ஆசிரிய வாழ்வின் பொற்காலத்தில் இருந்தேன். இடைநிலை ஆசிரியையாக என் மாணவ கண்மணிகளுக்கு உண்மையிலேயே அருமையான பல வாசல்களை திறந்த நேரம் அது!
வகுப்பறை புத்தகங்களால் நிரம்பி வழியும்.
செய்திதாள்கள் மாணவிகளால் வாசிக்கப்பட்டு முக்கிய செய்திகள் அடிக்கோடிடப்பட்டு ஆல்பமாக்கப்படும்.
கும்பகோணம் தீ விபத்தும் ஏர்வாடி மனநல காப்பக தீ விபத்தும் மாணவிகளால் ஆல்பமாக தொகுக்கப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.
பெயர்ச்சொல் முதல் வினைச் சொல் வரை அனைத்தும் படங்கள் மூலம் கற்கப்பட்டு தொகுக்கப்பட்டிருந்தன.
மாணவிகளின் தொகுப்புகளே சிறு ஆங்கில இலக்கண புத்தகமோ என வியக்கும் படி இருக்கும்.
ஆங்கில புரிகிறதோ இல்லையோ கட்டாயம் The Hindu -Young world ஆங்கில செய்தி தாளின் இணைப்பு பிள்ளைகள் கரங்களில் தவழும்.
மாமியார் வாசிக்கிறார்களோ இல்லையோ என் மாணவிகள் வாசிப்பர். உள்ளாட்சி அமைப்புக்கு வரும் அனைத்து அரசு இதழ்களையும் ,செய்திகளையும் !(மாமியார் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி !ஆசிரியப்பணியினின்று விருப்ப ஓய்வு பெற்றவர் )தமிழரசு முதல் கவியரசு வரை விவாதம் நடக்கும் வகுப்பறையில் !.
அருகில் உள்ள கண்ணமங்கலம் நூலகம் நிரம்பி வழியும் என் மாணவிகளால் !
நூலகர் 5 மாணவிகளை சேர்க்க பள்ளிக்கு வந்து பேசினார் .அவர் போதும் போதும் என்று திணறும் அளவுக்கு மாணவிகள் உறுப்பினர்களாகினர் !
ஆசிரியர் தினத்தன்று மாணவிகள் ஆசிரியர்களாக ,நான் சக ஆசிரியர்களுடன் மாணவியாக அமர்ந்து ரசிப்பேன் பிள்ளைகளின் ஒரு நாள் ஆசிரிய பணியை !
கொண்டாட்டமும் குதூகலமுமான பயணம் அது !
அப்போது வந்தது ஆண்டாய்வு!!
காலை வணக்கத்தின் போதே அதிகாரிகள் பள்ளிக்கு வந்துவிட்டனர் .
பதற்றத்தில் உடற்கல்வி ஆசிரியர் கொடியை தலைகீழாக கட்டி வைக்க தலைமை ஆசிரியர் அப்படியே ஏற்ற கோபத்தின் உச்சத்திற்கு சென்றார் ஆய்வுக்கு வந்த அதிகாரி .
ஆய்வு தொடங்குகிறது .
நான் ஷேக்ஸ்பியரின் ஆங்கில பாடல் ஒன்றை பாடிகொண்டிருக்கிறேன்.
இடைநிலை பகுதியின் முதல் ஆய்வுக்காக என் வகுப்பில் நுழைகிறார் கோபத்தில் இருந்த அந்த அதிகாரி !
பாடலை நிறுத்திவிட்டு அவரை பார்த்தேன் .
நீங்க தொடருங்கள் என்றார் .
தொடர்ந்தேன் .
பிள்ளைகள் பாடினர் தொடர்ந்து !
கோபம் குறைந்து கவனித்துக்கொண்டிருந்தார் .
பாடலை விவரித்துகொண்டிருந்தேன் .
அதிலுள்ள நயங்களை கூறி கரும்பலகையில் எழுதிவிட்டு அதை தொகுத்து கூறினேன் .
பிறகு நோட்டு புத்தகங்களை கேட்டார் !
பிள்ளைகள் ஆர்வத்துடன் தங்கள் கைவண்ணத்தை காட்ட அசந்து போனவர் சுமார் 20 முறையேனும் 'வெரி குட்' என்று கூறியிருப்பார் !
