Pages

புதிய ஓய்வூதியம் சார்பாக அரசு வெளியிட்டுள்ள பரிந்துரைகளுக்கு, சந்தாதாரர்களின் கருத்து தெரிவிக்க உத்தரவு

TO DOWNLOAD PFRDA - EXPOSURE DRAFT ON PROPOSED OPERATIONAL WITHDRAWAL PROCESS FOR NPS SUBSCRIBERS CLICK HERE...

PFRDA 26.12.2013 அன்று புதிய ஓய்வூதிய தொழிலாளர்களின் ஓய்வூதியம் பெறுவது தொடர்பான தனது பரிந்துரையை தனது வலைதளத்தில் (pfrda.org.in) வெளியிட்டுள்ளது. இது குறித்து கருத்து ஏதேனும் தெரிவிக்க விரும்பினால் 31/01/2014 ஆம் தேதிக்குள் k.sumit@pfrda.org.in என்கின்ற மின்அஞ்சல் முகவரிக்கு அனுப்பும்படி இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.ஏ.எஸ். அந்தஸ்து பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த பத்து அதிகாரிகளுக்கு பணியிடங்களை ஒதுக்கி தமிழக அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது

சமூக பாதுகாப்புத் திட்டங்கள் இயக்குநர் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி ஆகிய இரண்டு பணியிடங்கள் ஐ.ஏ.எஸ். அந்தஸ்து நிலைக்கு உயர்த்தப்பட்டு இரண்டு பேருக்கு பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த இரு பணியிடங்களும் ஒரு ஆண்டு அல்லது தேவைக்கேற்ப ஐ.ஏ.எஸ். அதிகாரி அந்தஸ்து நிலைக்கு உயர்த்தப்பட்டிருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

2013ஆம் ஆண்டில் கல்வித்துறையில் நிகழ்ந்த நிகழ்வுகளின் தொகுப்பு

ஜனவரி

04: மத்திய அரசு வழங்கும் மானியம், பயனாளிகளிடம் நேரடியாக சென்று சேரும் வகையில்  "உங்கள் பணம் உங்கள் கையில்" திட்டம் நாடு முழுவதும், 20 மாவட்டங்களில் ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது

05: "பள்ளிகளுக்கு மாணவ, மாணவியர் மொபைல் போன் கொண்டு வருவது தடை செய்யப்படுவதுடன், அடுத்த கல்வியாண்டிலிருந்து மாணவியருக்கு தனியாக பேருந்துகள் இயக்கப்படும்" என, புதுச்சேரி கல்வியமைச்சர் தியாகராஜன் அறிவிப்பு.

ஒரு நபர் குழு திரு . ராஜீவ் ரஞ்சன் .இ.ஆ.ப., அவர்களால் டிப்ளமோ கல்வித்தகுதியை காரணம் காட்டி ஊதியம் 5200-20200+2800 -இருந்து 9300-34800+4200 மாற்றி அமைக்கப்பட்ட பணியிடங்கள்

1) Training Instruc 5200-20200+2800 - 9300-34800+4200 
2) Hostal Superintendent and Physical Training Officer 5200-20200+2800 - 9300-34800+4200 
3) Laboratory Assistant 5200-20200+2800 - 9300-34800+4200 
4) Laboratory Technician Grade-1 5200-20200+2800 - 9300-34800+4200 
5) Laboratory Technician Grade-II 5200-20200+2800 - 9300-34800+4200 
6) Dental Hygienist/Dental Mechanic 5200-20200+2800 - 9300-34800+4200 
7) Refractionist/opthalmic Assistant/Opticial / Optometrist 5200-20200+2800 - 9300-34800+4200  

அனைத்து கல்லூரிகளிலும் பயோமெட்ரிக் சிஸ்டம் கொண்டுவர ஏற்பாடு

கர்நாடகத்தில், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்பட, அனைத்து கல்லூரிகளிலும் பயோமெட்ரிக் அமைப்பை அறிமுகப்படுத்த, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

புதிய விதிமுறைகள் டிப்ளமோ படிப்புகளுக்கு பொருந்தாது: யு.ஜி.சி அறிவிப்பு

நாட்டின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் வழங்கும் பட்டப் படிப்புகளுக்கென்று உருவாக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகள், டிப்ளமோ படிப்புகளுக்கு பொருந்தாது என்று மனிதவள அமைச்சகம் மற்றும் யு.ஜி.சி ஆகியவை அறிவித்துள்ளன.

இரு மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு, முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு

மதுரை மாநகர மாவட்டக் கல்வி அலுவலர் திரு.மதியழகன் அவர்கள்   காஞ்சிபுரம் அகஇ மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது,

பதவி உயர்வு வழங்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல்

"தொடக்கக் கல்வியில் பணி நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கும், முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும்" என கோரிக்கை எழுந்துள்ளது.

மழலையர் பள்ளி ஆசிரியைகள் பணி நிரந்தரம் எப்போது?

 சென்னை மாநகராட்சி மழலையர் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகள் உரிய பயிற்சி முடித்தும், பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர். இதுகுறித்து, உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கலக்கம்

தமிழகத்தில், அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், உபரி ஆசிரியர்களை கணக்கெடுத்து, அவர்களை இடமாற்றம் செய்ய, கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. பல லட்ச ரூபாய் செலவு செய்து, பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர். 

இயற்கை விவசாயக் கல்வியை வலியுறுத்திய விஞ்ஞானி நம்மாழ்வார் மரணம்

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 75.

குரூப்-1 பணியிடம் அளிப்பதில் விதிமீறல்

குரூப்-1 காலி பணியிடங்களை, உரிய விதிமுறைப்படி, அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு (டி.என்.பி.எஸ்.சி.,), அரசு உயர் அதிகாரிகள் அளிப்பதில்லை எனவும், இதன் காரணமாக சொற்ப இடங்களே காட்டப்படுவதாகவும் தேர்வர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதை டி.என்.பி.எஸ்.சி., வட்டாரமும் ஆமோதித்துள்ளது.

பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கும் யு.பி.எஸ்.சி

பேராசிரியர், உதவிப் பேராசிரியர், கண்காணிப்பாளர், சீனியர் லெக்சரர் உள்ளிட்ட பல பணி நிலைகளுக்கு ஆட்களை நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்களை UPSC வரவேற்கிறது.

பொறியியல் கல்வியின் தரம் குறைவு: பல்லம் ராஜு

இன்ஜினியரிங் கல்லூரிகளில் இருந்து, படித்து முடித்து வௌயே வரும் பட்டதாரிகளின் எண்ணிக்கை, அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எனினும், அவர்களில் பலருக்கு வேலை கிடைக்கவில்லை.

தேர்வு எழுதுவோர் விவரம் அடுத்த வாரம் வெளியாகிறது

பொது தேர்வு எழுதுவோர் விவரங்களை, அடுத்த வாரம் வெளியிட, தேர்வுத் துறை திட்டமிட்டு உள்ளது. பிளஸ் 2 தேர்வு, மார்ச், 3ல் துவங்கி, 26 வரையிலும், 10ம் வகுப்பு தேர்வு, மார்ச், 26ல் துவங்கி, ஏப்ரல், 9 வரையிலும் நடக்கிறது.

பூம்புகார் கடலில் தத்தளித்த மாணவர்களை காப்பாற்றிய ஆசிரியர் நீரில் மூழ்கி சாவு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள், அரையாண்டு தேர்வு முடிந்து சுற்றுலா சென்றனர். 6, 7, 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 28 பேர், பிளஸ் 2 கம்ப்யூட்டர் ஆசிரியர் பிரசாந்த் (25) உட்பட 3 ஆசிரியர்கள் என 31 பேர் ஒரு வேனில் பயணம் செய்தனர்.

ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் மருத்துவ காப்பீட்டுத் திட்டம்




தமிழகத்தில் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

டிட்டோஜாக் தலைவர்கள் அதிகாரிகளுடன் சந்திப்பு, இன்றைய சந்திப்பின் போது தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியும் கலந்து கொண்டது

இன்று சென்னையில் டிட்டோஜாக்கில் உள்ள 7 சங்க தலைவர்களும் தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வி செயலர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் சந்தித்து மனு அளித்தனர். பின்பு தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே முடிவின் படி அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து இன்றும், நாளையும் மனு கொடுக்க இருந்தனர்.

அரசு, தனியார் நிறுவனங்களில் பொங்கலுக்கு முன்னால் ‘வேட்டி தினம்’

தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களும் அலுவலர்களும் ஜனவரியின் முதல் இரண்டு வாரத்தில் ஏதாவது ஒரு நாளை வேட்டி தினமாகக் கொண்டாட வேண்டும் என்று கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர் சகாயம் கேட்டுக் கொண்டுள்ளார்.

