கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் தவணை சொட்டு மருந்து 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 2வது தவணை முகாமை சிறப்பாக நடத்த மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் 2ஆம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் 22-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச் சாவடிகள், அனைத்து பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சுங்கச் சாவடிகள் உள்ளிட்ட இடங்களில், போக்குவரத்து வசதி குறைவான பகுதிகளிலும் கூட முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முகாம் பணிகளில் பொது சுகாதாரத் துறை, கல்வித்துறை, சமூகநலத்துறை, வருவாய்த் துறை, தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்டவற்றின் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.