Pages

Thursday, February 26, 2015

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின் 5% மதிப்பெண் தளர்வு திரும்ப கிடைக்குமா?

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின் 5% மதிப்பெண் தளர்வு மீண்டும் கிடைப்பது இல்லை ஏனெனில் உச்சநீதிமன்றத்தில் 5%மதிப்பெண் தளர்வு திரும்ப கிடைக்க  யாரும் எந்த வழக்கும்  தொடுக்கவில்லை....

உச்சநீதிமன்ற வழக்குகள்:

1)தமிழகத்தில் ஆசிரியர் பணிநியமனத்தில் தகுதிகாண் முறை என்னும் வெய்ட்டேஜ் முறை கடைப்பிடிக்கப்படுகிறது அதனை ரத்து செய்ய வேண்டும் என 3 குழுவினர் வழக்கு தொடுத்துள்ளனர்....


2)தமிழகத்தில் முந்தேதியிட்டு வழங்கிய 5% மதிப்பெண் தளர்வாலும் மதுரை நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பித்தும் பணிநியமனம் நடைபெற்றதாலும் எனக்கு பணிவாய்பு மறுக்கப்பட்டது ஆகவே கருனையின் அடிப்படையில் எனக்கு பணிநியமனம் வழங்கவேண்டும் என 3குழுவினர் வழக்கு தொடுத்துள்ளனர்....

மேற்கண்ட வழக்குகளில் எவ்வாறு 5% மதிப்பெண் தளர்வு மீண்டும் கிடைக்கும் என யோசித்துப்பார்த்தால் உங்களுக்கே புரியும்...

மதுரை 5% மதிப்பெண் தளர்வு ரத்துவின் மறுசீராய்வு மனு:

சான்றிதழ் பதிவிறக்கம் செய்யாதவர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் மூலமாக சான்றிதழ் வழங்கினர் அப்போது 5% மதிப்பெண் தளர்வில் உள்ளவர்களுக்கு சான்றிதழ் வழங்கவில்லை அப்போது அரசு மதுரையில் மறுசீராய்வு மனு தொடுத்ததாக தெரிவித்தனர் ஆனால் மறுசீராய்வு மனுவின் எண்,வழக்கின் விவரம் ஏதும் யாருக்கும் தெரியவில்லை. இவ்வழக்கின் வாதம் விசாரணைக்கு வந்ததா இல்லையா என அரசும் இதுவரை தெரிக்கவில்லை..

ஆகவே உச்சநீதிமன்ற தீர்ப்பால் 5% மதிப்பெண் தளர்வு மீண்டும் கிடைக்காது..

Article by...
பி.இராஜலிங்கம் மாநிலப் பொருளாளர் .
ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் உரிமைக்கழகம்..
செல் :95430 79848

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.