப்பு கேள்விக்குறி:அரசாணை காணாமல் 30 ஆண்டுகளாக தேடும் அவலம்: ஆபத்தில் அரசு ஆவணங்கள்

டில்லியில், பெட்ரோலிய அமைச்சகத்தில், ரகசிய ஆவணங்கள் காணாமல் போன நிலையில், தமிழகத்திலும், ஏற்கனவே ஆவணங்கள் காணாமல் போய், 30 ஆண்டுகளாக தேடப்பட்டு வருவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஆண்டு முழுவதும் ஆசிரியர்களே இல்லை - ஆனால் பிளஸ் 2 தேர்வெழுதவுள்ள மாணவர்கள்

இந்த கல்வி ஆண்டு முழுவதும் பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லாமல் எஸ்.புதுார் அரசுமேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுத உள்ளனர்.

10ம் வகுப்பு, பிளஸ் 2 விடைத்தாள் திருத்த நிரந்தர மையங்கள் அமைக்க கோரிக்கை

மதுரை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு நிரந்தர மையங்கள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உபரி ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள் விரைவில் பணியிட மாற்றம்

மாநிலம் முழுவதும், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள் பிற ஒன்றியங்களுக்கும், மாவட்டங்களுக்கும், விரைவில் பணியிட மாற்றம் செய்யப்படவுள்ளனர்.

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மூன்று நாட்கள் யோகா பயிற்சி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மூன்று நாட்கள் யோகா பயிற்சி மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்தது.

தத்கல் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு: ஹால்டிக்கெட் தயார்

தத்கல் திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், இன்றும், நாளையும் (பிப்ரவரி 24, 25), ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

வித்தியாசமான சில மாணவர்கள்...

சில மாணவர்கள் வித்தியாசமான பழக்கங்களைக் கொண்டிருப்பார்கள். அவர்கள், உங்களுடைய வகுப்புத் தோழர்களாகவோ அல்லது பள்ளித் தோழர்களாகவோ அல்லது உங்களின் அருகாமையில் வசிப்பவராகவோ அல்லது உங்களுக்கு அறிமுகமானவராகவோ இருக்கலாம்.

ஆடம்பரப் பள்ளிகள் சிறந்த மாணவர்களை உருவாக்குகிறதா?

நமது பள்ளிகள் குறித்த பார்வையை உருவாக்குவதில் சில அடிப்படையான உளவியல் முறைகள் பின்பற்றப்படுகின்றன. சமூகம் சார்ந்த உளவியல் இதில் முக்கிய பங்குவகிக்கிறது. பொது புத்தி என்ற பதத்தின் அடிப்படையில் அதிக விளம்பரம் செய்யற , பணக்காரர்கள் படிக்க வைக்கும் பள்ளியில் தனது பிள்ளை சேர்க்க வேண்டும் என்ற மனரீதியான ஆசை, அதற்கு ஏற்றார் போல இந்த நவின பள்ளிகள் தேவையான பகட்டு வேலைகளை செய்து விடுகிறது. அதுகுறித்த கிழ்கண்டபதிவுவை படியுங்கள்

விடைத்தாளை கையாளும் முறை பொதுத்தேர்வு மாணவர்களுக்கு அறிவுரை

பொதுத்தேர்வின்போது அறை கண்காணிப்பாளர்கள் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்புகளை தெரிவிக்க வேண்டும் என தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன் விவரம்:
* தேர்வு துவங்குவதற்கு முன் அன்றைய தேர்வுக்குரிய முதன்மை விடைத்தாளின் பக்க எண்ணிக்கையை அறிவித்து, மாணவர்கள் தமக்கு வழங்கப்பட்டுள்ள விடைத்தாளின் பக்கங்களின் எண்ணிக்கையை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின்மாநில, மாவட்ட நிர்வாகிகள்இயக்குனர்களுடன் சந்திப்பு

தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் இன்று (23.02.2015) மதிப்புமிகு. பள்ளி கல்வித் துறை செயலர், இயக்குநர், SSA மாநிலத் திட்ட இயக்குநர் மற்றும் இணை இயக்குநர் ஆகியோர்களை மாநிலத் தலைவர் கே.சம்பத் தலைமையில் சந்தித்து, கோரிக்கைகளை அளித்தனர். மாநிலப் பொதுச்செயலாளர் ஜெ.ரவி , மாநிலப் பொருளாளர் கி.கார்த்திகேசன், மாநில இணைச் செயலாளர் அ.பாலாஜி, மாநில செற்குழு உறுப்பினர் சி.ஜான்கென்னடி, சென்னை மாவட்ட தலைவர் சி.முருகன், திருவள்ளூர் மாவட்ட தலைவர் D.மீகாவேல், திருவள்ளூர் மாவட்ட துணைச்செயலாளர் எஸ்.இராமசாமி 

தனியாரிடம் ஒப்படைக்க விடமாட்டோம்; அமைச்சர்

சென்னை மாநகராட்சி பள்ளிகளை 

சென்னை மாநகராட்சி பள்ளிகளைத் தனியாரிடம் ஒப்படைக்க மாட்டோம் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார். சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் உறுப்பினர் அ.சவுந்தரராஜன் பேசும்போது, சென்னை மாநகராட்சி பள்ளிகள் மூடப்படக் கூடிய நிலை இருப்பதாகக் கூறினார்.

கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய ஓஎம் ஆர் சீட்


பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வுக்கு, புகைப்படத்துடன் கூடிய, ஆப்டிக்கல் மார்க் ரீடர் - ஓ.எம்.ஆர்., விடைத்தாள் வழங்கப்பட உள்ளது. இதை பயன்படுத்தும் முறை குறித்து, தேர்வுத்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. பிளஸ் 2 தேர்வு, வரும் மார்ச் 5ம் தேதி துவங்குகிறது. 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தேர்வை எழுதுகின்றனர்.

வங்கி ஊழியர் மற்றும் அதிகாரிகளுக்கு 15% ஊதிய உயர்வு. இரண்டு மற்றும் நான் காம் சனிக்கிழமை விடுமுறை


ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் உடன்பாடு ஏற்பட்டதால், நாளை முதல் நான்கு நாட்களுக்கு அறிவிக்கப்பட்ட, தொடர் வேலை நிறுத்தத்தை, வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வாபஸ் பெற்றது.

Monday, February 23, 2015

பி.எட்., கல்வியியல் படிப்பு காலம் இந்த ஆண்டு உயர்த்தப்படாது: அமைச்சர் பழனியப்பன்

சட்டசபையில் இன்று உறுப்பினர்கள் க.அன்பழகன், டில்லிபாபு ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து உயர்கல்வி துறை அமைச்சர் பழனியப்பன் கூறியதாவது: தமிழ்நாட்டில் 7 அரசு கல்வியியல் கல்லூரி உள்பட மொத்தம் 689 கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. ஓராண்டு படிப்பாக இருப்பதை 2 ஆண்டு படிப்பாக நீட்டிக்க தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் ஒரு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த ஆண்டு முதல் அனைத்து கல்வியியல் கல்லூரிகளிலும் 2 வருட படிப்பாக மாற்றி அமைக்க சொல்லியிருந்தது. இதை அமுல்படுத்த கட்டிட வசதி, கூடுதல் ஆசிரியர்கள் தேவைப்படும் நிலை உள்ளது.

இந்தியாவில் கல்வித் துறையின் நிலை!

இந்தியாவில் பள்ளிக் கல்வியின் பரிதாபகரமான நிலையை அண்மையில் வெளியிடப்பட்ட "கல்வித் துறையின் நிலை குறித்த ஆண்டறிக்கை 2014' படம்பிடித்துக் காட்டுகிறது. மூன்றாம் வகுப்பில் 75 சதவீதத்தினர், 5-ஆம் வகுப்பில் 50 சதவீதத்தினர், 8-ஆம் வகுப்பில் 25 சதவீதத்தினர் 2-ஆம் வகுப்புப் பாடத்தை சரியாகப் படிக்கக் கூட முடியவில்லை என அந்த அறிக்கை கூறுகிறது.

மாநிலம் தழுவிய போராட்டம்:ஜேக்டோ கூட்டமைப்பு அறிவிப்பு

“மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்காவிடில் மாநில தழுவிய போராட்டம் நடைபெறும், என ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு (ஜேக்டோ) வேண்டுகோள் விடுத்துள்ளது.திண்டுக்கல்லில் 28 ஆசிரியர் சங்கங்கள் ஒன்றிணைந்த போராட்ட ஆயத்த மாநாடு நடந்தது.

வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்கிறது? மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும்

தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பினை ரூ.3 லட்சமாக உயர்த்தி மத்திய பட்ஜெட்டில் நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.பட்ஜெட்தோறும் எதிர்பார்ப்புஒவ்வொரு ஆண்டும், பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்றால், மாத சம்பளம் பெறுவோரின் எதிர்பார்ப்பு, தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்படுமா என்பதாக உள்ளது. 