சிரிப்பால் விளையும் 10 நன்மைகள்

girlsநியூயார்க் மாநில பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆர்தர் ஸ்டோன் சிரிப்பு பற்றிய தன் ஆய்வின் மூலம் பல உண்மைகளைக் கண்டறிந்துள்ளார். அவர் கூறுகிறார்: ”உலகின் மிகச் சிறந்த மருந்து மனம் விட்டுச் சிரிப்பதுதான்”.

இதன் தாக்கம் தான், இப்போதெல்லாம் வெளிநாடுகளில் மருத்துவர்கள், பல்வேறு நோயாளிகளுக்குச் சிரிப்பு வீடியோ படங்களைப் பாருங்கள்

"இளைஞர்களின் தொழிற்பயிற்சிக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு"

"நடப்பு நிதி ஆண்டில், 2.24 லட்சம் இளைஞர்களுக்கு, தொழிற்பயிற்சி வழங்க 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என முகாமில், தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கமணி பேசினார்.

உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு அவசியம்: மத்திய அமைச்சர்

கல்வியில் இடஒதுக்கீடு என்பது அவசியம் வேண்டும். ஏனெனில், நாட்டின் பெரும்பகுதி மக்களுக்கு நெடுங்காலமாக, கல்வி உரிமை உள்ளிட்ட பல்வேறு உரிமைகள் மறுக்கப்பட்டே வந்துள்ளன. இடஒதுக்கீடுதான் அவர்களை பொது களத்திற்கு அழைத்து வந்துள்ளது.

இதைக் கூறியிருப்பவர் மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சர் ஜெயராம் ரமேஷ்தான். அவர் மேலும் கூறியுள்ளதாவது:

10 மணிக்கு பொதுத்தேர்வு: தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தல்

அரசு பொதுத்தேர்வு நேரத்தை மாற்றக்கூடாதென, தலைமை ஆசிரியர்கள் மாநில பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவண்ணாமலையில், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாநில பொது செயலாளர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். சென்னை, கோவை, மதுரை, திருச்சி, உள்ளிட்ட அனைத்து மாவட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

ஆசிரியர்களின் கற்பித்தல் முறை சி.டி.,களில் பதிவு

பள்ளிகளில் அமல்படுத்தப்பட உள்ள வீடியோ, ஆடியோ கற்பிக்கும் முறைக்காக, ஆசிரியர்கள் தங்களது கற்பித்தல் நிகழ்வுகளை சி.டி.,களில் பதிவு செய்து வருகின்றனர்.

போட்டித் தேர்வு மையத்தால் "சிக்கல்": 30 ஆயிரம் புத்தகங்கள் முடக்கம்

நாமக்கல் மாவட்ட நூலக ஆணைக்குழு கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும், இரண்டு போட்டித் தேர்வு மையங்களால், மைய நூலகத்தில் இருக்கும் 30 ஆயிரம் போட்டித் தேர்வு புத்தகங்கள், முடங்கிக் கிடக்கிறது.

தேசிய தகுதித் தேர்வு: 15 ஆயிரம் பேர் பங்கேற்பு

கல்லூரி மற்றும் பல்கலைகளில் உதவிப் பேராசிரியர் பணியிடத்துக்கான, யு.ஜி.சி.,யின் தேசிய தகுதித் தேர்வு (நெட்) நேற்று நடந்தது.

16 ஆண்டுகளுக்கு பின் ஆசிரியர்கள் தேர்வு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, முதல்வர் மாணிக் சர்க்கார் தலைமையிலான, திரிபுரா மாநிலத்தில் 16 ஆண்டுகளுக்குப் பின் 4,000 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான முடிவு சமீபத்தில் மாநில அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

பள்ளியில் பாலியல் கல்வி அறிமுகம்: நீதிபதி கவலை

உயர்நிலைப் பள்ளிகளில் பாலியல் கல்வியை அறிமுகப்படுத்துவது குழந்தைகளின் மனதை பாழ்படுத்தும் செயல் என ஆந்திர ஐகோர்ட் கவலை தெரிவித்துள்ளது.

முதுநிலை தமிழாசிரியர் நியமன கவுன்சலிங் இன்று தொடக்கம்

அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை தமிழாசிரியர் பணியிடங்களில் புதியதாக  ஆசிரியர்களை நியமிப்பதற்கான கவுன்சலிங் இன்றும் நாளையும் நடக்கிறது. சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு விழுப்புரத்திலும், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு வேலூரிலும் கவுன்சலிங் நடக்கிறது.

பழைய முறைப்படி அரையாண்டு விடுமுறையை அறிவிக்க வேண்டும்

விடுமுறை நாட்களை குறைக்க கல்வித்துறை திட்டமிட்டு இருப்பதாக மாநில பட்டதாரி ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து சங்க பொதுச்செயலாளர் பாரி விடுத்துள்ள அறிக்கை:

ஆசிரியரின் பணிநீக்க உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட்

புதுச்சேரி கல்வித்துறை வழங்கிய காரைக்கால் ஆசிரியரின் பணி நீக்க உத்தரவை ரத்து செய்து,உடனடியாக ஆசிரியரை பணியமர்த்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இது குறித்து,காரைக்கால் விரிவுரையாளர்கள் சங்க பொதுசெயலாளர் ரங்கநாதன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

பிஎப் வட்டி உயருமா? ஜனவரி 13ல் தெரியும்

தொழிலாளர்களின் பிஎப் தொகைக்கு 8.5% வட்டி வழங்கப்படுகிறது. இந்த நிதியாண்டும் (2013&14) அதே வட்டி விகிதமே தொடர்ந்து நீடிக்கும் என்று தெரிகிறது. ‘தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பில்’ நாடு முழுவதும் 5 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் சந்தாதாரர்களாக இருக்கின்றனர்.

முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வில் பணியிடங்கள் மாயம்

அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் வட்டார வள மையங்களில்முதுநிலை ஆசிரியர் பணி நிலையில் பணிபுரிந்து வரும் 44மேற்பார்வையாளர்கள், 19ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு அரசுமேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்களாக மாறுதல் வழங்குவதற்கான கலந்தாய்வு நேற்று நடந்தது.

"கல்வியில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்"

"கல்வியில் மாற்றத்தை கொண்டு வந்தால், இளைஞர்களை நாம் முன்னேற்ற முடியும்" என கோவை பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் பேசினார்.

Sunday, December 29, 2013

இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் ஏன்?

சம்பளத்திலும்,நியமனத்திலும் பாகுபாடு காட்டுகிறது என்பது விளங்கவில்லை.அவ்வாறு, தகுதியற்ற படிப்பாக இருந்தால் ,அதனை படிக்க வேண்டாம் என அறிவித்து விடலாமே !!!

"படிப்பை கைவிட்டவர்களுக்கு வேலை தருகிறோம்"

வாழ்க்கையில் பல்வேறு காரணங்களால் படிப்பை இடையே விட்டவர்கள், அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். அப்படிப்பட்ட இளைஞர்கள் கொஞ்சம் உழைப்பையும், முயற்சியையும் முதலீடு செய்தால், பிரபல தனியார் நிறுவனங்களிலும் எளிமையாக வேலையில் சேரலாம் என உன்னதி அறக்கட்டளை வழிகாட்டி வருகிறது.

பொழுது உபயோகமாகப் போகிறதா?

பள்ளி, கல்லூரி முடித்து வந்த பின்னரும், விடுமுறை நாட்களிலும் பொழுதுகளை கழிப்பது கடினமான செயலாக பதின் பருவத்தினரிடையே காணப்படுகிறது. ஒரே செயல்பாட்டை நாள் முழுவதுக்குமானதாக தொடர இளம் தலைமுறையால் முடிவதில்லை. புதியவற்றை அவர்கள் மனம் தேட ஆரம்பித்துவிடுகிறது. இதன் காரணமாக பொழுதை போக்குவதில் கூட குழப்பங்கள் ஏற்படுகிறது.

மாநில அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், நடப்பு ஆண்டுக்கான, மாநில அளவிலான, கவிதை, கட்டுரை, பேச்சு போட்டி சென்னை மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

மாவட்டத்தை பசுமையாக மாற்ற ஆசிரியர்களுக்கு வேண்டுகோள்

மழை வளம் பெற ஈரோடு மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்ற ஆசிரியர்கள் முன்வர வேண்டும் என சுற்றுச்சூழல் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் பேசினார்.

11ம் வகுப்பிற்கு முப்பருவ கல்வி: வலியுறுத்தும் கல்வித்துறை

"தனியார் பள்ளிகள், அரசு விதிமுறைகளை மதிக்காமல், பிளஸ் 1 வகுப்பில் முழுக்க முழுக்க பிளஸ் 2 பாடத்தையே நடத்துகின்றன. இதை தவிர்க்கவும், பிளஸ் 1 வகுப்பிற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவும், முப்பருவ கல்வி முறையை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்" என கல்வித்துறை வலியுறுத்தி உள்ளது.

