Pages

Sunday, February 15, 2015

பிளஸ் 2 தேர்வுப் பணிகள் குறித்து தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் ஆய்வு

மதுரை உட்பட ஐந்து மாவட்ட கல்வி அதிகாரிகளுடன், பிளஸ் 2 தேர்வுப் பணிகள் குறித்து தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் ஆய்வு செய்தார்.மதுரை வந்த அவரை முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி வரவேற்றார். மாவட்ட கல்வி அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதில் அவர் பேசியதாவது: மார்ச் 5ல் துவங்கும் பிளஸ் 2 தேர்வில் எவ்வித குளறுபடியும் ஏற்படக்கூடாது. விடைத்தாள்களுடன் முதல் பக்கத்தை இணைக்கும் பணிகள் தற்போது முடிந்துள்ளன.அச்சு படிவம் கொண்ட முதல் பக்கத்தில் ஏதாவது எழுத்து பிழை இருந்தால் அதை பேனாவால் தற்காலிகமாக திருத்தி ஹால் டிக்கெட்வழங்கும்போது, தெளிவாக எழுத வேண்டும். ஹால் டிக்கெட்டுகளில் இடம் பெறும் தகவல்கள்தான் மதிப்பெண் சான்றிதழிலும் இடம் பெறும். அதிகாரிகள் கவனத்துடனும், பதட்டமில்லாமலும் தேர்தல் பணி மேற்கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.