Pages

Wednesday, February 18, 2015

மாத சம்பளம் பெறுவோர் வருமானவரி விலக்கு பெறும் வகையில் பட்ஜெட் இருக்கும் !!

மத்திய பட்ஜெட்டில் வருமான வரி பிடித்தம் ரூ.10 லட்சம் வரை 10 சதவீதமாக குறைக்க அருண்ஜெட்லி முடிவு செய்துள்ளார். பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் வருகிற 23–ந் தேதி கூடுகிறது. இதில் மத்திய பட்ஜெட் 28–ந் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. நிதி மந்திரி அருண்ஜெட்லி 2015–16 ம் ஆண்டுக்கான மத்திய அரசின் வரவு – செலவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்கிறார்.

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசின் முதலாவது பட்ஜெட் இதுவாகும். இதில் நடுத்தர வர்க்கத்தினர் மாத சம்பளம் பெறுவோர் மிகவும் எதிர்பார்ப்பது வருமான வரிச் சலுகைதான்.
எனவே முதலாவது பட்ஜெட் என்பதால் மாதச் சம்பளம் பெறுவோரின் எதிர்பார்பை பூர்த்தி செய்யும் வகையில் வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படும் என்று தெரிகிறது. தற்போது வருமானவரி உச்சவரம்பு ரூ.2 ½ லட்சமாக உள்ளது. அது உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதே போல் வருமானவரி பிடித்தம் செய்வதில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. தற்போது ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சம் வரை வருமானவரி பிடித்தம் 10 சதவீதமாகவும், ரூ.5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை 20 சதவீதமாகவும், ரூ. 10 லட்சத்துக்கு மேல் 30 சதவீதமாக உள்ளது.
வரும் பட்ஜெட்டில் வருமானவரி பிடித்தம் ரூ.10 லட்சம் வரை 10 சதவீதம் எனவும், 10 லட்சத்தில் இருந்து 20 லட்சம் வரை 20 சதவீதமாகவும், 20 லட்சத்துக்கு மேல் 30 சதவீதமாகவும் மாற்றி அமைக்கப்படுகிறது.
மேலும், மாத சம்பளம் பெறுவோர் வருமானவரி விலக்கு பெரும் வகையில் பல்வேறு செலவினங்களின் விகிதாச்சாரம் அதிகரிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.