சிவகங்கையில் "ஜேக்டோ' கூட்டமைப்பு கூட்டம் நடந்தது. பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் கோவிந்தராஜூ தலைமை வகித்தார். இது குறித்து தொடக்கபள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் ஜோசப் சேவியர் கூறியதாவது: பங்களிப்பு பென்ஷனை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டம் வேண்டும். அகவிலைப்படி 50 சதவீதத்தை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டும்.
ஆறாவது சம்பளக்குழுவில் மத்திய அரசு வழங்கிய அனைத்து படிகளையும், தமிழக ஆசிரியர், அலுவலர்களுக்கு வழங்க வேண்டும் உட்பட 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரையிலான ஆசிரியர் சங்கங்கள் இணைந்து "ஜேக்டோ'வை உருவாக்கியுள்ளோம். இந்த அமைப்பு சார்பில் பிப்.22ல் மாவட்ட ஆயத்த கூட்டம் நடக்கும். மார்ச் 8ல் தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கோரிக்கையை விளக்கி ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். ஆசிரியர் சங்கங்களை அரசு அழைத்து பேச முன்வராவிடில் அரசு பள்ளிகளை மூடுதல், பஸ் மறியல், உண்ணாவிரதம், சிறை நிரப்பும் போராட்டங்களில் ஆசிரியர்கள் ஈடுபட முடிவு செய்துள்ளோம்,என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.