Direct Recruitment of Computer Instructor - Certificate Verification Details


DIRECT RECRUITMENT OF COMPUTER INSTRUCTOR
In pursuant to the announcement dated 19.01.2014 the Certificate Verification process for selection of 652 Computer Instructors that has been kept in abeyance was published in the TRB website.  Now the directions has been issued by the Hon’ble Supreme Court of India on 10.02.2015 to complete the process of Direct Recruitment of 652 Computer Instructors. 
As per the directions of the Hon’ble Supreme Court of India the Teachers Recruitment Board has announced the re-scheduled dates of Certificate Verification from 27.02.2015 to 02.03.2015

பேட்டரி டூவீலர் தயாரிப்பில் மோசடி; பொறியியல் மாணவர் மீது வழக்கு பதிவு

சென்னை, கொடுங்கையூரை சேர்ந்தவர் அனூப் நிஷாந்த். இவர், சிவகங்கை எஸ்.பி., அஷ்வின் கோட்னீசிடம் அளித்த புகார்: சென்னையில், ’மேக்ஸ் ஸ்பீடு டிசைன்ஸ்’ நிறுவனம் மூலம் புகை வெளியிடாத டூவீலர் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். அப்போது மானாமதுரையைச் சேர்ந்த இன்ஜினியரிங் மாணவர் மணிகண்டன் அறிமுகமானார்; பகுதி நேர பணியில் சேர்ந்தார்.

பெருகும் வன்முறையிலிருந்து உங்கள் குழந்தைகளை காப்பாற்றிக் கொள்ளுங்கள் !!!

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தில் ஆறாம் வகுப்பு மாணவி படுகொலை செய்யப்பட்டதற்குக் காரணம் என்ன? அவள் பெண் குழந்தை என்பதைத் தவிர அவள் மேல் இருந்த தவறென்ன? வெறும் 1,500 ரூபாய் பெறுமானமுள்ள கால் கொலுசைத் திருடுவதற்காக ஓர் உயிரைப் பறிக்கும் துணிச்சல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எப்படி வரும்?

எது முக்கியம்? தேர்வு காலம்

தற்போது தேர்வு காலம் என்பதால் பெரும்பாலான வீடுகளில் படிப்பு சத்தம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த சமயத்தில் படிப்பை சிதைக்கும் அமைதி ஆயுதமாக வந்துவிட்டது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி. நம்மை மனத்தளவில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் கிரிக்கெட் விளையாட்டின் உலகப் போட்டி என்பதால், தேர்வுக்காக படிப்பவர்களின் மனது கண்டிப்பாக அலைபாயும். ஆனாலும் `கிரிக்கெட்-ஐ’ நாம் நெருங்காமல் இருப்பதற்கு சில ஐடியாக்கள்…

வருமான வரி கணக்கிட இன்கம் டாக்ஸ் அசிஸ்டென்ட்!

பலருக்கும் வருமான வரி என்றாலே வேப்பங் காய்தான். ஆனால், வருமான வரியை வருட ஆரம்பம் முதலே எப்படியெல்லாம் திட்டமிடலாம் என்பதை அழகாக எடுத்துச் சொல்கிறது இந்த ஆப்ஸ். நமது சேமிப்புக் கணக்குத் தொடர்பான விவரங்களையும், பிஎஃப் தொகை பங்களிப்பு மற்ற முதலீடுகளின் பங்களிப்பு என அனைத்துக்கும் ஏற்றவாறு கணக்கிட்டு நம் வருமான வரியை எப்படித் திட்டமிட வேன்டும் என்பதையும் எக்ஸ்எல் படிவங்களாக தந்துவிடுகிறது.

எங்கெங்கும் இணைய வசதி: கூகுளின் பிரமாண்ட திட்டம்!

உலக அளவில் இணைய வசதி எட்டாதவர்கள், 5 பில்லியன் பேர் இருக்கின்றனர். இதற்கு, பல இடங்களில் இணைய சமிக்ஞைகள் எட்ட முடியாமல் இருப்பது தான் காரணம். எனவே, வருமானத்திற்கு இணையத்தையே நம்பியிருக்கும் தேடு பொறி இயந்திர நிறுவனமான கூகுள், எல்லோருக்கும் இணையம் எட்ட வேண்டும் என்பதற்காக, 'புராஜக்ட் லூன்' என்ற திட்டத்தை, 2013ல் அறிவித்தது.

மாணவ-மாணவிகள் தேர்வை ஒரு கொண்டாட்டமாக கருதி எதிர்கொள்ளுங்கள் மாணவர்களுக்கு மோடி அறிவுரை

பிரதமர் நரேந்திரமோடி ‘மன் கி பாத்’ என்ற தலைப்பில் வானொலியில் மாதம் மாதம் தொடர்ந்து பேசி வருகிறார். வானொலியில் அவர் மாணவர்களுக்கு சில ஆலோசனைகள் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது: மாணவ-மாணவிகளே நீங்கள் உங்களை தேர்வுக்கு தயார் செய்து கொள்ளும் இந்நேரத்தில் நானும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.

தமிழக அளவில் சிறந்த கணினி வழிக் கற்பித்தல் விருது அரசுப்பள்ளிக்கு எவ்வாறு கிடைத்தது? - கருணை தாஸ்

தமிழகத்தில் கணினி வழிக் கற்பித்தலை சிறப்பாக செய்து கொண்டிருக்கும் எனது ஆசிரிய நண்பர்கள் அனைவருக்கும் முகநூல் நண்பர்களுக்கும் வணக்கம்.
என்னிடம் பலர் கேட்ட கேள்விகளுக்கு விடையினை அளிக்கிறேன். நான் விடையளிப்பது மற்ற ஆசிரியர்களை ஊக்கமூட்டுவதற்காக மட்டுமே!

ஆரோக்கியமான தலைமுடியை பெற விரும்புபவரா நீங்க..?

முடி கழிதல், சொரசொரப்பான முடி அல்லது சுருண்டு போகும் முடியால் கவலையாக உள்ளதா? இப்பிரச்சனைகளை தீர்ப்பதற்காக உங்கள் பணத்தை ரசாயனம் கலந்த பொருட்கள் வாங்குவதில் விரையம் செய்கிறீர்களா?

தேர்வு பயம் போக்க ஆலோசனை: '104'ல் 650 மாணவர்கள் அழைப்பு

அரசுத் தேர்வுகள் துவங்க உள்ள நிலையில், '104'ல் ஆலோசனை பெறும், மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தினமும், 650 பேர் வரை ஆலோசனை பெறுகின்றனர்.

சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட 590 பேரின் பட்டியல் வெளியீடு!

உரிமையியல் நீதிபதி பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட 590 பேரின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:

அரசுப்பள்ளிகளை பாதுகாக்க ... சந்திர மோகன்.கு

இந்த நொடியே சிந்திக்க தொடங்குங்கள்...சமுக நலனில் அக்கறை கொண்ட உண்மையான ஆசிரியர்கள் மட்டும்
மீண்டும் ஒரு கல்வி புரட்சிக்கு வித்திடுவோம்..மீட்டெடுப்போம் ஆசிரியர்களின் உரிமைகளையும்,உணர்வுகளையும்.....

"88 பாடப் பிரிவுகளில் இலவச இணையதளக் கல்வி"

பொறியியல், மேலாண்மை உள்ளிட்ட 88 பாடப்பிரிவுகளில் இலவச இணையதளக் கல்வி அளிக்கப்படுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

ஒவ்வொரு பக்கமும் 25 வரிகள் எழுத வேண்டும்.மாணவர்களுக்கு அறிவுறுத்தல்

பிளஸ் 2 பொதுத்தேர்வில், விடைத்தாளில் ஒவ்வொரு பக்கமும், 20 முதல், 25 வரிகள் வரை விடை எழுத வேண்டும் என்று, அரசுத் தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. சுற்றறிக்கை: இதுகுறித்து தமிழக அரசு தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்ட சுற்றறிக்கை: தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் செய்யக்கூடியது மற்றும் செய்யக்கூடாதவற்றை, மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும்.

ஊக்க ஊதிய உயர்வில் தவறு: மாற்றி அமைத்தது தமிழக அரசு


உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான, உயர்கல்வித் தகுதி ஊக்க ஊதியத்துக்கு தடையாக இருந்த, தவறான அரசாணையை, தமிழக அரசு திருத்தி வெளியிட்டு உள்ளது.

ஆசிரியர் சங்கங்கள் வரும் 25ம் தேதி முதல்வரை சந்திக்க ஏற்பாடு ஆசிரியர்களின் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து, 'கோரிக்கை குறித்துப் பேச்சு நடத்த தயார்' என்று, தமிழக அரசு அறிவித்து உள்ளது.


ஆசிரியர் சங்கங்கள் முதல்வரை சந்திக்க, பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது. ஆசிரியர் சங்கங்கள் சார்பில், பல்வேறு கோரிக்கை குறித்து, கடந்த பல ஆண்டுகளாக, அரசுக்கு தொடர்ந்து மனு அனுப்பப்பட்டது; ஆனால், அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Saturday, February 21, 2015

பள்ளிகளில் முகமூடி அணிந்து மாணவர்கள் பாடம் படித்தனர்; பன்றிகாய்ச்சல் பரவுவதை தடுக்க ஆசிரியர்களுக்கும் முகமூடி

சென்னையில் பன்றி காய்ச்சல் நோய் பரவுவதை தடுக்க மாணவர்கள் முகமூடி அணிந்து பாடம் படித்தனர். ஆசிரியர்களும் முகமூடி அணிந்த படியே பாடம் நடத்தினார்கள்.

தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிநிரவல் கணக்கெடுக்க உத்தரவு

தொடக்க கல்வி இயக்குனரகம் மாவட்ட
தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தொடக்கக் கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஊராட்சி தொடக்கப்பள்ளிகள், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 31.8.2014 தேதியில் உள்ளவாறு மாணவர்கள், ஆசிரியர்கள் விவரங்களை வரும் 25-ந் தேதிக்குள் மாவட்ட கல்வி அலுவலர்கள் அனுப்பி வைக்க வேண்டும்.

கல்லூரி ஆசிரியர்கள் 3 நாள்கள் மறியல்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 24, 25, 26 ஆகிய தேதிகளில் சென்னையில் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு கல்லூரி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கைக்குழு அறிவித்துள்ளது.

வர்த்தகம் தொழிலாளர் வங்கி துவக்க பிஎப் நிறுவனம் திட்டம் : உறுப்பினர்களுக்கு கடன் வழங்க முன்னுரிமை

லாபத்தை அதிகரிக்கவும், தொழிலாளர்களுக்கு கடன் வழங்கும் வகையிலும் தொழிலாளர் வங்கி துவக்க பிஎப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சுமார் 6.5 லட்ம் கோடி தொழிலாளர் நிதியை நிர்வகித்து வருகிறது.

ஆசிரியர்கள் சிறப்பாக செயல்பட, அதிகாரிகள் செய்ய வேண்டியது என்ன?

ஆசிரிய வாழ்வின் பொற்காலத்தில் இருந்தேன். இடைநிலை ஆசிரியையாக என் மாணவ கண்மணிகளுக்கு உண்மையிலேயே அருமையான பல வாசல்களை திறந்த நேரம் அது!

10ம் வகுப்பு செய்முறை தேர்வு: மார்ச் 4க்குள் முடிக்க உத்தரவு

இந்தாண்டு, 10ம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வை, வரும் 4ம் தேதிக்குள் முடிக்க, அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து, இன்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி அதிகாரிகள், வழிகாட்டுதல் வழங்க உள்ளனர்.

பத்தாம் வகுப்பு பதிவெண்களுடன் கூடிய பெயர்ப்பட்டியல் 20.02.2015 முதல் வெளியிடப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு பதிவெண்களுடன் கூடிய பெயர்ப்பட்டியல் 20.02.2015 முதல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பள்ளிகள் பதிவிறக்கம் செய்து அதிலுள்ள விவரங்களைச் சரிபார்த்து எந்த ஒரு மாணவரின் பெயரும் விடுபடவில்லை என உறுதி செய்து கொள்ள வேண்டும்.

தகுதித்தேர்வு தேர்ச்சி சான்றுக்கு உண்மைத் தன்மை தேவையா: அலையும் ஆசிரியர்கள்

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதித்தேர்வில் தேர்வான பலர், அதற்கான உண்மை தன்மை அவசியத்தால் அரசு உதவி பெறும் பள்ளியில் பணியில் சேர முடியாமல் தவிக்கின்றனர். 2011க்கு பின் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர தகுதித்தேர்வு தேர்ச்சி பெறுதல் அவசிய மாக்கப்பட்டது. கல்வித் தகுதி அடிப்படையில் அரசு உதவி பெறும் பள்ளியில் பணியில் சேர்ந்தவர்களுக்கு சம்பளம் நிறுத்தப்பட்ட நிலையில், தகுதித்தேர்வை எழுதி தேர்வான இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பலர் பணியில் சேர முடியாத நிலை உள்ளது.

அரசு தேர்வுத்துறை இயக்குனர் அறிக்கை : எஸ்.எஸ்.எல்.சி. செய்முறை தேர்வு 24-ந் தேதி தொடங்குகிறது மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடக்கூடாது என்று அறிவிப்பு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் மாதம் 19-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கி ஏப்ரல் 10-ந் தேதி முடிவடைகிறது. எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கு அறிவியல் பாடத்தில் மட்டும் செய்முறை தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

பள்ளிகளில் முகமூடி அணிந்து மாணவர்கள் பாடம் படித்தனர்; பன்றிகாய்ச்சல் பரவுவதை தடுக்க ஆசிரியர்களுக்கும் முகமூடி

சென்னையில் பன்றி காய்ச்சல் நோய் பரவுவதை தடுக்க மாணவர்கள் முகமூடி அணிந்து பாடம் படித்தனர். ஆசிரியர்களும் முகமூடி அணிந்த படியே பாடம் நடத்தினார்கள்.

பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு ஊக்கத் தொகை: அரசாணையில் திருத்தம்

எம்.பில்., பி.எச்டி. படித்த உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் ஊக்கத் தொகை வழங்க அரசாணையில் திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பட்டதாரி ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் எம்.ஏ., எம்.எஸ்சி. பட்டம் பெற்றால் முதல் ஊக்கத் தொகையும், எம்.எட். அல்லது எம்.பில்., பி.எச்டி. படித்தால் இரண்டாவது ஊக்கத் தொகையும் பெறலாம் என அரசாணை திருத்தப்பட்டுள்ளது.

தொடக்கப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிக்க முடிவு

தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் தற்போது படிக்கும் மாணவர்கள், பணியில் உள்ள ஆசிரியர்கள் விவரங்களை தொடக்க கல்வித்துறை கேட்டுள்ளது. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என்று கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதால், அதிகமாக உள்ள ஆசிரியர்களை குறைவாக உள்ள இடங்களுக்கு பணி நிரவல் மூலம் நியமிக்க தொடக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

பள்ளியில் பாராட்டு விழா

தேவகோட்டை நகர சிவன்கோவிலில் நடைபெறும் வார வழிபாட்டுக் கூட்டதில் பரிசு பெற்ற   தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவிகளுக்கும், ஊக்குவித்த பெற்றோருக்கும் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

Friday, February 20, 2015

மார்ச் 7க்குள் வேலைவாய்ப்பை புதுப்பிக்க கால அவகாசம் - மார்ச் 7க்குள் வேலைவாய்ப்பை புதுப்பிக்க கால அவகாசம்

வேலைவாய்ப்புக்கான பதிவை புதுப்பிக்க தவறியோர், சிறப்பு சலுகையின் கீழ் புதுப்பித்துக் கொள்வதற்கான அவகாசம், மார்ச் 7ம் தேதியுடன் முடிகிறது. 'இந்த காலத்தில் புதுப்பிக்க தவறினால், மீண்டும் வாய்ப்பு கிடைக்காது' என, வேலைவாய்ப்பு இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.

கல்வி நிறுவனங்கள், மாணவர்களின் சந்தேகங்களுக்கு தீர்வு கிடைக்கும் வகையில் புதிய வழிகாட்டுதல் வெளியீடு


கல்வி நிறுவனங்கள், மாணவர்களின் சந்தேகங்களுக்கு தீர்வு கிடைக்கும் வகையில் புதிய வழிகாட்டுதல் குறித்து கேள்வி, பதில் வடிவில் விளக்கங்களை தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (என்.சி.டி.இ.) வெளியிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் பிப்ரவரி 21-ந்தேதியை (நாளை) தாய்மொழி தினமாக கொண்டாட உத்தரவு


இந்தியா முழுவதும் பிப்ரவரி 21-ந் தேதியை (நாளை) தாய்மொழி தினமாக கொண்டாடுங்கள் என்று சி.பி.எஸ்.இ.பள்ளிகளுக்கு சுற்றறிக்கையை மத்திய மனித வளமேம்பாட்டுத்துறை அனுப்பி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

நடப்பு கல்வி ஆண்டில் ரூ1100 கோடி மதிப்பில் மடிக்கணினி வழங்க ஏற்பாடு

நடப்பு கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-2 மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் ரூ.1100 கோடி மதிப்பில் வழங்கப்படுகிறது.

பிப்ரவர் 23ல் பி.எட் செய்முறை தேர்வு


பி.எட்., மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்., 23ல் துவங்குகிறது. தமிழகத்தில் 661 கல்வியியல் கல்லுாரிகள் உள்ளன. ஒரு லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். இவர்களுக்கு 2014--15க்கான செய்முறை தேர்வு பிப்., 23 ல் துவங்கி மார்ச் 13 வரை 6 கட்டங்களாக நடக்கிறது.