உடல் வளர்ச்சியின்றி தவிக்கும் மாணவி: அரசு உதவிக்கு எதிர்பார்ப்பு

பாப்பிரெட்டிப்பட்டி அருகே கவுண்டம்பட்டியை சேர்ந்த உடல்வளர்ச்சி இல்லாத ஏழாம் வகுப்பு மாணவி அரசின் உதவிக்காக காத்திருக்கிறார்.

அமைதியாய் ஒரு சாதனை, அவசியம் படிக்கவும்...

நல்ல மனம் வாழ்க ! இது போன்ற மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். “ஒரு மளிகைக் கடைக்காரர் பள்ளிக்கூடம் நடத்துறார்" படிக்கிறவங்களுக்கும் காசு கிடையாது; படிப்பு சொல்லிக் கொடுக்குறவங்களுக்கும் காசு கிடையாது. பல வருஷமா நடக்குற அந்தப் பள்ளிக்கூடத்துல படிச்ச பல புள்ளைங்க பெரிய பெரிய வேலைகளுக்குப் போய்ட்டாங்க. இப்போ அந்தப் புள்ளைங்க எல்லாம்

முதுகலை தமிழாசிரியர் தேர்வு அடுத்தடுத்து வழக்குகள்

அரசுப்பள்ளிகளில் காலியாக கிடக்கும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் எழுத்து தேர்வு நடத்தி அதில்  தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது. அதன்படி எழுத்து தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை மாதம் 21–ந்தேதி நடத்தியது. தமிழ் உள்பட அனைத்து பாடங்களுக்கும் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வை 1 லட்சத்து 59 ஆயிரத்து 750 முதுகலை பட்டதாரிகள் எழுதினார்கள்.

பிளஸ் 2 உயிரியல் பாடத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழி புத்தகத்தில், பல்வேறு தவறு உள்ளதால், மருத்துவத் துறைக்கு செல்லும் கனவோடு படிக்கும் மாணவ, மாணவியரின் எதிர்காலம், கேள்விக்குறியாகி உள்ளது

தமிழகம் முழுவதும், மார்ச் மாதம், பிளஸ் 2 தேர்வு துவங்குகிறது. மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்பில் சேர்வதற்கான கனவோடு, மாணவ, மாணவியர், இரவு, பகலாக படிக்கின்றனர். உயிரியல் பாடத்தில், அதிக மதிப்பெண் பெற்றால் தான், மருத்துவத் துறையில் சேர முடியும்.
பிளஸ் 2 உயிரியல் பாடப்பிரிவான விலங்கியல் புத்தகத்தில், ஆங்கில வழி பாட புத்தகத்துக்கும், தமிழ் வழி

முதுகலை ஆசிரியராக 733 பேருக்கு பதவி உயர்வு

முதுகலை ஆசிரியராக 733 பேருக்கு நேற்று நடந்த கலந்தாய்வில் பதவி உயர்வு உத்தரவுகள் வழங்கப்பட்டன. பட்டதாரி ஆசிரியரில், முதுகலை ஆசிரியர் தகுதி வாய்ந்த 897 பேருக்கு பதவி உயர்வு வழங்க மாநிலம் முழுவதும் நேற்று கலந்தாய்வு நடந்தது. 3,000 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள், காலியாக இருந்தும், கடைசியில், 733 பேர் மட்டுமே, பதவி உயர்வு பெற, முன் வந்தனர்.

இந்தியா நிலவுக்கு மனிதனை அனுப்புகிறது அதற்கான ஆயுத்த பணி தொடங்கியது

நீல்ஸ் ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடி வைத்து அரை நூற்றாண்டுகள் ஆகிறது.தற்போது இந்தியா அவரது காலடியை பின்பற்ற தயாராகிறது.இந்திய விமானப்படை  நிலவில் மனிதனை குடியேற்ற திட்டங்கள் தீட்டி அதற்கான ஆயுத்த பணியில் இறங்கி உள்ளது.

விடைத்தாள் திருத்துவதில் தவறு செய்த ஆசிரியர்களுக்கு மெமோ

கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள் திருத்தும் பணி கடந்த ஏப்ரல் மாதம் நடந்தது. மே மாதம் தேர்வு முடிவுகள் வெளியானது. 

Saturday, December 28, 2013

அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என, முதல்வர் ரங்கசாமி கூறினார். தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த "கணித உலகம்-2013" என்ற கண்காட்சியை திறந்து வைத்து, முதல்வர் பேசியதாவது:

பணி நிரவலுக்கு பிறகே ஆசிரியர் நியமனம்

உபரி (சர்பிளஸ்) ஆசிரியர்களை பணி நிரவல் செய்த பிறகே, புதிய ஆசிரியர்களை நியமிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. பணிநிரவலுக்கு பிறகு, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை குறையவாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு 25 சதவீதம் பதவி உயர்வு அளிக்க கோரிக்கை

"நேரடி முதுகலை ஆசிரியர் நியமனத்தில் கடைபிடிக்கப்படும், 50 சதவீதத்தில், 25 சதவீதத்தை, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கி, பதவி உயர்வு செய்ய வேண்டும்" என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், வலியுறுத்தி உள்ளது.

நெட் தேர்வில் பார்வையற்றோருக்கான பிரெய்லி வினா நிரல் - உயர்நீதிமன்றம் உத்தரவு

டிசம்பர் 29ம் தேதி நடைபெறும் நெட் தேர்வில், பார்வையற்றோருக்கென்று தனியாக பிரெய்லி வினா நிரலை தயாரித்து வழங்குமாறு யு.ஜி.சி.,க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய வருவாய்வழி திறன் தேர்வு: வட்டார அளவில் தேர்வு மையம்

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு, உதவித்தொகை திட்டத்தில் நடக்க உள்ள தேர்வில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, வட்டார அளவில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்தில் நேற்று நடப்பதாக இருந்த மாநில அளவிலான ஆர்ப்பாட்டம் அதிகாரிகளின் உறுதிமொழியின் பேரில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

500 நடுநிலைப்பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் இடைநிலை கல்வி இயக்ககம் மத்திய அரசுக்கு பரிந்துரை

500 நடுநிலைப்பள்ளிகளை, உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும் என்று இடைநிலை கல்வி இயக்ககம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளது. ரூ.177 கோடி ஒதுக்கீடு பின்தங்கிய ஒன்றியங்களில் மாதிரி பள்ளிகளை தொடங்கும் மத்திய அரசின் திட்டப்படி, தமிழ்நாட்டில் 44 மாதிரி பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன.

தொடக்கப் பள்ளி பட்டதாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்க கோரிக்கை

அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மையங்களில் பணியாற்றும் 47 மேற்பார்வையாளர்கள், 17 ஆசிரியர் பயிற்றுநர்களும் மேல்நிலை பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்களாக  மாறுதல் செய்யப்பட உள்ளனர். மேலும், 1.1.13 தேதியில் வெளியிடப்பட்ட தகுதி வாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள பட்டதாரி ஆசிரியர்கள் 897 பேருக்கு பதவி உயர்வு

அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அடையாள அட்டை அவசியம்: தமிழக அரசு அதிரடி உத்தரவு

மாவட்டங்களில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் முதல் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அரசு உயரதிகாரி வரை அனைவரும் பணியின்போது கட்டாயம் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மரணம் அடைந்த தற்காலிக வனத்துறை ஊழியரின் மகனுக்கு வாரிசு வேலை வழங்க மறுத்த தமிழக அரசின் உத்தரவு ரத்து ஐகோர்ட்டு உத்தரவு

பணி நிரந்தரம் செய்வதற்கு முன்பு மரணம் அடைந்த வனத்துறை ஊழியரின் மகனுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க மறுத்த தமிழக அரசின் உத்தரவை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது.திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சி.காசியம்மாள்.

"வாக்கிங்" செல்பவர்களை அனுமதிப்பது அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் விருப்பத்துக்கு உட்பட்டது"

மாணவர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் தலைமையாசிரியர்களே பொறுப்பு: பள்ளி கல்வித்துறை"பள்ளியில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு முக்கியமானது; அதற்கேற்ப தலைமை ஆசிரியர்கள் நடந்து கொள்ள வேண்டும்; குறைபாடு ஏதேனும் காணப்பட்டால், அதற்கு முழு பொறுப்பு தலைமை ஆசிரியர் ஏற்க நேரிடும்" என பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது.

