Pages

Thursday, February 19, 2015

பிளஸ் 2 தேர்வர்களின் இறுதிப்பட்டியல் தயார்; இணை இயக்குனர் கோவையில் ஆய்வு

கோவை மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வுகளுக்கான ஏற்பாடுகள் குறித்து, கல்வித்துறை இணை இயக்குனர் கருப்புசாமி நேரடி ஆய்வுகளை மேற்கொண்டார்.

பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், மார்ச் முதல் வாரத்தில் துவங்கவுள்ளது. கோவை வருவாய் மாவட்டத்தில், 37 ஆயிரத்து 126 மாணவ, மாணவிகள் பங்கேற்கவுள்ளனர். மேலும், தேர்வுகளுக்கான 93 மையங்களும், 10 இணைப்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.கோவையில், தேர்வு மையங்கள் மற்றும் இணைப்பு மையங்களில் பாதுகாப்புகள், அடிப்படை வசதிகள், வினா-விடை தாள்களின் பாதுகாப்பு மையங்கள் உள்ளிட்டவைகளை இணை இயக்குனர் கருப்புசாமி நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேர்வு மையங்கள், இன்று ஆய்வு செய்யப்படவுள்ளது.தற்போது, செய்முறை தேர்வுகள் நடந்து வரும் நிலையில், தேர்வெழுதவுள்ள மாணவர்களின் இறுதிபட்டியல் உறுதிசெய்யப்பட்டு, தேர்வுக்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. வினாத்தாள் தைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மேலும், முதன்மை கண்காணிப்பாளர்கள், கண்காணிப்பாளர்கள், அறை கண்காணிப்பாளர்கள் தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.
முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி கூறுகையில், ''பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாட்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இணை இயக்குனர், தேர்வு மையங்களில், குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும், தேர்வு மையங்கள், இணைப்பு மையங்களின் பாதுகாப்பையும் ஆய்வு செய்து உறுதிசெய்தார்,'' என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.