இந்த ஆண்டாவது வெளிப்படை கலந்தாய்வு:கல்வித்துறைக்கு ஆசிரியர்கள் கோரிக்கை


இந்த கல்வி ஆண்டிலாவது, வெளிப்படையான முறையில், ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வை நடத்த, கல்வித்துறை முன்வர வேண்டும்' என,ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், பள்ளி துவங்குவதற்கு முன், ஆசிரியர்களுக்கு, பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

Thursday, February 19, 2015

ஜாக்டோ பொறுப்பாளர்களை சந்திக்க முதலமைச்சர் வருகிற பிப்ரவரி 25ம் தேதி காலை 10 மணிக்கு ஒதுக்கீடு

வருகிற பிப்ரவரி 25ம் தேதி காலை 10 மணிக்கு சந்திக்கிறார் ஜாக்டோ உயர்மட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று காலை பட்டதாரி ஆசிரியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் அவர்களிடம் முறையிட இன்று செல்வதென முடிவெடுக்கப்பட்டது.

ஜாக்டோ அமைப்பின் உயர்மட்டக்குழு பொறுப்பாளர்கள் 15 அம்ச கோரிக்கை மனுவை தமிழக முதல்வர் அவர்களை சந்தித்து அளிக்க உள்ளனர்.

சென்னை தலைமை செயலகத்தில் இன்று மதியம் 3.30 மணியளவில் ஜாக்டோ அமைப்பின் உயர்மட்டக்குழு பொறுப்பாளர்கள் 15 அம்ச கோரிக்கை

சென்னையில் ஜாக்டோ அமைப்பின் உயர்மட்டக்குழு கூட்டம்

சென்னையில் ஜாக்டோ அமைப்பின் உயர்மட்டக்குழு கூட்டம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் திரு. கோ. காமராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது.

பிளஸ் 2 தேர்வர்களின் இறுதிப்பட்டியல் தயார்; இணை இயக்குனர் கோவையில் ஆய்வு

கோவை மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வுகளுக்கான ஏற்பாடுகள் குறித்து, கல்வித்துறை இணை இயக்குனர் கருப்புசாமி நேரடி ஆய்வுகளை மேற்கொண்டார்.

புத்துணர்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் 'குஷி'

தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக, அரசுப் பள்ளிகளின் கல்வி மற்றும் தகவல் தொடர்புத்திறனை உயர்த்துவதாக, அரசுப் பள்ளி தலைமையாசிரியர்கள் சூளுரைத்து உள்ளனர்.

பிளஸ் 2 வினாத்தாள்களுக்கு போலீஸ் பாதுகாப்பு

பிளஸ் 2 தேர்வு வினாத்தாள், 'லீக்' ஆகாமல் பாதுகாக்க, ரகசிய காப்பு அறைகளில், இன்று முதல் 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க, மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு, தேர்வுத்துறை இயக்குனர் கடிதம் அனுப்பி உள்ளார்.

'பள்ளி ஆரோக்கிய அபியான்' அறிமுகம்

உயிர் கொல்லி நோயான, 'எச் 1 என் 1' என்ற 'ஸ்வைன் ப்ளூ' என்ற நோயை பற்றி, பள்ளி மாணவ, மாணவியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, 'பள்ளி ஆரோக்கிய அபியான்' திட்டத்தை, பி.பி.எம்.பி., துவங்கியுள்ளது.

பணிநியமனம் வழங்கக் கோரி டிஆர்பியை மாற்றுத் திறனாளி பட்டதாரிகள் முற்றுகை போராட்டம்

ஆசிரியர் பணி நியமனங்களை வழங்கக் கோரி மாற்று திறனாளி பட்டதாரிகள் நேற்று ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை டிபிஐ வளாத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் முன்பு நேற்று காலை திடீரென திரண்ட மாற்றுத் திறனாளிகள் 100 பேர் பணி நியமனம் தொடர்பான கோரிக்கையை வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மூடு விழா காணும் சத்துணவு மையங்கள் ! தினகரன் தலையங்கம்

உணவில்லாமல் வாடியதால் கல்வி பயில வரஇயலாத குழந்தைகளை பள்ளிகளுக்கு வரவழைக்க கொண்டுவரப்பட்டது தான் சத்துணவு திட்டம். காமராஜர் ஆட்சி காலத் தில் அறிமுகமான இந்த திட்டம், அடுத்தடுத்த ஆட்சிகளால் மெருகேற்றப்பட்டு இன்றைக்கும் வெற்றிகரமாக தமிழகத்தில் நடைமுறைபடுத்தப்படுகிறது. 

உயர்கல்வியின் தரம் உயர சில ஆலோசனைகள்

நம் கல்வியின் தரத்தை மாற்ற வேண்டும், ஏற்றி உயர்த்த வேண்டும் என்று சொன்னால், தற்போது உள்ள யு.ஜி.சி. என்ற அமைப்பு உடனே ஒரு கமிட்டியைப் போடுகிறது. கமிட்டியிடம் இருந்து பரிந்துரையைப் பெறுகிறது. அப்பரிந்துரைகளைப் பல்கலைக்கழகம் அனைத்திற்கும் அனுப்பி வைக்கிறது. பல்கலைக்கழகம் தன் கீழ் உள்ள பாடக்குழுவுக்கு அனுப்பி வைக்கிறது.

குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான ஆசிரியர்களுக்கான கையேட்டை மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுக்கான அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

பேராசிரியர் மாடபூஷி ஸ்ரீதர் ஆய்வின் அடிப்படையில், மாணவர்களுக்கு வழங்கப்படும் உடலையும், மனதையும் வருத்தக்கூடிய தண்டனைகளை மூன்று விதமாக அந்தக் கையேடு பிரித்துள்ளது.

பிப்ரவரி 22ஆம் தேதி இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம்

கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் தவணை சொட்டு மருந்து 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 2வது தவணை முகாமை சிறப்பாக நடத்த மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைக்கப்பட்டுள்ளன.

Wednesday, February 18, 2015

ஆங்கிலத்தை வளர்த்த தமிழனால் ஏன் தமிழை வளர்க்க முடியவில்லை?

ஆங்கிலம் மட்டுமே போதும் என்ற நிலைக்கு இன்று பெரும்பான்மையானவர்கள் கருதுகிற நிலையில் தமிழில் என்ன இருக்கிறது என்ற சிறப்பு அடுத்த சந்ததிக்குத் தெரியாமலே போகிறது. தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்கு தமிழின் சிறப்புகளை இங்கே ஒவ்வொரு பகுதியாக சுட்டிக்காட்டுகிறோம்.

மாத சம்பளம் பெறுவோர் வருமானவரி விலக்கு பெறும் வகையில் பட்ஜெட் இருக்கும் !!

மத்திய பட்ஜெட்டில் வருமான வரி பிடித்தம் ரூ.10 லட்சம் வரை 10 சதவீதமாக குறைக்க அருண்ஜெட்லி முடிவு செய்துள்ளார். பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் வருகிற 23–ந் தேதி கூடுகிறது. இதில் மத்திய பட்ஜெட் 28–ந் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. நிதி மந்திரி அருண்ஜெட்லி 2015–16 ம் ஆண்டுக்கான மத்திய அரசின் வரவு – செலவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்கிறார்.

வினா, விடைத்தாள்களை பத்திரமாக அனுப்புவது எப்படி? பிளஸ் 2 தேர்வு குறித்து செயலர் மற்றும் இயக்குனர் ஆலோசனை

தமிழகத்தில், மார்ச் 5ம் தேதி, பிளஸ் 2; மார்ச் 19ம் தேதி, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவங்க உள்ளன. இந்தத் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள், ஏற்கனவே தயார் செய்யப்பட்டுள்ளன. விடைத்தாள்கள் மற்றும் முகப்புப் பக்கம் இணைப்புப் பணி நடந்து வருகிறது. முதற்கட்டமாக, பிளஸ் 2 தேர்வை நடத்தும் ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அதிகமாக பணம் வசூலித்த பள்ளிகளுக்கு நெருக்கடி

அரசு நிர்ணயித்ததை விட, மாணவர்களிடம் அதிகமாக வசூலித்த, 7 கோடி ரூபாயை தனியார் பள்ளிகளிடமிருந்து பறிமுதல் செய்ய, தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு, நீதிபதி சிங்காரவேலர் கமிட்டி உத்தரவிட்டு உள்ளது.

"ஸ்கெட்ச்', வண்ண பென்சில்களால் விடைத்தாள்களில் எழுதக் கூடாது: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தல்

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்களில் "ஸ்கெட்ச்', வண்ண பென்சில்களால் எழுதக் கூடாது என அரசுத் தேர்வுகள் இயக்ககம் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்கம் செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.

நான்கு ஆண்டுகளில் 72 ஆயிரத்து 597 ஆசிரியர்கள் நியமனம் - ஆளுநர் உரை

தமிழக அரசின் சார்பில் கடந்த 4 ஆண்டுகளில் 72 ஆயிரத்து 597 ஆசிரியர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆளுநர் உரையில் கூறியதாவது: அனைவருக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்ய கடந்த 4 ஆண்டுகளில் 182 புதிய தொடக்க பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதேபோல் 1,317 நடுநிலை, உயர் நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

பிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதும் போது செய்யக்கூடியவை என்ன? , செய்யக் கூடாதவை என்னென்ன? - தேர்வுத்துறை அறிவிப்பு

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதும் போது என்னென்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்பதை தேர்வுத்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
செய்யக்கூடியவை என்ன?
* விடைத்தாளின் முகப்பு சீட்டில் உரிய இடத்தில் மாணவர்கள் கையொப்பமிட வேண்டும்.
* விடைத்தாளில் ஒரு பக்கத்தில் 20 முதல் 25 வரிகள் வரை எழுத வேண்டும்.
* விடைத்தாளின் இரு புறத்திலும் எழுத வேண்டும். 

