சட்டசபையில் இன்று உறுப்பினர்கள் க.அன்பழகன், டில்லிபாபு ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து உயர்கல்வி துறை அமைச்சர் பழனியப்பன் கூறியதாவது: தமிழ்நாட்டில் 7 அரசு கல்வியியல் கல்லூரி உள்பட மொத்தம் 689 கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. ஓராண்டு படிப்பாக இருப்பதை 2 ஆண்டு படிப்பாக நீட்டிக்க தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் ஒரு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த ஆண்டு முதல் அனைத்து கல்வியியல் கல்லூரிகளிலும் 2 வருட படிப்பாக மாற்றி அமைக்க சொல்லியிருந்தது. இதை அமுல்படுத்த கட்டிட வசதி, கூடுதல் ஆசிரியர்கள் தேவைப்படும் நிலை உள்ளது.
இதனால் இந்த ஆண்டு இதை செயல்படுத்த முடியாது என்றும் இதற்கு கால அவகாசம் வேண்டும் என்றும் 2016–17–ம் ஆண்டுகளில் இதை தமிழ்நாட்டில் செயல்படுத்தலாம் என்றும் கருத்துரு அனுப்பி உள்ளோம். எனவே உடனே இதை அமுல்படுத்த வாய்ப்பில்லை. சுயநிதி கல்வியியல் கல்லூரி கூட்டமைப்பின் சார்பில் கோர்ட்டில் ஏற்கனவே தொடரப்பட்ட இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. விசாரணைக்கு ஏற்ப அரசு முடிவெடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.