”பிப்ரவரி 14” அன்று காதலர் தினம் வர இருக்கிறது. இது குறித்து தாங்கள் அறிவீர்களோ, இல்லையோ - தங்கள் மாணவர்கள் அனைவரும் அறிவர். காதல் குறித்த விழிப்புணர்வு இல்லாத மாணவ பருவத்தில் எதிர் பாலின ஆண்கள் கொண்டுவரும் ”விலை உயர்ந்த அலைபேசியோ, சுடிதாரோ அல்லது சாக்லெட்டோ, அன்றைய தினம் அழைத்து செல்லப்படும் சுற்றுலா தளமோ, சினிமா படமோ” - எதற்கும் ஆசைப்பட்டு ஓரிரு வார்த்தைகள் பேசினால் அது அவர்களின் வாழ்க்கையையே மாற்றிவிடும் என உங்கள் வகுப்பு மாணவிகளுக்கு உணர்த்துங்கள்!
அறியாத வயதில் மாணவிகள் ””தங்களை சுற்றி வரக்கூடிய வேலை வெட்டி இல்லாதவர்களையோ, பரீட்சைகளில் தேர்ச்சி பெறாமல் சும்மா சுற்றுபவர்களையோ பார்த்து ஆசைப்படலாம். மேலும் படித்து ஓரளவு தெளிவு பெற்ற பிறகு ”இது அவசியமற்ற செயல், தங்களுக்கு பொருத்தமானவன் இவன் இல்லை” என உணர்ந்து ஒதுங்கினால் கூட, வயது குறைந்த பெண்களை வசியம் செய்யக்கூடிய இவர்களில் ஒருசிலர் அப்பெண்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுப்பர். அப்படியும் தங்களை ஏற்றுக்கொள்ள வில்லை எனில் அவர்களின் வாழ்க்கையை சிதைக்கும் பொருட்டு ”ஆசிட் வீச்சு” சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்”” - என்பதை சுட்டிக்காட்டவும். இதெற்கெல்லாம் காரணம் அறியாத வயதில் அவசரப்பட்டு அவர்களிடம் ஒரு சில தினங்கள் ஒதுங்கி நின்று பேசியது தான் என்றும், அவர்கள் தரக்கூடிய அல்ப பொருட்களுக்கு ஆசைப்பட்டதும் தான் என அவர்களுக்கு புரிய வையுங்கள்!
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.