Pages

Tuesday, February 24, 2015

வித்தியாசமான சில மாணவர்கள்...

சில மாணவர்கள் வித்தியாசமான பழக்கங்களைக் கொண்டிருப்பார்கள். அவர்கள், உங்களுடைய வகுப்புத் தோழர்களாகவோ அல்லது பள்ளித் தோழர்களாகவோ அல்லது உங்களின் அருகாமையில் வசிப்பவராகவோ அல்லது உங்களுக்கு அறிமுகமானவராகவோ இருக்கலாம்.


தேர்வின்போதான அவர்களின் சில பழக்கவழக்கங்கள் முரண்பாடானவையாக இருக்கும் மற்றும் பார்ப்பவர்களுக்கு தவறானவையாகவும் தோன்றும். ஆனால், சம்பந்தப்பட்ட  மாணவர்களை, அந்தப் பழக்கங்கள் எதுவும் பாதிக்காது. அவர்களின் மதிப்பெண் நன்றாகவே இருக்கும்.

சில உதாரணங்கள்

* தேர்வுக்கு முதல்நாளில், சினிமா தியேட்டரில், நள்ளிரவுக் காட்சிக்கு(night show) சென்று வருவார்கள்.
* தேர்வுக்கு முந்தைய நாள், பகல் முழுவதும் நண்பர்களுடன் விளையாடிவிட்டு, இரவு மட்டும் படிப்பார்கள்.
* சிலர், தேர்வுக்கு முந்தைய நாள் இரவில், அரட்டையடிப்பார்கள்.
* சிலர், தேர்வு நெருக்கத்தில், தேவையில்லாமல் ஊர் சுற்றிக்கொண்டு இருப்பார்கள்.
* சிலர், தேர்வுக்கு முதல்நாள், வீட்டில் அமர்ந்து, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
* வேறுசிலர், இன்னும் பல முரண்பாடான செயல்களை செய்து கொண்டிருப்பார்கள்.

ஆனால், இதுபோன்ற மாணவர்களின் தேர்வு மதிப்பெண்கள், 75% முதல் 95% வரை இருக்கும்.

எனவே, அந்த மாணவர்கள், அதுபோன்று முரண்பாடாக நடந்து கொண்டதால்தான் இவ்வளவு மதிப்பெண்கள் எடுக்கிறார்கள், எனவே நாம் மட்டும் எதற்காக, முக்கி முக்கி படிக்க வேண்டும் என நினைத்து, நீங்களும் அவர்களைப்போல் இருக்க முயல வேண்டாம்.

ஏனெனில் மேற்சொன்னவர்கள், விதிவிலக்கானவர்கள். அவர்கள், ஏற்கனவே நன்றாகப் படித்து, அவற்றை நினைவில் வைத்திருப்பார்கள் அல்லது பாடங்களின் மீதான அவர்களின் கவனம் மற்றும் புரிந்துகொள்ளும் திறன்கள் மற்றும் தேர்வெழுதும் திறன்கள் மற்றும் நினைவுத் திறன்கள் வித்தியாசமானதாய் இருக்கும்.

அவர்களுக்கு, கடைசி நேரத்தில், விழுந்து விழுந்து படிப்பதோ அல்லது வேறு செயல்களை தவிர்த்துவிட்டு, புத்தகமே கதி என்று கிடப்பதோ பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், இதுபோன்ற மாணவர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவானவர்களே!

எனவே, இந்த விதிவிலக்கானவர்களை பின்பற்றுவதற்கு, மற்ற மாணவர்களும் முயன்றால், அவர்களுக்கு எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டுவிடும்.

எனவே, உங்கள் வழியில் நீங்கள் செல்லுங்கள். அவர்களின் வழியில் அவர்கள் செல்லட்டும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.