பள்ளிகளில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பாடம்

வீடியோ கான்பரன்சிங் மூலம் பாடம் நடத்தும் முறையை பள்ளிகளில் நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்ப தலைமை ஆசிரியர்களுக்கு முதற்கட்டமாக சென்னையில் இன்று பயிற்சி தொடங்குகிறது.நெடுந்தூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத இடங்கள், மலைப் பிரதேசங்கள் ஆகியபகுதிகளில் இயங்கும் அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர் பயன் பெறும் வகையில்

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்: 49 ஆயிரம் மாணவர்களுக்கான கட்டணத்தைத் திருப்பி வழங்குவதில் தாமதம்

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் இந்தக் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட 49 ஆயிரத்துக்கும் அதிகமான ஏழை, நலிவடைந்த பிரிவு மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் இதுவரை திருப்பி வழங்கப்படவில்லை.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 28.12.2013 அன்று காலை 9.00 மணிக்கு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TO DOWNLOAD DSE - BT TO PG PROMOTION COUNSELING WILL BE HELD ON 28.12.2013 @ CONCERN CEO OFFICES REG PROC CLICK HERE...

அரசாணை (நிலை) எண்.249, பக(எஸ்.எஸ்.ஏ2) துறை, நாள் 09.12.2013. அரசாணையின்படி, அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வரும் வட்டார வளமையங்களில் முதுகலை ஆசிரியர் பணிநிலையில் பணிபுரிந்து வரும் மேற்பார்வையாளர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர் பணிநிலையில் பணிபுரிந்துவரும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு முதுகலை ஆசிரியர்களாக மாறுதல் ஆணை வழங்கப்பட வேண்டியுள்ளது. இதன்படி முதுகலை ஆசிரியர் பணி நிலையில் பணிபுரிந்து வரும் 44 மேற்பார்வையாளர்கள் மற்றும் 19 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு மட்டும் முதுகலை ஆசிரியர் பணிக்கு மாறுதல் ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 28.12.2013 அன்று காலை 9.00 மணிக்கு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் நடத்தப்படவுள்ளது. 

தூத்துக்குடியில் வ.உ.சி., கல்லூரி மாணவர்கள் போராட்டம்

தூத்துக்குடியில் உள்ள வ.உ.சி., கல்லூரியில், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு தரும் பேராசிரியர் மீது நடவடிக்கை கோரி கல்லூரியை முற்றுகையிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

இது மாதிரியான கேள்விகளை எப்படி சமாளிக்கலாம்?

நேர்முகத் தேர்வுகளில் சில சமயங்களில் கேட்கப்படும் கேள்விகள், நம்மை, எப்படி பதில் சொல்லி சமாளிப்பது என்ற இக்கட்டில் மாட்டிவிடுவதாய் இருக்கும். அதுபோன்ற கேள்விகள், சீரியஸாக இல்லாமல், ஒரு ஜாலிக்காக கேட்கப்படுவதாகவும் இருக்கும்.

பட்டதாரி ஆசிரியருக்கு பதவி உயர்வு கவுன்சிலிங்

பட்டதாரி ஆசிரியர், 961 பேருக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான கவுன்சிலிங் நாளை 32 மாவட்டங்களிலும் நடக்கிறது. ஜன., 1ம் தேதி முதல் முதுகலை ஆசிரியர் தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியருக்கு இந்த கவுன்சிலிங் நடக்கிறது.

மோசடி கல்வி நிறுவனங்களை தடுக்க யு.ஜி.சி., குழு அமைப்பு

மோசடி கல்வி நிறுவனங்களை தடுக்க நிபுணர்கள் குழுவை, பல்கலைகழக மானியக் குழுவான யு.ஜி.சி., அமைத்து உள்ளது. கல்வி நிறுவனங்களில் நடக்கும் முறைகேடுகள் மற்றும் அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றி ஆலோசனை வழங்குவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

47% பட்டதாரிகள் பணிகளைப் பெற தகுதியற்றவர்கள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் வழங்கப்படும் வழக்கமான கல்விமுறை, பணி வாய்ப்புக்கான திறன்களை மாணவர்களுக்கு வழங்காதபடியால், குறைந்தபட்சம், இந்தாண்டின் பாதியளவு பட்டதாரிகள், எந்தப் பணியையும் பெற முடியாமல், வேலையற்று இருக்கிறார்கள் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

3ம் பருவ பாடப் புத்தகம்: பள்ளிகளுக்கு விநியோகிக்கும் பணி துவக்கம்

விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான 3ம் பருவத்திற்கான புத்தகங்களை விநியோகிக்கும் பணி துவங்கியது.

கணிதம், அறிவியல் ஆசிரியர்களுக்கு ஐ.ஐ.டி., விஞ்ஞானிகள் பாடம்

மகாராஷ்டிர மாநில கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் பெரும்பான்மையினர், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் மிகக் குறைவான மதிப்பெண் பெறுவதால், அவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு பாடம் நடத்த மும்பை, ஐ.ஐ.டி., விஞ்ஞானிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

Thursday, December 26, 2013

47மேற்பார்வையாளர்கள் (முதுகலை ஆசிரியர் நிலையில் உள்ளவர்கள்) முதுகலை ஆசிரியர் பதவிக்கு பணியிட மாற்றம் மற்றும் 897 பட்டதாரி ஆசிரியரிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 28.12.13 அன்று நடைபெற உள்ளது

47மேற்பார்வையாளர்கள் (முதுகலை ஆசிரியர் நிலையில் உள்ளவர்கள்) முதுகலை ஆசிரியர் பதவிக்கு பணியிட மாற்றம் ஆன்லைன் கலந்தாய்வு 28.12.2013 அன்று காலை 9மணிக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெறும் என்றும்,

இன்றைய டிடோஜாக் கூட்டத்தின் முக்கிய முடிவுகள்

இன்று (26.12.2014) சென்னை திருவல்லிக்கேணி தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம், பேராசிரியர் நரசிங்கம் நிலையத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு.வின்சென்ட் பால்ராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து சங்கங்களும் பங்கு பெற்றன. பேரணியை ஏற்கெனவே தாங்கள் நடத்திவிட்டோம் எனவும், மீண்டும் பங்கு கொள்ளமாட்டோம் என முக்கிய சங்கம் பாதியிலேயே வெளியேறியது. பின்பு மற்ற 6 சங்கங்கள் கூடி சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.  

வெளிநாட்டு கல்விக்காக ரூ.10,000 கோடி செலவழிக்கும் இந்தியர்கள்!

இந்திய மாணவர்கள், சுமார் 10 ஆயிரம் கோடிகள் வரை, வெளிநாட்டு கல்விக்காக செலவழிக்கிறார்கள். இதனால், இந்தியா நிறைய மனித வளங்களை இழக்கிறது என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மாணவர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் தலைமையாசிரியர்களே பொறுப்பு: பள்ளி கல்வித்துறை

"பள்ளியில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு முக்கியமானது; அதற்கேற்ப தலைமை ஆசிரியர்கள் நடந்து கொள்ள வேண்டும்; குறைபாடு ஏதேனும் காணப்பட்டால், அதற்கு முழு பொறுப்பு தலைமை ஆசிரியர் ஏற்க நேரிடும்" என பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது.

முதல்வரை சந்திக்க சென்ற மாணவி தடுத்து நிறுத்தம்

கோடநாட்டில் முதல்வரை சந்தித்து மனு கொடுக்க சென்ற மதுரை சட்ட கல்லூரி மாணவிக்கு பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

2014ம் ஆண்டில் 8.5 லட்சம் புதிய பணியிடங்கள்?

2014ம் ஆண்டில், பல்வேறு துறைகளில் 8.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பணி வாய்ப்புகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு கையில் ஓசை எழுப்பும் மாணவி

ஒரு கை ஓசை எழுப்பும் பி.டெக்., மாணவி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற விரும்புகிறார்.

தேர்வெழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை வழங்க கெடு

தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை "ஆன்லைன்" மூலம் பதியாத பள்ளிகள், புதிய பள்ளிகளுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் தொடர்பான பிரச்னை: பள்ளிகளில் ஆலோசனை பெட்டி

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் ஜன., முதல் குழந்தைகள் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் பாதுகாப்பு ஆலோசனை பெட்டி வைக்கப்பட உள்ளது.

மாணவர்கள் குண்டாம்; நின்று கொண்டே பாடம் படிக்கணுமாம்

மாணவர்கள் குண்டாவதை தவிர்க்க, அவர்களை நிற்க வைத்து பாடத்தை கவனிக்கும் வகையிலான நடைமுறை ஆஸ்திரேலியாவில் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

7வது சம்பள கமிஷன் அமைப்பதில் தீவிரம்: தேர்தல் அறிவிப்பிற்குள் மத்திய அரசு ஜரூர்!

மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பள கமிஷன், லோக்சபா தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன், அமைக்கப்படும் என தெரிகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு, பத்தாண்டுக்கு ஒரு முறை சம்பள உயர்வு மற்றும் இதர சலுகைகள் வழங்குவதற்காக, சம்பள கமிஷன் அமைக்கப்படும்.

மாணவர் சேர்க்கை இல்லாததால் உதவி பெறும் பள்ளி அரசிடம் ஒப்படைப்பு!

வால்பாறை, மானாம்பள்ளியில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் போதிய மாணவர் சேர்க்கை இல்லாததால், பள்ளியை அரசிடம் ஒப்படைக்க அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

'ஆவரேஜ்' உற்பத்தி மையங்களாகும் அரசுப் பள்ளிகள்!

ஆசிரியர்கள் கலந்தாலோசனைக் கூட்டம். பத்தாம் வகுப்பில் பின்தங்கியுள்ள மாணவர்களை எப்படி முன்னேற்றுவது என்பதைப்பற்றிய கூட்டம் அது. பாடவாரியாக ஆசிரியர்களிடம் ஆலோசனை கேட்கிறார் தலைமையாசிரியர் .
தமிழ் ஆசிரியர் தன்னுடைய அணுகுமுறையைக் கூற, "அதெல்லாம் சரிவராது, நான் சொல்வதைக் கேளுங்க.. இப்படி பண்ணுங்க..." என்று அவர் சில வழிமுறைகளை கூறுகிறார்.

அரசு ஊழியர்களுக்கு குறைக்கப்பட்ட ஊதியத்தை டிசம்பர் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்ய கூடாது

அரசு ஊழியர்களுக்கு மூன்று நபர் கமிஷனின் அடிப்படையில் குறைக்கப்பட்ட ஊதியத்தை, டிசம்பர் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யக் கூடாது என கருவூலங்களுக்கு நிதித்துறை திடீர் உத்தரவிட்டுள்ளது.

1,000 மெட்ரிக் பள்ளிகளுக்கு விதிமுறைகள் தளர்வு : நிபுணர் குழு அறிக்கையில் பரிந்துரை :சென்னையில் 75 பள்ளிகளுக்கு சிக்கல்?

உரிய இடவசதி இல்லாத, 1,000 மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு, விதிமுறைகளை தளர்த்தி, தொடர்ந்து இயங்க, நடவடிக்கை எடுக்கலாம்' என, தமிழக அரசிற்கு சமர்ப்பிக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கையில், பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எனினும், சென்னையில், 75 பள்ளிகளுக்கு சிக்கல் ஏற்படும் என கூறப்படுகிறது.

1ம் வகுப்பு மாணவரின் தந்தைக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க பள்ளி நிர்வாகத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

ஒன்றாம் வகுப்பு மாணவரின் தந்தைக்கு, 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு மற்றும் சேர்க்கை கட்டணத்தை திருப்பி வழங்க வேண்டும் என, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆங்கிலம் கற்பித்தலில் புது சாதனை: திருச்சி ஆசிரியருக்கு தேசிய விருது

தொடர்ந்து, 18 ஆண்டுகள் ஆங்கிலத்தில், நூறு சதவீத தேர்ச்சி பெற்றுத்தந்த திருச்சி ஆசிரியருக்கு, தேசிய அளவில் விருது கிடைத்துள்ளது. சர்வதேச அளவில் புத்தங்களை வெளியிடும் பியர்சன் என்ற கல்வி நிறுவனம், ஆண்டுதோறும் இந்தியாவில் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

Wednesday, December 25, 2013

குளிர்காலத்தில் கடைபிடிக்கும் சில ஆரோக்கிய பழக்கங்கள்

குளிர்காலம் வந்துவிட்டது, அக்டோபர் மாதத்தின் வெயில் தீபாவளிக்குப் பின்னர் வேகமாக குறைந்து, உதறலெடுக்கும் குளிர்காலம் தொடங்கி விட்டது. இந்நாட்களில், உங்கள் சருமம் வறண்டு போகும், முடிகள் உறைந்து விடும் மற்றும் உடலின் தினசரி நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்படத் துவங்கும். இந்த மாற்றங்களை எதிர் கொள்ள சற்றே அதிகமான கவனமும், கவனிப்பும் வேண்டும்.   ஏனெனில், குளிர் காற்று உடலுக்கு எப்பொழுதும் நல்லதல்ல.

மாலை நேர சிறப்பு வகுப்புகளை ரத்து செய்ய கூடாது

பொதுத் தேர்வுகளில் அதிக அளவு தேர்ச்சி சதவீதம் எட்ட வேண்டும் என்பதற்காக  மாலை நேர சிறப்பு வகுப்புகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

பென்ஷன் வழங்க கோரி பட்டதாரி ஆசிரியர்கள் 27ம் தேதி உண்ணாவிரதம்

தமிழ்நாடு அரசு பட்டதாரி ஆசிரியர்கள் சங்க தலைவர் சங்கர்பாபு வெளியிட்ட அறிக்கை: கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சத்துணவு திட்டத்தில் பணியாற்றி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் பணி பெற்றவர்கள், பதவி உயர்வு மூலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில்

முதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள். சான்றிதல் சரிபார்ப்புக்குப்பின் புதிய ரேங்க் பட்டியலில் இடம்பெறப்போவது யார்?

முதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கான எழுத்து தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்த்தல் 30 மற்றும் 31–ந் தேதிகளில் நடைபெறுகிறது. முதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் எழுத்து தேர்வில் 150க்கு மதிப்பெண்களும்,வேலைவாய்ப்பக பதிவு மூப்புக்கு அதிகபட்சமாக 4 மதிப்பெண்களும்,பணி அனுபவத்துக்கு அதிகபட்சமாக 3 மதிப்பெண்களும் வழங்கப்படும்.

ஆசிரியர், அங்கன்வாடி அமைப்பாளருக்கிடையே மோதல்: பள்ளியை பூட்டியதால் வெளியே தவித்த குழந்தைகள்

சாத்தான்குளம் அருகே உள்ள பிடானேரி சமத்துவபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நாசரேத்தை சேர்ந்த அன்பாய் செல்வம் தலைமை ஆசிரியையாக உள்ளார். உதவி ஆசிரியராக அவரது கணவர் பிரபாகரன் மோசஸ் பணி புரிந்து வருகிறார்.

இடைநிலை ஆசிரியர் சம்பளம் தொடர்பாக மனு தாக்கல்

இடைநிலை ஆசிரியர்களுக்கான சம்பளத்தை, மத்திய அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இணையாக மாற்றியமைக்க கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஐ.ஏ.எஸ்., பதவி உயர்வுக்கு எழுத்து தேர்வு கட்டாயம்

மாநில அரசின், குரூப்-1, குரூப்-2 அந்தஸ்து அதிகாரிகள் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அந்தஸ்தை பெற எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு கட்டாயமாகிறது.

ஆசிரியர் பயிற்சி தேர்வு: அடுத்த வாரம் முடிவுகள் வெளியீடு

ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவு அடுத்த வாரத்தில் வெளியாகிறது. மாவட்ட ஆசிரியர் பயிற்சி மையங்களில், மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியலை வழங்க, தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களில் பணி வாய்ப்புகளை அளிக்கும் நெட் தேர்வு

கல்லூரி ஆசிரியர் பணிக்காக எழுதப்படும் நெட் தேர்வு, தற்போது பொதுத்துறை நிறுவனங்களில் பணி வாய்ப்புகளைப் பெறுதவற்கும் பயன்படும். UGC, தனது நெட் முடிவுகள் தரவு தளத்தை(database), பொதுத்துறை நிறுவனங்கள் பயன்படுததிக் கொள்ள அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது. இதன்மூலம் முதுநிலை பட்டதாரிகள் பயன்பெற முடியும்.

NMMS விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் ஒத்திவைப்பு

அரையாண்டு தேர்வு விடுமுறையால் NMMS விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிருப்தி நீதித்துறை ஊழியர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வு

அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய, கிருஷ்ணன் தலைமையில் ஊதிய குறைதீர்க்கும் குழுவை அரசு அமைத்தது. இந்த குழுவின் அறிக்கையை அடிப்படையாக கொண்டு அரசாணையில் 89 அறிவிப்புகளை வெளியிட்டது. இதற்கு பின்பும் அரசு ஊழியர்கள் ஊதிய முரண்பாடு சரி செய்யப்படவில்லை என ஆசிரியர்கள், பட்டு வளர்ச்சி ஆய்வாளர்கள், ஊர்புற நூலகர்கள், சாலை ஆய்வாளர்கள், புள்ளியல் துறை அலுவலர்கள் முறையிட்டு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஆசிரியர்கள் தாமதமாக வருவதால் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படும் பெற்றோர்கள் புகார்

திட்டக்குடி அருகே எரப்பாவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் காலதாமதமாக வருவதால் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் புகார் கூறுகின்றனர். திட்டக்குடியை அடுத்துள்ள எரப்பாவூரில் இயங்கி வந்த அரசு தொடக்கப் பள்ளியானது கடந்த 2008ல் நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

கலக்கத்தில் உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள்: பல லட்சம் கொட்டியும் பந்தாட்டமா

தமிழகத்தில் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் "சர்பிளஸ்' ஆசிரியர்களை கணக்கெடுத்து, அவர்களை இடமாற்றம் செய்ய கல்வித் துறை நடவடிக்கை எடுக்கிறது. ரூ.பல லட்சங்களை கொட்டி பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

பெண்களை தாக்கும் முழங்கால் வலி !! என்ன செய்ய வேண்டும்?

