தேவகோட்டை நகர சிவன்கோவிலில் நடைபெறும் வார வழிபாட்டுக் கூட்டதில் பரிசு பெற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவிகளுக்கும், ஊக்குவித்த பெற்றோருக்கும் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.
தேவகோட்டை நகர சிவன் கோவிலில் தொடர்ந்து பல வருடங்களாக வாரம் தோறும் வெள்ளிக் கிழமையில் வாரவழிபாட்டுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.இதில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவிகள் சுமார் 25 பேர் கலந்துகொள்கின்றனர்.வாரம் தோறும் நிகழ்ச்சியில் தவறாமல் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு வருடம்தோறும் சிவராத்திரி அன்று பரிசுகள் வழங்கி உற்சாகபடுத்தி வருகின்றனர்.இந்த வருடம் தொடர்ந்து 42 வாரங்கள் கலந்து கொண்ட இப்பள்ளி 2ம் வகுப்பு மாணவி ஜனஸ்ரீ,அவரது தங்கை ஜெயஸ்ரீ (40 வாரங்கள்) ஆகியோர் உட்பட தனம்,சிநேகப்பிரியா,பிரியதர்ஷினி,பூவதி,ராஜலெட்சுமி,சமயபுரத்தாள் போன்றோருக்கு முதல் வழங்கப்பட்டது.மங்கையர்க்கரசி,சுமித்ரா,ஆகியோர் இரண்டாம் பரிசு பெற்றனர்.பரிசுகள் பெற்ற மாணவிகளுக்கும்,கலந்து கொண்ட மாணவிகளுக்கும்,தொடர்ந்து 42 வாரங்கள் கலந்து கொள்ள ஊக்க படுத்திய தனஸ்ரீ மற்றும் ஜெயஸ்ரீ ஆகியோரின் தயார் திருமதி.சித்ரா அவர்களுக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்,ஆசிரய ,ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.தொடர்ந்து அதிக மாணவ,மாணவியர் வார வழிபாட்டு கூட்டதில் கலந்து கொண்டு பரிசுகள் பெற முயற்சி எடுக்க வேண்டும் என்று விழாவில் மாணவரிகளிடம் கேட்டுகொள்ளப்பட்டது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.