ஏ.டி.எம். கார்டு இல்லாமலேயே நினைத்த நேரத்தில் பணம் எடுக்கும் 'கார்டுலெஸ் வித்டிராவல்' (Cardless cash withdrawal) என்ற புதிய வசதியை ஆரம்பக்கட்டமாக, நாடு முழுவதும் 1 லட்சம் ஏ.டி.எம்.கள் மற்றும் பி்.ஓ.எஸ்.களில் கொண்டுவர வங்கிகள் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகின்றன.
இந்த புதிய வசதியில் ஒருவர் எஸ்.எம்.எஸ். அல்லது ஆப்ஸ் வழியாக ஸ்மார்ட்போனில் இருந்து பணத்தை டிரான்ஸ்பர் அல்லது வித்டிராவல் செய்ய வங்கிக்கு ரெக்வஸ்ட் வைக்க வேண்டும். பிறகு வங்கியிலிருந்து தனித்தனியாக இரண்டு குறியீடுகளை நமது மொபைலுக்கு அனுப்புவார்கள். அந்த குறியீடுகளை ஏ.டி.எம்-க்கு சென்று பதிவு செய்தால் பணத்தை கார்டு இல்லாமலேயே வித்டிராவல் செய்து கொள்ளலாம்.
இந்த சேவையை வழங்க வங்கிகள் மல்டி பேங்க் ஐ.எம்.டி. சிஸ்டத்தில் உறுப்பினராக வேண்டும். அதற்காக வங்கிகள் அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை. அவர்களின் சாப்ட்வேரில் உள்ள பிளாக்கை ரிமூவ் செய்தாலே போதும். இந்த வசதியை ஏ.டி.எம் மட்டுமல்ல, ஷாப்பிங் மால் முதல் பெட்ரொல் பல்குகள் வரை பயன்படுத்தப்படும் பாயிண்ட் ஆஃப் சேல் (பி.ஓ.எஸ்.)-களிலும் பயன்படுத்தலாம். ஏற்கனவே, இந்த வசதியை பேங்க் ஆஃப் இந்தியா, கோட்டக் மஹிந்திரா பேங்க், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி போன்ற வங்கிகள் வழங்கி வருகின்றன.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.