இன்று காலை முதல் தலைமை செயலகத்தில் முதல்வருடனான சந்திப்புக்கு காத்திருந்த ஜாக்டோ பொறுப்பாளர்கள் பேச்சுவார்த்தையில் சுனுக்கும் ஏற்பட்டுள்ளது. ஜாக்டோ அமைப்பில் 16 பேர் கொண்ட குழு பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டதாகவும், இறுதியில் ஜாக்டோ அமைப்பில் உள்ள முதல் 3 பேர் கொண்ட குழு முதல்வரை சந்திக்க அழைக்கப்பட்டதாகவும், ஆனால் அந்த 3பேர் கொண்ட குழுவும் முதல்வரை சந்திப்பதற்கான அனுமதி (Appointment) பெறவில்லையெனவும்,
அனுமதி பெற்ற பின் வரவும் என அனைவரையும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இதனால் திட்டமிட்டப்படி போராட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இன்று மாலை 4மணிக்கு ஜாக்டோ மீண்டும் கூடவுள்ளது.
தகவல் : திரு.செ.முத்துசாமி, பொதுச் செயலாளர், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.