12 ஆண்டுகளுக்கு பின் ஆசிரியர் சங்கங்கள் மீண்டும் கைகோர்ப்பு: மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த ஆயத்தம்

கடந்த 2003ல், அரசு ஊழியர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட, 32 ஆசிரியர் சங்கத்தினர், 12 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஒன்றிணைந்து, பல கோரிக்கைகளுக்காக, மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட ஆயத்தமாகி உள்ளனர்.

தமிழகத்தில் இருந்து செவ்வாய் கிரகத்துக்கு ஒருவழி பயணமாக செல்லும் மாணவி; ருசிகரமான பேட்டி

தமிழகத்தில் இருந்து செவ்வாய் கிரகத்துக்கு ஒருவழி பயணமாக செல்லும் கோவை மாணவி, அதுபற்றி ருசிகர பேட்டி அளித்துள்ளார்.

"தியரி கேள்விகளை அதிகாலை, மாலையில் படிப்பது நல்லது; கணக்கை இரவில் செய்து பார்க்கலாம்"

பிளஸ் 2 தேர்வுகள் இன்னும் சில நாட்களில் துவங்க உள்ளது. ஆண்டு முழுக்க கண்விழித்து படித்தாலும், தேர்வு காலங்களில் நமது படிப்பு, மனநிலை, உடல் நிலை, உணவு முறை போன்றவையும் நாம் பெறும் மதிப்பெண்ணில் முக்கிய பங்கு வகிக்கிறது.

25க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிக்கூடங்களில் சத்துணவு மையங்களை மூட முடிவு !!

நெல்லை மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட சத்துணவு மையங்களை மூடுவதற்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதனால் சத்துணவு ஊழியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். நெல்லை மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரம் சத்துணவு மையங்கள் உள்ளன. ஒரு மையத்திற்கு சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என 3 பேர் பணியில் இருக்க வேண்டும்.

சட்டப்பேரவையில் ஆளுநர் உரை: ஆசிரியர் மன்றம் கருத்து

சட்டப்பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரை அரசின் புகழ்பாடும் உரையாக உள்ளது. மேலும், ஆசிரியர், அரசு ஊழியர்களை போராட்டத்துக்கு தள்ளும் உரை யாகவும் உள்ளது என்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற செயலாளர் மீனாட்சி சுந்தரம் நேற்று வெளியிட்ட அறிக்கை: சட்டப் பேரவையில் தமிழக ஆளுநர் உரையாற்றி உள்ளார்.

இந்தியாவில் கல்வித் துறையின் பரிதாபகரமான நிலை!

இந்தியாவில் பள்ளிக் கல்வியின் பரிதாபகரமான நிலையை அண்மையில் வெளியிடப்பட்ட "கல்வித் துறையின் நிலை குறித்த ஆண்டறிக்கை 2014' படம்பிடித்துக் காட்டுகிறது. மூன்றாம் வகுப்பில் 75 சதவீதத்தினர், 5-ஆம் வகுப்பில் 50 சதவீதத்தினர், 8-ஆம் வகுப்பில் 25 சதவீதத்தினர் 2-ஆம் வகுப்புப் பாடத்தை சரியாகப் படிக்கக் கூட முடியவில்லை என அந்த அறிக்கை கூறுகிறது.
அதேபோல, 3-ஆம் வகுப்பு மாணவர்களில் 75 சதவீதத்தினரால் இரண்டு இலக்க கழித்தல் கணக்குகளையும், 5-ஆம் வகுப்பு மாணவர்களில் 75 சதவீதத்தினரால் வகுத்தல் கணக்குகளையும், 8-ஆம் வகுப்பு மாணவர்களில் 56 சதவீதத்தினரால் 3 இலக்க எண்களை ஓர் இலக்க எண்ணால் வகுக்கும் கணக்குகளையும் போட முடியவில்லை.
19.5 சதவீத 2-ஆம் வகுப்பு மாணவர்களால் 9 வரையுள்ள எண்களை அடையாளம் காண முடியவில்லை. 75 சதவீத 5-ஆம் வகுப்பு மாணவர்களால் எளிமையான ஆங்கில வாக்கியங்களைப் படிக்க முடியவில்லை என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
உலகில் உள்ள பல்வேறு நாடுகளை ஒப்பிடும்போது, நம் நாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) மிகமிகக் குறைவான தொகையே கல்விக்காக ஒதுக்கப்படுகிறது. 1966-இல் கோத்தாரி கமிஷன் அளித்த பரிந்துரையை அரசு ஏற்றது.
அதன்படி, 1985-இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் கல்விக்கு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 2001 முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் 3.1 முதல் 3.8 சதவீதம் மட்டுமே கல்விக்காக ஒதுக்கப்பட்டது.
மத்திய அரசின் மனித வளத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்படி, கல்விக்கு 2010-11-இல் 2.97 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. இந்தத் தொகை 2011-12-இல் 3.57 லட்சம் கோடியாகவும், 2012-13-இல் 4.10 லட்சம் கோடியாகவும் அதிகரித்தது. 1951-52-இல் கல்விக்கு ரூ.64.46 கோடி ஒதுக்கப்பட்டது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.64 சதவீதமாகும்.
இது 2010-11-இல் 2.97 லட்சம் கோடியாக அதிகரித்தது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.05 சதவீதமாகும். இந்த காலகட்டத்தில் கல்விக்கான ஒதுக்கீடு 6 மடங்கு அதிகரித்துள்ளது. உலகில் உள்ள 124 நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, இந்தியாவில் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியின் அளவைவிடக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா கடந்த 20 ஆண்டுகளில் பள்ளிக்குக் கட்டடங்கள் கட்டுதல், வகுப்பறைகள் கட்டுதல், ஆசிரியர்கள் நியமித்தல், பாடப் புத்தகங்கள், மற்ற வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாக "கல்வித் துறையின் நிலை குறித்த ஆண்டறிக்கை 2014' தெரிவிக்கிறது.
இதற்கு இணையாக 6 முதல் 14 வயதுள்ள குழந்தைகளில் 95 சதவீதத்துக்கும் அதிகமானோர் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
கல்விக்காக செலவழிக்கப்படும் அதிக நிதியால், நாடு முழுவதும் ஏராளமான பள்ளிகள் கட்டப்பட்டுள்ளன. கல்வி தொடர்பாக 2014-இல் மத்திய அரசு வெளியிட்ட ஒரு புள்ளிவிவர அறிக்கையில், இந்தியாவில் தொடக்கக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை கற்பிக்கும் 14,25,564 கல்வி நிறுவனங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் 7,90,640 தொடக்கப் பள்ளிகளும், 712 பல்கலைக்கழகங்களும், 36,671 கல்லூரிகளும், பட்டயக் கல்வி வழங்கும் 11,445 நிறுவனங்களும் அடங்கும்.
நாட்டிலுள்ள ஒட்டுமொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 82.68 லட்சமாகும். இதில் 26.84 லட்சம் பேர் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள். 25.13 லட்சம் பேர் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள். 12.86 லட்சம் பேர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள். 17.85 லட்சம் பேர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள்.
நாட்டில் உள்ள அமைப்பு ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்ட தொழிலாளர்களில் நான்கில் ஒரு பங்கினர் ஆசிரியர்கள் ஆவர். சுமார் 160 நாடுகளில் நமது நாட்டில் உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கையைவிட குறைவான எண்ணிக்கையிலேயே மக்கள் தொகை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவையெல்லாம் ஒருபுறம் இருப்பினும், மாணவர்கள் தொடர்ந்து ஆர்வத்துடன் கல்வி கற்கும் சூழல் பள்ளிகளில் இல்லை. மத்திய அரசு 2013-14-இல் தொகுத்த புள்ளிவிவரங்களின்படி, 5-ஆம் வகுப்புக்கு முன்னரே 19.8 சதவீத மாணவர்கள் வெளியேறுகின்றனர். 8-ஆம் வகுப்புக்கு முன்னர் 36.3 சதவீதத்தினரும், 10-ஆம் வகுப்புக்கு முன்னர் 47.4 சதவீதத்தினரும் கல்வியைக் கைவிடுகின்றனர்.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தோமானால், 80 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கே செல்வதில்லை, 8 கோடி குழந்தைகள் பள்ளிக் கல்வியைப் பாதியிலேயே கைவிடுகின்றனர். இந்த நிலையை "தேசிய அவசரநிலை' என்று வர்ணிக்கிறது ஐ.நா.வின் குழந்தைகள் நிதியம் அமைப்பு.
குழந்தைகள் இடைநிற்றலுக்கு ஆசிரியர்களும் ஒரு முக்கியமான காரணம் என்பது வேதனை தரும் அம்சமாகும். வகுப்பறைகளில் சுமார் 850 மணி நேரம் ஆய்வு செய்த பின்னர், மாணவர்களுக்கு உகந்த நடைமுறைகளை ஆசிரியர்கள் பின்பற்றுவதில்லை என கல்வி தொடர்பான வருடாந்திர ஆண்டறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான ஆசிரியர்களுக்கான கையேட்டை மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுக்கான அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
பேராசிரியர் மாடபூஷி ஸ்ரீதர் ஆய்வின் அடிப்படையில், மாணவர்களுக்கு வழங்கப்படும் உடலையும், மனதையும் வருத்தக்கூடிய தண்டனைகளை மூன்று விதமாக அந்தக் கையேடு பிரித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை: ஆளுநர் உரையில் கல்வித் துறை சார்ந்த முக்கிய அம்சங்கள்


அனைவருக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்ய கடந்த நான்கு ஆண்டுகளில் 182 புதிய தொடக்கப் பள்ளிகளை தொடங்கியும், 1,317 நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தியும், இந்த அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்துள்ளது.

