Pages

Sunday, February 22, 2015

தேர்வு பயம் போக்க ஆலோசனை: '104'ல் 650 மாணவர்கள் அழைப்பு

அரசுத் தேர்வுகள் துவங்க உள்ள நிலையில், '104'ல் ஆலோசனை பெறும், மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தினமும், 650 பேர் வரை ஆலோசனை பெறுகின்றனர்.

தமிழகத்தில், அவசர கால, 108 ஆம்புலன்ஸ் சேவை உள்ளது போல், தொலைபேசி வழியே மருத்துவ உதவிகள், மன நல ஆலோசனைகள் பெற, '104' மருத்துவ சேவை பயன்பாட்டில் உள்ளது.
இதற்கு, மக்கள் மத்தி யில் நல்ல வரவேற்பு உள்ளது. அரசு பொதுத்தேர்வுகள் 
துவங்க உள்ள நிலையில், தேர்வு பயம் போக்க, மனநல ஆலோசனை பெற, '104' உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம் என, அரசு அறிவித்து உள்ளது. தற்போது, மாணவர்கள் இந்த மையத்தை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். ஒரே நாளில், 650 மாணவர்கள், தேர்வு பயம் போக்க ஆலோசனை பெற்றுள்ளனர்.சேவை மைய விழிப்புணர்வு மேலாளர் பிரபு தாஸ் கூறியதாவது: தேர்வு நேரம் நெருங்கு வதால், பல மாணவர்களுக்கு ஒரு வித பயம் தொற்றிக் கொள்கிறது. அவர்களுக்கு, '104' உதவி மையம் நல்ல தீர்வாக உள்ளது. சராசரியாக, தினமும்,
650 மாணவர்கள் ஆலோசனை பெறுகின்றனர். நேற்று முன்தினம், அபுதாபியில் இருந்து டாக்டர் ஒருவர், பிளஸ் 2 தேர்வு எழுதும் தன் மகனுக்கு, ஆலோசனை கொடுக்கும் படி அழைத்தார். மாணவர்கள் எந்த நேரத்திலும், இந்த மையத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.