பிரதமர் நரேந்திரமோடி ‘மன் கி பாத்’ என்ற தலைப்பில் வானொலியில் மாதம் மாதம் தொடர்ந்து பேசி வருகிறார். வானொலியில் அவர் மாணவர்களுக்கு சில ஆலோசனைகள் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது: மாணவ-மாணவிகளே நீங்கள் உங்களை தேர்வுக்கு தயார் செய்து கொள்ளும் இந்நேரத்தில் நானும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.
நான் என்னுடைய பள்ளிப் பருவத்தில் மிகவும் சாதாரணமான மாணவனாகத்தான் இருந்தேன். நான் எழுதிய தேர்வுகளில் மிகவும் நல்ல மதிப்பெண்கள் எல்லாம் எடுக்கவில்லை. என்னுடைய கையெழுத்தும் மிகவும் மோசமாகத்தான் இருந்தது.
தேர்வு மோசமாக எழுதிவிட்டால் வாழ்க்கையில் எல்லாமே மோசமாகிவிடும் என்று பலரும் நினைக்கிறார்கள். அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது. தேர்வுகளை மிகவும் சகஜமாக அணுகுங்கள். எல்லாம் நல்லதாகவே நடக்கும்.
தேர்வை எதிர்கொள்ள மாணவர்களுக்குவழிகாட்டியாக விளங்கும் ஆசிரியர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
படி படி என்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நெருக்கடி தராமல் , மற்றவர்களை விட நம் குழந்தைகள் சிறந்த படிப்பாளியாக வரவேண்டும் என்ற நோக்கத்தில் தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள் அணுக வேண்டும்.
உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் தான் இந்த நாட்டின் வருங்காலத்தை வடிவமைக்கும் சிற்பிகள் இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.