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வலியுறுத்தி! தீர்மானம்:


கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் குறைபாடுகளை களைந்து முழுமையாக நடைமுறைப்படுத்தவும் இச்சட்டத்தை மேலும் பலப்படுத்தும் வகையிலான திருத்தங்களை மேற்கொள்ள வலியுறுத்தி;கல்வி இன்று மிகப்பெரும்

தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று காலை தொடங்கியது. ஆளுநர் ரோசய்யா உரையின் சிறப்பம்சம் வருமாறு

* வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் வரையிலான மெட்ரோ திட்டத்துக்கு ஒப்புதல் தர மத்திய அரசுக்கு வலியுறுத்தல்.
* கோயம்பேடு- ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும்.
* சூரிய மின்சக்தியுடன் கூடிய 2.4 லட்சம் பசுமை வீடுகள் ரூ.4,680 கோடியில் கட்டப்பட்டுள்ளன.
* தமிழ்நாடு குக்கிராமங்கள் மேம்பாட்டு திட்டத்துக்காக ரூ.2,930 கோடி ஒதுக்கீடு.

நாடு முழுவதும் ரயில்வே துறையில் உள்ள ஊழியர்களின் வருகை பதிவை ஆதார் அட்டை இணைப்புடன் ஏப்ரல் 1ம் தேதி முதல் விரல்ரேகை வருகை பதிவு!!

நாடு முழுவதும் ரயில்வே துறையில் உள்ள அலுவலர்கள், ஊழியர்களின் வருகை பதிவை ஆதார் அட்டை விவரங்களுடன் கூடிய மின்னணு விரல் ரேகை பதிவு முறையை செயல்படுத்த ரயில்வே முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் ரயில்வே அலுவலகங்களில் வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போடும் முறை அமலில் உள்ளது. அதேநேரத்தில் ரயில்வே பணிமனைகளில், தொழிற்சாலைகளில் வருகைப்பதிவு அட்டை முறை உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் ஜன.26ம் தேதி முதல் ஆதார் அட்டையுடன் இணைந்த விரல் ரேகை மூலம் வருகை பதிவு முறையை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசின் பணியாளர் நலத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.

தமிழை முதன்மைப் பாடமாக அறிவிக்கக் கோரி தமிழாசிரியர்கள் மார்ச் 8-ல் ஆர்ப்பாட்டம்

தமிழை முதன்மைப் பாடமாக அறிவிக்கக் கோரி வரும் மார்ச் 8-ல் பேரணி நடத்தப்படும் என தமிழக தமிழாசிரியர் கழக மாநில பொதுச் செயலர் இளங்கோ தெரிவித்தார்.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனம்: சான்றிதழ் சரிபார்ப்பு தொடக்கம்

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு திங்கள்கிழமை தொடங்கியது. செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் மூன்று மண்டலங்களாகப் பிரித்து விழுப்புரம், சேலம், மதுரை ஆகிய இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் 400 பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி

தலைமை ஆசிரியர்தான் ஒரு பள்ளியின் முன்மாதிரியாக திகழவேண்டும். அப்படி விளங்கினால்தான் சக ஆசிரியர்கள் முன்மாதிரியாக வருவார்கள். ஆசிரியர்கள் சிறப்பாக பணியாற்றினால்தான் மாணவர்கள் சிறப்பாக படிப்பார்கள், ஒழுக்கமாக நடப்பார்கள் என்பதை பள்ளி கல்வித்துறை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைவருக்கும் பயிற்சி அளிக்க முடிவு செய்தது.

ஒரே ஆண்டில் இரு பட்டங்கள் ஆசிரியர் பணி வழங்க உத்தரவு

ஒரே ஆண்டில் எம்.ஏ., மற்றும் பி.எட்., படித்தவருக்கு பணி வழங்க மறுத்த ஆசிரியர் தேர்வு வாரிய உத்தரவை, மதுரை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது. திண்டுக்கல் தீபா தாக்கல் செய்த மனு: பி.ஏ., (தமிழ்) 2004--07 ல் படித்தேன். பி.எட்.,ஜூலை 2008ல் தேர்ச்சி பெற்றேன். 2008ல் எம்.ஏ., (தமிழ்) படிப்பில் சேர்ந்தேன். 2009 நவம்பரில் எம்.ஏ.,தேர்ச்சி பெற்றேன்.

தட்டிக்கழிக்கும்' அதிகாரிகள்780 ஆசிரியர்களுக்கு சிக்கல்

ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம் 2011-12ல் 780 முதுநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். கல்வித்துறை வழக்கு ஒன்று கோர்ட்டில் நிலுவையில் இருந்ததால் அந்த ஆண்டில் மட்டும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட நியமன உத்தரவில் 'தற்காலிக பணியிடம்' என குறிப்பிடப்பட்டது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வை 19,15,735 மாணவர்கள் எழுதுகின்றனர் தேர்வுத்துறை அறிவிப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வை 8 லட்சத்து 43 ஆயிரத்து 64 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். அதேபோல, பத்தாம் வகுப்பு தேர்வை 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். பிளஸ் 2 தேர்வை பொறுத்தவரை, கடந்த ஆண்டைவிட 16 ஆயிரத்து 947 பேர் கூடுதலாகவும், பத்தாம் வகுப்பில் 33 ஆயிரத்து 816 மாணவர்களும் கூடுதலாக தேர்வு எழுதுவதாக அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

இந்திய ராணுவ பயிற்சி கல்லூரியில் 8-ம் வகுப்பு படிக்க மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன


இதுகுறித்து ராணுவ பொதுத் துறை செயலகம் நேற்று வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: இந்திய ராணுவ பயிற்சி கல் லூரியில் 2016 ஜனவரி கல்வி ஆண்டில் 8-ம் வகுப்பு படிக்க மாணவர்களிடமிருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயன்பாட்டில் இல்லாமல் போன கல்வித்துறை இணையதளம்

 கோவை: அரசு பள்ளிகளை மேம்படுத்த, கோவை மாவட்ட கல்வித்துறையால் துவங்கப்பட்ட, பிரத்யேக இணையதளம், தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் கட்டணம் செலுத்தி, பராமரிக்க தவறியதால், பயன்பாட்டில் இல்லாமல் போனது.

தடம் மாறும் மாணவிகள்... தடுமாறும் சென்னை..!

சென்னை தியாகராயர் நகர், வெங்கட் நாராயணா சாலை...

கடந்த வாரத்தில் ஒரு நாள் நள்ளிரவு..!

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன் வந்தது. அதில் பதற்றத்துடன் பேசியது ஓர் ஆண் குரல், ''சார்... எங்களைக் காப்பாத்துங்க..... எங்ககூட வந்த ஒரு பொண்ணை இரண்டு பேர் பலவந்தமாய் 'ரேப்’ பண்ண முயற்சிக்கிறாங்க. அதைத் தடுக்கப் போன எங்களையும் அடிச்சுப் போட்டுட்டாங்க'' என்றது.

Monday, February 16, 2015

விஸ்வரூபம் எடுக்கும் இடைநிலை ஆசிரியர் ஊதியப்பிரச்சனை


தமிழகத்தில் 1999–ம் ஆண்டுக்கு முன்பு பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள், 2009–ம் ஆண்டுக்கு முன்பு பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள், 2009–ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையே சம்பளம் தொகையில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.

உச்சநீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு வெய்ட்டேஜ், 5% மதிப்பெண் தளர்வு வழக்கு மார்ச் 26 விசாரணைக்கு வருகிறது

SUPREME COURT OF INDIA

Case Status Status : PENDING

Status of : Special Leave Petition (Civil)    29245    OF   2014

V. LAVANYA & ORS.   .Vs.   THE STATE OF TAMIL NADU & ORS.

Pet. Adv. : MR. T. HARISH KUMAR

பிப்ரவரி 21ம் தேதியை தாய்மொழி தினமாக கொண்டாட யு.ஜி.சி. அறிவுறுத்தல்

பல்கலைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள், பிப்., 21ம் தேதியை, தாய்மொழி தினமாக கொண்டாட வேண்டும். அன்று பல நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என, பல்கலைக்கழக மானியக் குழுவான யு.ஜி.சி., அறிவுறுத்தி உள்ளது.