பிறகு அவர் என்னையும் பிள்ளைகளையும் பாராட்டிக்கொண்டிருப்பதை வெளியில் இருந்து கவனித்து கொண்டிருந்த ஆசிரியை உள்ளே வந்து சொன்னார் ,"அவங்க ஆங்கிலம் படிச்சிருக்காங்க !"(அப்போது நான் இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்து முடித்திருந்தேன் )
ஆய்வுக்கு வந்தவர் என் பாடக்குறிப்பில் வெரி குட் போட்டபடி சொன்னார் ,"ஆங்கிலம் படித்தவர்கள் எல்லாம் ஆங்கிலத்தை அருமையாக நடத்திவிடுகின்றனரா என்ன ?
ஆசிரியை அவரை அடுத்த வகுப்புக்கு வழிகாட்டி விட்டு என்னிடம் வந்தார் ,"அவர் ரொம்ப கோபமா இருந்தார் அதான் உங்க வகுப்புக்கு அனுப்பி வைத்தேன் நீங்க எப்படியாவது சமாளிச்சிடுவீங்கன்னு தெரியும் நான் நினைத்த மாதிரியே உங்க வகுப்பு அவரை கூல் ஆக்கிடுச்சி !"என்றார் .
என்ன சொல்ல !அமைதி காத்தேன் நான் !
அன்று மாலை ஆசிரியர்களுக்கான கூட்டம் !
முதன்மைக்கல்வி அதிகாரி ,அறிவியல் பாடத்தை அறிவியல் ஆசிரியர் மாணவிகளை படிக்க சொல்லி அதற்கு விளக்கம் கூறிக்கொண்டிருந்தார் என்று கடுமையாக சாடினார் .
பாடம் நடத்த தெரியவில்லையெனில் மீண்டும் சென்று பயிற்சியில் சேருங்கள் .மாணவர்களின் வாழ்வில் விளையாடாதீர்கள் என்று வார்த்தைகளை வீசினார் .
அடுத்து என் வகுப்பை பார்வையிட்ட அதிகாரி சொன்னார் ,"தேசியக்கொடியையே தலைக்கீழாக ஏற்றிய பள்ளியில் என்ன பெரிதாக இருந்துவிடப்போகிறது என்று கோபத்தோடு தான் உள்ளே நுழைந்தேன் .
அருமையான வகுப்பு!
அருமையான ஆசிரியை!!
அருமையான கற்பித்தல் முறை!!!
ஒரு பாட்டு பாடினாங்க பாருங்க, அடடா !ஆங்கிலம் கூட இனிக்கிறது தமிழ் போல !"என்று பாராட்டு மழை பொழிந்தார் .
இன்று வரை என்னை உயிர்பிக்கிறது !
அதிகாரிகளின் பாராட்டும் தட்டிக்கொடுத்தலுமே எந்த ஆசிரியரையும் மகிழ்வுடன் செயல்பட வைக்கும் .
எதிர்மறை வார்த்தைகள் எதிர்மறை விளைவுகளை மட்டுமே தரும் ;போலிகளை வளர்த்தெடுக்கும் களமாகவே இருக்கும் !
அனுபவ பகிர்வு :
திருமதி.D.விஜயலட்சுமி ராஜா அவர்கள், ஆங்கில ஆசிரியை , அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கண்ணமங்கலம், திருவண்ணாமலை மாவட்டம்.
Vijayalakshmi Raja
அப்படி ஒன்றும் வியப்பதற்கு இல்லை இருந்தாலும் பாராட்டுக்கள்
ReplyDeleteஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றவர்கள் கவனத்திற்கு
ReplyDeleteநண்பர்களே நாம் விரைவில் பணியில் அமரப்போகிறோம் அதற்கான நாள் வெகுதூரம் இல்ல்லை....
விளக்கம் விரைவில் தெரியும்....
சென்னையில் உள்ள நண்பர்களே நாம் நமது பணிநியமனம் தொடர்ப்பக ஒரு முக்கிய அலுவலகத்தை தொடர்பு கொள்ள இருப்பதால் உடனடியாக சென்னையில் உள்ளவர்கள் மட்டும் அவசரம் தொடர்புக்கு
பி.இராஜலிங்கம் புளியங்குடி
வாட்ஸப்/செல் 95430 79848