வயதானால் வரும் என நம்பப்பட்ட பல நோய்கள் இன்று இளம் வயதினரையும் பாதிக்கத் தொடங்கியிருக்கிறது. வாழ்க்கை முறை, உணவுப்பழக்கம், உடற்பயிற்சி இல்லாதது எனக் காரணங்கள் பல சொல்லலாம். வயதானவர்களிடமிருந்து இளம் வயதினருக்கு இடம் பெயர்ந்துள்ள நோய்களில் ழுழங்கால் மூட்டு

பள்ளி வாகனங்கள் சான்று ரத்து செய்து நடவடிக்கை

விதிகளை கடைபிடிக்காத, ஒன்பது பள்ளி வாகனங்களின் தகுதி சான்றை சப்-கலெக்டர் ரத்து செய்தார். விபத்துக்களை தடுக்க பள்ளி வாகனங்களில் பல்வேறு மாற்றங்கள் செய்ய அரசு உத்தரவிட்டது.

பள்ளிகளுக்கு இடையே வகுப்பறை கல்வி இணைப்புத் திட்டம் செயலாக்கம்

பள்ளிக் கல்வித் துறை சார்பில், அரசு பள்ளிகளுக்கு இடையே வகுப்பறைக் கல்வி இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகையின் வரலாறு

கிறிஸ்துமஸ் என்ற வார்த்தை "கிறிஸ்ட் மாஸ்" என்ற 2 வார்த்தைகளின் இணைப்பு மூலம் உருவானது. இயேசு கிறிஸ்து பிறந்த ஆண்டு சரியாக தெரியவில்லை என்பதால், கிமு 7க்கும் கிமு 2க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் பிறந்திருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். அதேபோலவே யூதர்களின் பருவகாலம், நாள் காட்டிகள் மூலம் கணக்கிட்டு, ஒரு யூக அடிப்படையில் தான் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுவதாக சில வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். 

ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் எல்லா வகுப்பு மாணவருக்கும் ஒரே அறையில் பாடம்

தமிழகத்தின் வட மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் எல்லா வகுப்பு மாணவர்களுக்கும் ஒரே அறையில் பாடம் நடத்தப்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. சமகல்வி இயக்கத்தின் சார்பில் வட தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் இயங்கும் அரசு ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டது. 

தொடக்க வகுப்புகளில் தமிழ் வழிக் கல்வி மட்டுமே தொடர ஆசிரியர்கள் கோரிக்கை

தொடக்க வகுப்புகளில் தமிழ் வழிக் கல்வி மட்டுமே தொடர வேண்டும் என்று, தமிழ்நாடு ஆசிரியர்கள் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் அமைப்பின் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பொதுச் செயலாளர் செ.முத்துச்சாமி தீர்மானங்களை விளக்கிப் பேசினார்.

காற்றில் பறக்கும் தமிழக அரசு உத்தரவு சான்றிதழுக்கு அலையும் மாணவர்கள்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 6, 10, ப்ளஸ் 2 மாணவ, மாணவியருக்கான ஜாதிச்சான்று, இருப்பிட சான்று உள்ளிட்டவைகளை, பெரும்பாலான பள்ளி ஆசிரியர்கள் பெற்றுத்தராமல், மாணவர்களையே அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்


தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 8 பேரின் பதவியை மாற்றி தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம் :

தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் அமலாக்கத்துறை செயலாளராகவும், மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் இயக்குனராகவும், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளராகவும் இருந்த கே.ராஜாராமன் வணிக வரித்துறை கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இணையதள பாதுகாப்பு கொள்கை விரைவில் வெளியீடு

இணையதளம் மூலம் அரசு துறைகள் தகவல்களை பரிமாறிக் கொள்ளும் போது, அந்தத் தகவல்கள், பிறரால், "ஹாக்" செய்யப்படுகிறது. அதை தவிர்க்க, விரைவில், "இ - மெயில்" பாதுகாப்பு கொள்கை பின்பற்றப்பட உள்ளது.

மத்திய அரசின் "ஸ்காலர்ஷிப் திட்டம்" நடுநிலைப்பள்ளிகளுக்கு தகவல் இல்லை

"எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான மத்திய அரசின் ஸ்காலர்ஷிப் திட்டத்தில் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்" என, பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.

உதவி பேராசிரியர்கள் நியமனத்தை எதிர்த்து வழக்கு

"அரசு கலைக் கல்லூரிகளில், உதவி பேராசிரியர்கள் நியமனத்தில், "நெட்" தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் குறைந்த மதிப்பெண் வழங்குகிறது. பல்கலை மானியக்குழு விதிக்கு புறம்பான இந்த நியமனங்களுக்கான அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்" எனக் கோரி மதுரை ஐகோர்ட் கிளையில், மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

ஆம்புலன்சில் வந்து, கலெக்டரிடம் இடமாறுதல் கோரி ஆசிரியை மனு

பணியிட மாறுதல் கோரி, ஆசிரியை ஒருவர், ஆம்புலன்சில் வந்து, மக்கள் குறைதீர் கூட்டத்தில், திருச்சி கலெக்டரிடம் மனு கொடுத்தார். திருச்சி, கருமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர், சகாயமேரி, 44. இவர், புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே, அண்டனு"ாரில், ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

விடுதி மாணவர் சித்ரவதை: மாவட்ட பாதுகாப்பு அலுவலர் விசாரணை

அரசு குழந்தைகள் இல்லத்தில், மாணவரை அடித்து சித்ரவதை செய்தது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் விசாரணை நடத்தினார்.

தமிழக பள்ளிகளுக்கு 9 நாள் விடுமுறை

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு, இன்று முதல், ஜன., 1 வரை ஒன்பது நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அரசுப்பள்ளிகள் எல்லாம் இன்று அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் அவலம்

ஏதேனும் ஒரு நிராகரிப்பின் வலியோடுதான் கடந்து கொண்டிருக்கிறது ஒவ்வொரு மாணவனின் பள்ளிப் பருவமும், இதற்கு யாரும் விதிவிலக்கல்ல. பல பள்ளிகளில் அடுத்த கல்வி ஆண்டிற்கான சேர்க்கைக்கு முன்பதிவு துவங்கி விட்டது. ஆம், வரும் மே மாதத்தில் வெளியாக உள்ள பொதுத்தேர்வு முடிவுகள் தான், பல பள்ளிகளின் லாப சத வீதத்தை உயர்த்தப்போகின்றன. இப்பொழுதும் கூட இதற்கு மாறான சூழல் உருவாகவில்லை.

வெளியானது முதுகலை தமிழ் தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்பிற்கு 694 பேர் அழைப்பு

நீண்ட இழுபறிக்குப் பின், முதுகலைத் தமிழ் ஆசிரியர் தேர்வு முடிவை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,), நேற்று வெளியிட்டது. தேர்வெழுதிய, 1.6 லட்சம் பேரில், 694 பேர், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டு உள்ளனர்.

மழலை மாறாத வயதில் மன அழுத்தம் : ஏங்கும் பிஞ்சு குழந்தைகள்

"மழலை மறக்காத வயதில், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதால், பெற்றோர்களின் ஆதரவு கிடைக்காமல், மனதளவில் வன்முறை வலைக்குள் குழந்தைகள் சிக்குவதாக, குழந்தைகள் நல ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

குரூப்-4 தேர்வு முடிவு ஜனவரி 2-வது வாரத்தில் வெளியிட முடிவு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆகஸ்டு மாதம் 25-ந்தேதி குரூப்-4 தேர்வை நடத்தியது. இந்த தேர்வு மூலம் 5 ஆயிரத்து 556 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்வை 12 லட்சத்து 21 ஆயிரத்து 167 பேர் எழுதினார்கள். அவர்களில் என்ஜினீயரிங் படித்தவர்கள் ஏராளமானவர்கள் இருந்தனர்.

முதுநிலைப் பட்டதாரி தமிழ் ஆசிரியர் போட்டித் தேர்வில் தேர்வில் தர்மபுரி மாவட்டத்தில் தேர்வெழுதியவர்களில் 76 பேர் தேர்ச்சி பெற்று சாதனை.