300 உதவி பொறியாளர் பணியிடங்களை விரைவாக நிரப்ப டி.என்.பி.எஸ்.சி -க்கு கடிதம்

பொதுப்பணித் துறையில் காலியாக உள்ள, 300 உதவி பொறியாளர் பணியிடங்களை, விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என, டி.என்.பி.எஸ்.சி.,க்கு கடிதம் எழுதப்பட உள்ளது.

தேர்வு குறித்த மனப்பதட்டத்தை தவிர்க்க...

தேர்வு குறித்த மனப்பதட்டம் இரவு துாக்கத்தை கெடுத்துவிடும். எனவே நேர்மறையான நல்ல விஷயங்களை நினைத்துப் பார்த்து உற்சாக மனநிலையுடன் படிக்க துவங்க வேண்டும் என்கிறார் மதுரையைச் சேர்ந்த மனநல டாக்டர் விக்ரம் ராமசுப்ரமணியன்.

இன்னும் ஒரு வாரத்தில் குரூப் - 2 தேர்வு முடிவுகள்: டி.என்.பி.எஸ்.சி. தலைவர்

குரூப் - 2 தேர்வு முடிவுகள் இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி.,யின் தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.

பல்கலை தேர்வு விதிகளை மீறி உடனடி தேர்வு நடத்தும் தன்னாட்சி கல்லூரிகளுக்கு கண்டிப்பு

மாணவர்கள் தோல்வியடையும் பாடங்களுக்கு, பல்கலை தேர்வு விதிகளை மீறி, உடனடி தேர்வு நடத்தும் தன்னாட்சி கல்லுாரிகளை கண்டித்து, சென்னை பல்கலை, சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

2004 முதல் 2006 வரை நியமனம் செய்யப்பட்ட 28 இடைநிலை ஆசிரியர்களுக்கு நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் பணிவரன்முறை - அனைத்து ஆசிரியர்களுக்கும் இது பொருந்துமா?

உண்மை நிலவரம்

2004 முதல் 2006 வரை நியமனம் செய்யப்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் இது பொருந்துமா???


நண்பர்களே.. இவர்கள் அனைவரும் நவம்பர் 2001ல் கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் D.t.ed பதிவு செய்திருந்தவர்கள். ஜனவரி 2002ல் கரூர் மாவட்டத்தில் இவர்களை தவிர்த்து மற்றவர்களுக்கு அரசியல்வாதிகளின் துணையுடன் பணிநியமனம் வழங்கப்பட்டது.

ஆசிரியர்கள் சிறை நிரப்பும் போராட்டம்

சிவகங்கையில் "ஜேக்டோ' கூட்டமைப்பு கூட்டம் நடந்தது. பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் கோவிந்தராஜூ தலைமை வகித்தார். இது குறித்து தொடக்கபள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் ஜோசப் சேவியர் கூறியதாவது: பங்களிப்பு பென்ஷனை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டம் வேண்டும். அகவிலைப்படி 50 சதவீதத்தை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டும்.

மார்ச் 1ம் தேதி முதல் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டம்

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டம் அடுத்த மாதம் 1ம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் எச்.எஸ்.பிரம்மா தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைப்பதற்காக மார்ச் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி வரை நாடு முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும் கூறினார்.

ஹோம்வொர்க்கை செக் பண்ணினா பத்தாது... கை கழுவி இருக்காங்களான்னும் இனி ஆசிரியர்கள் பார்க்கணும்!

மாணவர்கள் சாப்பிடுவதற்கு முன்னதாக கைகளை கழுவி உள்ளனரா என்பதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பள்ளி மாணவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது மத்திய அரசு. அதன்படி, மத்திய அரசின் மனிதவளத்துறை பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

பள்ளிக் கல்வியில் மாற்றம் அவசியம்: அப்துல் கலாம்

இந்தியா தொழில்திறன் மிக்க நாடாக உருவாக பள்ளிக் கல்வியில் மாற்றம் அவசியம் என குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வலியுறுத்தினார்.

தொற்றுநோய் தாக்குதல் எதிரொலி: மாணவர்கள் நலன் காக்க கல்வித்துறை புதிய திட்டம்

தொற்றுநோய் தாக்குதலில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகளின் உடல்நலம் காக்க கல்வித்துறை புதிய முயற்சி எடுத்துள்ளது. மின்னஞ்சல் வழியாக ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் தினமும் தகவல்களைப் பெற்று, சுகாதாரத் துறை மூலம் தேவையான மருத்துவ ஏற்பாடுகளைச் செய்ய திட்டமிட்டுள்ளது.

100 சதவீத தேர்ச்சி இலக்கு: எளிமையாக பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு கையேடு

அரசு பொதுத் தேர்வு எழுதும் 10-ம் வகுப்பு மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற எளிமையாக பாடம் நடத்துவது குறித்து அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சியுடன் கூடிய வழிகாட்டி கையேடுகள் வழங்கப்படுகின்றன.

ஆசிரியர் தகுதித்தேர்வின் ஆசிரியர் பணிநியமனங்கள் குறித்த உண்மை நிலை

உச்சநீதிமன்ற வழக்கு: 

வெய்ட்டேஜுக்கு எதிராக 4குழுவினரும்,முந்தேதியிட்டு வழங்கிய 5% மதிப்பெண் தளர்வுக்கு எதிராக திருமதி.நளினி சிதம்பரம், திரு.அஜ்மல்கான் போன்ற 4 வழக்குரைஞரின் மூலமாக உச்சநீதிமன்றம் சென்றனர் .

Sunday, February 15, 2015

தேர்வுக்கு ஏற்ற உணவுகள் - டாக்டர்.கு. கணேசன்

பிளஸ்2 தேர்வுகள் இன்னும் சில நாட்களில் துவங்க உள்ளது. ஆண்டு முழுக்க கண்விழித்து படித்தாலும், தேர்வு காலங்களில் நமது படிப்பு, மனநிலை, உடல் நிலை, உணவு முறை போன்றவையும் நாம் பெறும் மதிப்பெண்ணில் முக்கிய பங்கு வகிக்கிறது.

தேர்வு அறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த திட்டம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மார்ச், 5ம் தேதி, பிளஸ் 2 பொதுத் தேர்வு துவங்குகிறது. மார்ச், 31ல் நிறைவடைகிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 19ல் துவங்கி, ஏப்ரல், 10ம் தேதி நிறைவடைகிறது.

பரிசு 30 ரூபாய்க்கு தருவதோ காசோலை; பெற்றோர், ஆசிரியர்கள் அதிருப்தி

பள்ளிகள் அளவில், நடத்தப்பட்ட போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு, 100 முதல் 30 ரூபாய் வரை வழங்கப்படும் பரிசுத்தொகை கட்டாயம் காசோலையாக மட்டுமே வழங்கவேண்டும் என்ற உத்தரவு பல்வேறு பெற்றோர்கள், ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.3 லட்சம் வரையில் வருமானவரி விலக்கு நிதி அமைச்சகம் தகவல்

மத்திய அரசு வரும் 28ம் தேதி 2015-16ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது. இந்நிலையில், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு சூழ்நிலைகளில் கருத்தில் கொண்டு மாத சம்பளம் வாங்குபவர்களின் வருமான வரி வரம்பை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

தேர்வை கண்காணிக்க 3 ஆண்டுகளாக ஒரே அதிகாரி:சேலம், நாமக்கலுக்கு நியமிப்பதில் சர்ச்சை

பொதுத் தேர்வை கண்காணிப்பதில், சேலம், நாமக்கல் மாவட்டங்களுக்கு மட்டும், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, இணை இயக்குனர் பழனிச்சாமியை நியமித்திருப்பது, பல சர்ச்சைகளையும், சந்தேகங்களையும் கிளப்பி உள்ளது.

கிராமப் பகுதிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை; இடமாறுதல் குளறுபடிகளால் சிக்கல்

பள்ளிக்கல்வித்துறையின் கீழ், நிர்வாக இடமாறுதல்களால், கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு, மாணவர்கள் அல்லல்படும் சூழல் உருவாகியுள்ளது.

ஏப்.15 முதல் சத்துணவு ஊழியர் ஸ்டிரைக்

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில பிரதிநிதித்துவ பேரவை கூட்டம் கடலூரில் நேற்று நடந்தது. மாநில தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதிய விகிதம் மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு உடனே நிறைவேற்ற கோரி ஏப்ரல் 15 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது.

பிளஸ் 2 தேர்வுப் பணிகள் குறித்து தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் ஆய்வு

மதுரை உட்பட ஐந்து மாவட்ட கல்வி அதிகாரிகளுடன், பிளஸ் 2 தேர்வுப் பணிகள் குறித்து தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் ஆய்வு செய்தார்.மதுரை வந்த அவரை முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி வரவேற்றார். மாவட்ட கல்வி அதிகாரிகள் பங்கேற்றனர்.

