Pages

Friday, February 27, 2015

பட்ஜெட்டில் என்னென்ன தேவை? இயக்குனர்களிடம் கருத்து கேட்பு

தமிழக பட்ஜெட்டில், பள்ளிக்கல்வித் துறைக்குத் தேவையான திட்டங்கள் குறித்து, துறை இயக்குனர்களிடம், அரசு கருத்து கேட்டுள்ளது.ஆண்டுதோறும், பட்ஜெட் கூட்டத்தொடர் கூடும் முன், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் நிதித் துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறை செயலகம் சார்பில், கருத்துரு கேட்கப்படும். 

இந்த ஆண்டு கல்வித் துறைக்கு, பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் முக்கியமாக இடம் பெற வேண்டும் என, கல்வித் துறை அதிகாரிகளிடம் கருத்து கேட்கப்பட்டது; இதற்காக, கருத்துக் கேட்பு ஆலோசனைக்கூட்டம் நடந்தது. பள்ளிக்கல்வி முதன்மை செயலர் சபிதா தலைமையிலான கூட்டத்தில்,இயக்குனர்கள் கண்ணப்பன், ராஜன், அறிவொளி, பிச்சை, பூஜா குல்கர்னி, முருகன், இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், துறை செயல்பாடுகளை கணினி மயமாக்க நிதி ஒதுக்கீடு; வகுப்பறைகளுக்கு உபகரணங்கள் வாங்குதல்; மத்திய பாடத் திட்டத்துக்கு இணையாக, நவீன தொழில்நுட்பம் மற்றும் பாடத்திட்டங்களை ஆய்வு செய்தல்; ஆய்வுப் பிரிவு உருவாக்குதல் போன்ற பல்வேறு அறிவிப்புகளுக்கு, இயக்குனர்கள் கோரிக்கை விடுத்து, கருத்துரு அளித்துள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.