பேஸ்புக் நிறுவனம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இலவசமாக இணைய தள வசதியை வழங்க இருக்கிறது என்ற தகவல் வெளியானது. இந்த வசதியை தமிழகம், ஆந்திரா உள்பட 6 மாநிலங்களில் உள்ள ரிலையன்ஸ் செல்போன் வாடிக்கையாளர்கள் பெறலாம் என்றும் முதல் கட்டமாக 33 இணைய தளங்களை இலவசமாக பெறமுடியும் என்றும் அந்த நிறுவனம் அறிவித்தது.
இந்நிலையில், இந்த சேவையினால் வரக்கூடிய தொழில்போட்டியை சமாளிக்கும் வகையில் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளவும் இணைய தள சேவையை வழங்கி வரும் தொலைபேசி நிறுவனங்கள் இணையதளத்திற்கான டேட்டா கட்டணத்தை குறைக்க கூடும் என்றும், குறிப்பிட்ட சில இணையதளங்களை இலவசமாக வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாகவும் சந்தை நிலவரத்தை ஆய்வு செய்து வரும் கேபிஎம்ஜி என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.