பிளஸ் 2 விடைத்தாள் ஒன்று திருத்த ரூ. 20 வழங்க வலியுறுத்தல்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு விடைத்தாள் ஒன்றுக்கு ரூ. 20 வழங்க வேண்டும் என கரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பேஸ்புக் இலவச நெட் வசதி எதிரொலி: கட்டணங்களை குறைக்க செல்போன் நிறுவனங்கள் திட்டம்

பேஸ்புக் நிறுவனம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இலவசமாக இணைய தள வசதியை வழங்க இருக்கிறது என்ற தகவல் வெளியானது. இந்த வசதியை தமிழகம், ஆந்திரா உள்பட 6 மாநிலங்களில் உள்ள ரிலையன்ஸ் செல்போன் வாடிக்கையாளர்கள் பெறலாம் என்றும் முதல் கட்டமாக 33 இணைய தளங்களை இலவசமாக பெறமுடியும் என்றும் அந்த நிறுவனம் அறிவித்தது.

தேர்வு நேரத்தில் கிரிக்கெட் ஜுரம்; பெற்றோர், ஆசிரியர்கள் கவலை

பொதுத்தேர்வு நாட்களில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுவது, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை கவலை அடையச் செய்துள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 5, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 19ல் துவங்குகிறது. தற்போது, செய்முறை தேர்வு நடந்து வருகிறது. 100 சதவீத தேர்ச்சி என்ற இலக்குடன், தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்துவதில் ஆசிரியர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். இந்நிலையில், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று துவங்கியது; அடுத்த மாதம் முழுவதும், இத்தொடர் நடக்கிறது.

16ஆம் தேதி வேலை நிறுத்த நோட்டீஸ்: 11 போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

ஊதிய உயர்வு தொடர்பாக தமிழக அரசு குழு பேச்சுவார்த்தை நடத்த மறு தேதி அறிவிக்காததால் வரும் 16 ஆம் தேதி வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுக்கப்படும் என போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை 4 மாதங்களுக்குள் களைந்து உரிய முடிவு எடுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகரான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும் ஊதிய முரண்பாட்டை களைய அமைக்கப்பட்ட 3 நபர் கமிட்டியின் பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

மத்திய அரசுக்கு இணையான SSTA சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் நான்கு மாதத்திற்குள் வழங்கிட தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு


மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க  கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் நான்கு

ஏ.டி.எம். கார்டு இல்லாமலேயே நினைத்த நேரத்தில் பணம் எடுக்கும் 'புதிய வசதி!!!


ஏ.டி.எம். கார்டு இல்லாமலேயே நினைத்த நேரத்தில் பணம் எடுக்கும் 'கார்டுலெஸ் வித்டிராவல்' (Cardless cash withdrawal) என்ற புதிய வசதியை ஆரம்பக்கட்டமாக, நாடு முழுவதும் 1 லட்சம் ஏ.டி.எம்.கள் மற்றும் பி்.ஓ.எஸ்.களில் கொண்டுவர வங்கிகள் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகின்றன.

கணினி ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்

1.தொடக்க பள்ளிகள் முதல் பள்ளிகள் வரை கடந்த பத்தாண்டுகளாக ஏறத்தாழ 800 கோடி ருூபாய் அளவிற்கு கணினி ,கணினி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
2.ஆனால் ஆசிரியர் பணியிடங்கள் 2000 மட்டுமே ஏற்படுத்தப் பட்டன,
3.கணினி பாடப் புத்தகம் மீண்டும் அச்சடிக்கப்படவில்லை.

சர்வதேச ஆசிரியர் விருது: இறுதிச்சுற்றில் இந்தியர்


அகமதாபாத்தைச் சேர்ந்த, ஆசிரியை கிரண் பிர் சேத்தி, சர்வதேச ஆசிரியர் விருதுக்கான இறுதிச்சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.  துபாயை சேர்ந்த வர்கி அறக்கட்டளை, அனைவரும் கல்வி கற்கும் உரிமையை பெறுதல், சிறந்த ஆசிரியர்களை உருவாக்குதல் உள்ளிட்ட கல்வி சார் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

Friday, February 13, 2015

125 டோல்கேட்டுகளை மூட அரசு முடிவு

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 125 டோல்கேட்டுகளை மூட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். இவற்றில் ஏற்கனவே 61 டோல்கேட்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், இனி பயணிகள் மற்றும் வணிக பயன்பாடு அல்லாத வாகனங்களுக்கான டோல்கேட் கட்டணங்களை ரத்து செய்வது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் 2015: ரூ.3 லட்சம் வரை வருமான வரி விலக்கு எதிர்பார்க்கலாம்...?


வருகிற பிப்ரவரி 28ஆம் தேதி நரேந்திர மோடி தலைமையிலான அரசு இரண்டாவது பட்ஜெட் அறிக்கையை நாடாளுமான்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது. இந்த பட்ஜெட்டை தனிமனிதன் முதல் கார்பரேட் நிறுவனங்கள், அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் வரை அனைத்து தரப்பினரும் மிகுந்த ஆர்வமுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

சிறப்பு பட்டதாரி ஆசிரியர் 200 பேரை நியமிக்க ஆணை

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு பாடம் சொல்லித்தரும் வகையில் புதிதாக 202 சிறப்பு பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும், பின்தங்கிய மாவட்டங்களில் எல்.கே.ஜி. முதல் முதுகலை பட்டம் வரை ஒரே இடத்தில் படிக்கும் வசதி : பட்ஜெட்டில் அறிவிக்க மத்திய அரசு பரிசீலனை

நாடு முழுவதும், கல்விரீதியாக பின்தங்கிய மாவட்டங்களில், ஒரேவளாகத்தில் எல்.கே.ஜி. முதல் முதுகலை பட்டம் வரை படிக்கும் வசதியை அளிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. நாடு முழுவதும், கல்விரீதியாக பின்தங்கிய மாவட்டங்கள் பரவலாக உள்ளன. அங்குள்ள மாணவர்கள், உயர் கல்வி படிப்பதற்காக, பெரிய நகரங்களுக்கு இடம்பெயர்ந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.அத்தகைய மாணவர்களை கருத்தில் கொண்டு, அவர்கள் ஒரே கூடாரத்தில், எல்.கே.ஜி. முதல் முதுகலை பட்டம் வரை படிப்பதற்கான வசதியை அளிக்க மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.

ஆசிரியர் குறைவு ! : ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில்... : தொடக்க கல்வியில் அரசு மெத்தனம்

ஆதிதிராவிடர் நலத்துறையின், 25 தொடக்கப் பள்ளிகள், ஓராசிரியர் பள்ளிகளாக செயல்பட்டு வருகின்றன. பிற பள்ளிகளிலும் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக, மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், 60 தொடக்கப் பள்ளிகள்; 15 நடுநிலைப் பள்ளிகள்; ஒன்பது மேல்நிலைப் பள்ளிகள்; எட்டு உயர்நிலைப் பள்ளிகள், இயங்கி வருகின்றன. இவற்றில், 25 தொடக்கப் பள்ளிகள் ஓராசிரியர் பள்ளியாகவும்; ஏழு நடுநிலைப் பள்ளி கள், தலைமை ஆசிரியர்கள் இல்லாமலும் செயல்பட்டு வருகின்றன.

"பிப்ரவரி 14” அன்று காதலர் தினம்: ஆசிரியர்களுக்கு ஒரு வேண்டுகோள்

”பிப்ரவரி 14” அன்று காதலர் தினம் வர இருக்கிறது. இது குறித்து தாங்கள் அறிவீர்களோ, இல்லையோ - தங்கள் மாணவர்கள் அனைவரும் அறிவர். காதல் குறித்த விழிப்புணர்வு இல்லாத மாணவ பருவத்தில் எதிர் பாலின ஆண்கள் கொண்டுவரும் ”விலை உயர்ந்த அலைபேசியோ, சுடிதாரோ அல்லது சாக்லெட்டோ, அன்றைய தினம் அழைத்து செல்லப்படும் சுற்றுலா தளமோ, சினிமா படமோ” - எதற்கும் ஆசைப்பட்டு ஓரிரு வார்த்தைகள் பேசினால் அது அவர்களின் வாழ்க்கையையே மாற்றிவிடும் என உங்கள் வகுப்பு மாணவிகளுக்கு உணர்த்துங்கள்!

பிளஸ் 2 பொதுத்தேர்வில் எந்த பேனாவை பயன்படுத்த வேண்டும்?

’பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வினாத்தாளில் கருப்பு, நீல மை பேனாக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்’ என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச் 5 ல் துவங்குகின்றன. விடைத்தாள்கள் தைக்கும் பணி முடிந்துள்ளது. விடைத்தாள் பயன்படுத்தும் முறை குறித்து மாணவர்களுக்கு தேர்வுத்துறை அறிவுரை வழங்கியுள்ளது.

அதன் விபரம்: