Pages

Saturday, February 28, 2015

டி.இ.ஓ.,க்கள் பதவி உயர்வுக்கு இருவகை பரிந்துரை பட்டியல்: கல்வித் துறையில் குழப்பம்

தமிழகத்தில் மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,க்கள்) பதவி உயர்வுக்கு இரண்டு வகை பணி மூப்பு பட்டியல்கள் பரிந்துரைக்கப்படுவதால் பதவி உயர்வு வழங்குவதில் குழப்பம் நீடிக்கிறது. டி.இ.ஓ.,க்கள் பணிமூப்பு பட்டியல் ஜனவரியில் வெளியிடப்பட்டு, பிப்.,க்குள் பதவி உயர்வு அளிக்கப்படும். இந்த முறை பின்பற்றப்பட்டால் தான் பொதுத் தேர்வுகளை கண்காணிக்க முடியும். ஆனால் சில ஆண்டுகளாக செப்டம்பரில் பதவி உயர்வு வழங்கப்படுவதால் தேர்வுகள் முடிந்து தேர்ச்சி பாதிப்பதாக சர்ச்சை எழுகிறது.
இதை தவிர்க்க பிப்ரவரிக்குள் டி.இ.ஓ.,க்கள் பதவி உயர்வு வெளியிட வேண்டும். தற்போது பிளஸ் 2 தேர்வு துவங்க உள்ள நிலையில் தற்போது 40க்கும் மேற்பட்ட டி.இ.ஓ.,க்கள் பணியிடம் காலியாக உள்ளன.
இது குறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அரசு உத்தரவுப்படி டி.இ.ஓ.,க்கள் பதவி உயர்வுக்கு பள்ளி துணை ஆய்வாளர் (டி.ஐ.,) தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் வயது அடிப்படையில் சிலருக்கு விலக்கு அளித்து டி.ஐ., தேர்வு தேர்ச்சி பெறாதவர்களையும் பதவி உயர்வு 'பேனலில்' இணைத்து அனுப்பினர். பல மாவட்டங்களில் இவ்வாறு தேர்ச்சி பெற்றவர், பெறாதவர் என இரண்டு வகை பட்டியல் அனுப்பப்படுகின்றன. இதை பரிசீலிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.