Pages

Friday, February 13, 2015

125 டோல்கேட்டுகளை மூட அரசு முடிவு

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 125 டோல்கேட்டுகளை மூட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். இவற்றில் ஏற்கனவே 61 டோல்கேட்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், இனி பயணிகள் மற்றும் வணிக பயன்பாடு அல்லாத வாகனங்களுக்கான டோல்கேட் கட்டணங்களை ரத்து செய்வது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் டோல்கேட்களில் வாகனங்கள் அதிக நேரம் காத்திருப்பதையும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதையும் தவிர்ப்பதற்காக அனைத்து டோல்கேட்களையும் மூடிவிட்டு இ-டோல் முறையை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.