Pages

Tuesday, February 24, 2015

உபரி ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள் விரைவில் பணியிட மாற்றம்

மாநிலம் முழுவதும், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள் பிற ஒன்றியங்களுக்கும், மாவட்டங்களுக்கும், விரைவில் பணியிட மாற்றம் செய்யப்படவுள்ளனர்.


தொடக்கக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஊராட்சி தொடக்கப் பள்ளிகள், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விவரங்களையும், உபரி ஆசிரியர்கள் பட்டியலையும், 25-ம் தேதிக்குள் அனுப்பிவைக்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உபரி பட்டியலில் இடம்பெறும் ஆசிரியர்கள், கலந்தாய்வின்படி பிற ஒன்றியங்கள், மாவட்டத்துக்குள் மற்றும் பிற மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.

ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும், சரியும் மாணவர்கள் எண்ணிக்கை, விதிமுறைகள் மீறி, நிர்வாக மாறுதல் என்ற பெயரில் வழங்கப்படும் இடமாறுதல்கள் காரணமாகவே, உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அந்தந்த ஆண்டு துவக்கத்தில் ஆசிரியர், மாணவர்கள் எண்ணிக்கையை கணக்கிட்டு கலந்தாய்வு நடத்தினால், உபரி, பற்றாக்குறை என்ற பேச்சுக்கு இடமில்லாமல் போகும்" என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.