முதுநிலைப் பட்டதாரி தமிழ் ஆசிரியர் போட்டித் தேர்வில்வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் 30, 31.12.13 நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் மொத்தம் 5 மையங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.

எஸ்.எம்.எஸ்., தகவல்கள், இனி அரசு அலுவலகங்களில், அதிகாரப்பூர்வ ஆவணமாக ஆக்கப்பட உள்ளது.

எஸ்.எம்.எஸ்., தகவல்கள், இனி அரசு அலுவலகங்களில், அதிகாரப்பூர்வ ஆவணமாக ஆக்கப்பட உள்ளது. பணம் செலுத்துதல், பதிவு உட்பட, பல்வேறு திட்டங்களுக்கு. எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பப்படும் குறுஞ்செய்தி தகவல்கள், முக்கிய ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.

உதவிப் பேராசிரியர் தகுதித் தேர்வு: 2 லட்சம் பேர் பங்கேற்பு

கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான (CSIR NET) தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற்றது. நாடு முழுவதிலும் சுமார் 2 லட்சம் இந்தத் தேர்வில் பங்கேற்றனர்.

முதுநிலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு

முதுநிலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை இணையதளத்தில் காணலாம்.

டிச. 29ல் "நெட்" தேர்வு: பாரதிதாசன் பல்கலை அறிவிப்பு

யூ.ஜி.சி.,யின் நெட் தேர்வு திருச்சியில் பத்து மையங்களில் வரும் 29ம் தேதி நடக்கிறது என பாரதிதாசன் பல்கலை அறிவித்துள்ளது. இதுகுறித்து பாரதிதாசன் பல்கலை பதிவாளர் ராம்கணேஷ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

தொலைதூர, திறந்தநிலை கல்விக்கான யு.ஜி.சி.,யின் புதிய வரைவு விதிமுறை

தொலைதூரக் கல்வி கவுன்சில் கலைக்கப்பட்ட பின்னர், நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் தொலைதூரக் கல்வி நடைமுறையை கட்டுப்படுத்த ஒரு வரைவு விதிமுறையை யு.ஜி.சி. உருவாக்கியுள்ளது.

அரசு பள்ளிகள் என்றால் பிரியம் அதிகம்: சகாயம்

நாட்டில் எத்தனையோ அதிகாரிகள் இருக்கிறார்கள் ஆனால் நேர்மைக்கு எடுத்துக்காட்டாக சில அதிகாரிகள்தான் இருக்கிறார்கள் அவர்களில் முதன்மையானவராக தெரிபவர் சகாயம்தான். காரணம் மிகவும் எளிது. லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்ற வார்த்தையின் வடிவமாக நேர்மைக்கு மிகவும் நெருக்கமானவராக துணிவுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாதவராக

160 மாணவர்களுக்கு மூன்றே ஆசிரியர்கள்

கூடலுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ஆசிரியர்கள் பற்றாக்குறையால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

தவறான தகவல் தந்த பள்ளி ஆசிரியைக்கு வினோத தண்டனை

கோர்ட்டுக்கு தவறான தகவல்களை அளித்து, பொய் சொன்னதற்காக பள்ளி ஆசிரியைக்கு, டில்லி ஐகோர்ட் வினோதமான தண்டனையை அளித்துள்ளது. டில்லி காந்தி சமாதியில் தினமும், நான்கு மணி நேரம் வீதம், ஒரு வாரத்திற்கு பிரார்த்தனை செய்ய வேண்டும் என, உத்தரவிட்டுள்ளது.

புதிய பாட பிரிவுகளுக்கு பேராசிரியர் நியமனம் எப்போது?

அரசு கலை கல்லுாரியில், முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் நடப்பாண்டில், புதிதாக துவங்கப்பட்ட 16 பாடப் பிரிவுகளுக்கு ஒரு பேராசிரியர் கூட, இதுவரை நியமிக்கப்படவில்லை. இதனால், மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. இதையடுத்து, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து உள்ளனர்.

10 ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை மொத்தமாக திருப்பி தர முடிவு

கடந்த 10 ஆண்டுகளாக எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு வழங்கப்படாத கல்விக் கட்டணத்தை மொத்தமாக திருப்பி வழங்க மாநில அரசு 131 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.

வி.ஏ.ஓ., பதவிகளை நிரப்ப விரைவில் போட்டித் தேர்வு

கிராம நிர்வாக அதிகாரி பதவிக்கான காலியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது.

எழுத, படிக்க திணறும் மாணவர்களை மேம்படுத்தும் திட்டம்

ஆங்கிலம் மற்றும் தமிழ்வழியிலான பாட புத்தகங்களை, சரளமாக படித்தல், எழுதுதல் ஆகியவற்றில், மிகவும் பின் தங்கியுள்ள மாணவ, மாணவியரை அடையாளம் கண்டு அவர்களை மேம்படுத்த வரும் கல்வி ஆண்டில், புதிய திட்டத்தை செயல்படுத்த மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

வரும் கல்வி ஆண்டு முதல் பத்தாம் வகுப்புக்கும் முப்பருவ கல்விமுறை?

தமிழகத்தில் கல்வி முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதில் ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.வரும் கல்வி ஆண்டில் 10ம் வகுப்பிலும் முப்பருவ கல்வி முறை அமலாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பொதுத்தேர்வு ரத்தாகும் வாய்ப்பு இருப்பதால், பல்வேறு தரப்பினரும் பத்தாம் வகுப்பில் இக்கல்வி முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

அரசு பள்ளிகளில் 5,000 ஆசிரியர் காலியிடம்: பிளஸ் 2 மாணவர்கள் பாதிப்பு

அரசு பள்ளிகளில் 5 ஆயிரம் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் அரசு பொதுதேர்விற்கு தயாராகும் பிளஸ் 2 மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில அளவில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு, உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. நடப்பு காலம் வரை தமிழ், ஆங்கிலம், கணிதம் உட்பட அனைத்து பாடங்களுக்கும் 5 ஆயிரம் முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.

அரசுப்பள்ளிகளில் அரைகுறையாய் அறிமுகப்படுத்தப்படும் ஆங்கிலவழி, ஏழைத் தமிழ் மாணவர்களின் பரிதாபநிலை

நடப்புக் கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளிகளில் முதல்வகுப்பில் ஆங்கிலவழி தொடங்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் தமிழ்வழி வகுப்புகளில் மாணவர் சேர்க்கை குறைந்து விட்டதால் பல இடங்களில் பள்ளிகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதால் தனியார் ஆங்கிலப் பள்ளிகளில் சேர்க்கும் பெற்றோரை ஈர்க்கும் வகையில் அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழி துவக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறுகிறது. ஆனால் அதன் தரம் குறித்து யாரும் அக்கறை கொண்டதாக தெரியவில்லை. 

பிளஸ் 2 விலங்கியல் பாடத்தில் தவறுகள்: தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் அதிர்ச்சி

பிளஸ் 2 உயிரியல் பாடத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழி புத்தகத்தில், பல்வேறு தவறு உள்ளதால், மருத்துவத் துறைக்கு செல்லும் கனவோடு படிக்கும் மாணவ, மாணவியரின் எதிர்காலம், கேள்விக்குறியாகி உள்ளது.

மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு: விருப்பம் தெரிவித்தால் மாற்ற இயலாது

2014ம் ஆண்டுக்கான,மாவட்ட கல்வி அலுவலர், அதற்கு சமமான அலுவலர் பணியிடங்களுக்கான, முன்னுரிமை உள்ள தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை,அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள்,அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதில்,உயர்நிலை, மேல்நிலை ஆகிய இரண்டில், எதிலிருந்து, மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு பெற விரும்புகிறார்? என்பதை தெரிவிக்க வேண்டும்.

குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி பெற்றோர்கள் மறக்கடிப்பது!!

குழந்தைகள் என்றாலே விரல் சூப்புவது என்பது இயல்புதான். நாம் என்னதான் கையை எடுத்துவிட்டால் குழந்தைகள் மீண்டும் மீண்டும் கையை வாய்க்குதான் கொண்டு செல்லும். குழந்தை விரல் சூப்புவதற்கு முக்கிய காரணம், தனக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கவில்லை என்று உணர்வதால்தான் என்கிறார்கள், உளவியல் அறிஞர்கள்.

Sunday, December 22, 2013

இப்போதைக்கு டி.இ.டி., முதுகலை ஆசிரியர் தேர்வு இறுதி பட்டியல் வர வாய்ப்பில்லை

ஜூலையில் நடந்த, முதுகலை ஆசிரியர் தேர்வுப் பணி, இன்று வரை,முடியவில்லை. தமிழ் பாட கேள்வித்தாளில், 40 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டதாக, உயர்நீதிமன்ற, மதுரை கிளையில், சிலர் வழக்கு தொடர்ந்தனர்.இதனால், தமிழ் பாடத்தின், தேர்வு முடிவை வெளியிட,கோர்ட் தடை விதித்தது.

