Pages

Monday, February 23, 2015

மாநிலம் தழுவிய போராட்டம்:ஜேக்டோ கூட்டமைப்பு அறிவிப்பு

“மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்காவிடில் மாநில தழுவிய போராட்டம் நடைபெறும், என ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு (ஜேக்டோ) வேண்டுகோள் விடுத்துள்ளது.திண்டுக்கல்லில் 28 ஆசிரியர் சங்கங்கள் ஒன்றிணைந்த போராட்ட ஆயத்த மாநாடு நடந்தது.

இதில் ஜேக்டோ மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் வின்சென்ட் பால்ராஜ், பேட்டரிக் ரெய்மாண்ட் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 1.75 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். மாநில அரசு ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும். தொகுப்பூதியத்தில் மாநிலம் முழுவதும் 58 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும். பிப்.25ல் ஊதிய ஒப்பந்தத்திற்கான பேச்சு வார்த்தைக்கு முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார். பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தால் மார்ச் 8ல் மாவட்ட தலைநகரங்களில் ஊர்வலம், ஆர்ப்பாட்டங்களை நடத்துவோம், என்றனர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் காளிமுத்து, தமிழக ஆசிரியர் கூட்டணி நிர்வாகி ஜான்பீட்டர், தமிழ்நாடு முதுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிர்வாகி சலோத்ராஜா உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.