மதிப்பெண் மட்டும் போதுமா? அரசுப் பள்ளிகள் vs தனியார் பள்ளிகள்

தனியார் பள்ளிகள் எனப்படும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் நாங்கள் தான் தரமான கல்வியைத் தருகிறோம் என்று விளம்பரம் செய்து தம்பட்டம் அடித்துக் கொள்கின்றன. அரசுப் பள்ளிகளில்தான் தகுதியுடைய ஆசிரியர்கள் இருக்கிறார்கள், அது மட்டுமல்லாமல் அரசின் பல்வேறு நலத் திட்டங்களும் அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கிடைக்கும் என்று அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்வதை ஊக்கப் படுத்துகிறார்கள்.

மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு: கல்வித்துறை உத்தரவு

உயர்நிலை,மேல்நிலை தலைமை ஆசிரியராக இருப்பவர்கள், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதற்கு சமமான அலுவலர் பணியிடங்களுக்கு, விருப்பம் தெரிவித்து விட்டு அதை மாற்ற கூடாது என பள்ளி கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக 180 வழக்குகள் தாக்கல்: டி.ஆர்.பி., தவிப்பு

ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் 180 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதனால் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) எரிச்சலும், விரக்தியும் அடைந்து புலம்பி வருகிறது.

முட்டை விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் சத்துணவுக்கு அழுகிய முட்டைகள் கலப்படம்? அதிர்ச்சி தகவல்

முட்டை விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், சத்துணவுக்கான முட்டை சப்ளையில், காலாவதியான மற்றும் அழுகிய முட்டைகளை கலப்படம் செய்யப்படுவதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

பள்ளி வளாகங்களில் புகைபிடிக்க தடை: தமிழக அரசு உத்தரவு

பள்ளி மாணவ மாணவியர் நலன் கருதி பள்ளி, கல்லூரிகள் அருகே பீடி, சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இதனைபோன்று பள்ளிகள், கல்லூரிகள் அருகே டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கவும் அனுமதி அளிக்கப்படுவதில்லை.

மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி

திருச்சி பாலக்கரையில் உள்ள அரசு சையது முர்துசா மேல்நிலைப்பள்ளியில் அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டம் சார்பில் தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி பணிமனை நேற்று துவங்கியது.

அரசு பள்ளிகளில் 'கனெக்டிங் கிளாஸ் ரூம்': முதல்கட்ட நடவடிக்கை துவக்கம்

தமிழக அரசு பள்ளிகளில், கற்றலை நவீனப்படுத்தும் விதமாக, அனைத்து அரசு பள்ளி வகுப்பறைகளையும் ஒருங்கிணைக்கும் விதமாக, 'கனெக்டிங் கிளாஸ் ரூம்' திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தில், இணையதள வசதி மூலம், புராஜக்டர் மற்றும் ஆடியோ சிஸ்டம் கொண்டு, ஒரு வகுப்பறையில் நடத்தும் பாடத்தை, அனைத்து பள்ளிகளிலும், அதே பிரிவை சேர்ந்த மாணவர்கள் கவனிக்கவும், விவாதம் நடத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Saturday, December 21, 2013

TETOJAC - பொதுக்குழுக்கூட்ட அழைப்பு


நன்றி : தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி 

சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வு - கடந்தாண்டை விட, இந்தாண்டு 800 பள்ளிகள் அதிகம்

2014ம் ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள CBSE பொதுத்தேர்வுகளை, இதுவரை இல்லாத வகையில், அதிக மாணவர்கள் எழுதவுள்ளனர். மொத்தம் 22.65 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர். அதேசமயம் 2013ம் ஆண்டில் 21.76 லட்சம் மாணவர்கள் எழுதினர். 

ஐந்து ஆண்டுகளில் ஐம்பது சதவிகித அரசுத் தொடக்கப் பள்ளிகள் மூடப்படும் நிலை?

அரசுப் பள்ளிகளில் பயிலும் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு முட்டையுடன் சத்துணவு, தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியருக்கு இலவசச் சீருடைகள், இலவச நோட்டுப் புத்தகங்கள், இலவசப் பாட நூல்கள், தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விதிவிலக்கு.

பண்டிகைகால முன்பணத்தை 10 நாட்களுக்கு முன்பாக வழங்க கோரிக்கை

பண்டிகைகால முன்பணத்தை 10 நாட்களுக்கு முன்பாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்து உள்ளது.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தகுதி இல்லாமல் பதவி உயர்வு பெற்ற பேராசிரியர்கள்: அதிகாரிகள் விசாரணை

தனியார் துறையின் கீழ் இருந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் சில மாதங்களுக்கு முன்பு அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.  இந்த நிலையில் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் உரிய கல்வி தகுதி இல்லாமல் போலி சான்றிதழ் கொடுத்து பேராசிரியர் மற்றும் ஊழியர் பணிகளில் சேர்ந்திருப்பதாக புகார்கள் எழுந்தன.

அனைவருக்கும் கல்வி இயக்கம் கலைக்கப்படாது - முதன்மை செயலர் சபிதா

அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தை, ( எஸ்.எஸ்.ஏ.,), அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கத்துடன் இணைப்பது குறித்து, எவ்வித ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை' என, பள்ளிக்கல்வித்துறை, முதன்மை செயலர் சபிதா தெரிவித்தார்.

சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வு - 22.65 லட்சம் மாணவர்கள் பதிவு

2014ம் ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள CBSE பொதுத்தேர்வுகளை, இதுவரை இல்லாத வகையில், அதிக மாணவர்கள் எழுதவுள்ளனர். மொத்தம் 22.65 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர். அதேசமயம் 2013ம் ஆண்டில் 21.76 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

அதிகமாக பொரித்த உணவை சாப்பிட கூடாது: மாணவர்கள் மூலம் பெற்றோருக்கு விழிப்புணர்வு

பொரித்த உணவை அதிகமாக உட்கொள்வதால் இதயநோய் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளதால் மாணவர்கள் மூலம் இதனை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போட்டிகள் நடந்தது.

விடுமுறை: இது வாழ்கைக்கான களப்பயிற்சி

தேர்வு காலம் நெருங்கிவிட்டாலே தேர்வு பயம் மாணவர்களை எந்த அளவுக்கு பதட்டம் கொள்ள வைக்கிறதோ, அதை விட அதிக அளவு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது அதற்கு பின்னர் வரும் விடுமுறை. ஆனால் பெற்றோருக்கோ கவலையை ஏற்படுத்திவிடுகிறது.

நிதி பற்றாக்குறையால் மெட்ரிக் பள்ளியை மூட முடிவு: பெற்றோர்கள் அதிர்ச்சி

கோவை கணபதி பகுதியில் உள்ள குமாரசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை வரும் கல்வியாண்டுடன் மூட உள்ளதாக பள்ளி நிர்வாகத்தின் திடீர் அறிவிப்பால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஒரே வளாகத்தில் இயங்கும் 3 அரசு பள்ளிகள்: உபரி பணியிடத்தால் அரசு பணம் விரயம்

சேலம் மாநகராட்சி, பரமகுடி நன்னுசாமி தெருவில், ஒரே வளாகத்தில், இரண்டு துவக்கப்பள்ளி, ஒரு நடுநிலைப்பள்ளி, நான்கு அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.

வகுப்புகளை சரிவர எடுக்காத கணித ஆசிரியர் பணி இடைநீக்கம்

திட்டக்குடி அருகே, அரசுப் பள்ளி மாணவர்கள் கணிதத் தேர்வைப் புறக்கணித்த விவகாரத்தில், வகுப்புகளை சரிவர எடுக்காத கணித ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மாணவர்களே இல்லாத ஒன்றிய பள்ளி: தலைமை ஆசிரியை மட்டுமே வரும் அவலம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளைய அருகே உள்ள ஒன்றிய துவக்க பள்ளி, ஒரு மாணவர் கூட இல்லாமல் செயல்படுகிறது. தலைமை ஆசிரியை மட்டும் பணிக்கு வந்து செல்கிறார். ராஜபாளையம்-சத்திரப்பட்டிரோட்டில் உள்ள மில்கிருஷ்ணாபுரம் ஒன்றிய துவக்க பள்ளி, 1957ல் துவக்கப்பட்டது.

சர்ச்சையில் சிக்காத பள்ளிகளில் புதிய தேர்வு மையம்: தேர்வுத்துறைக்கு பரிந்துரை

சர்ச்சையில் சிக்காத பள்ளிகளில், புதிதாக 10 ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மையம் அமைக்க, தேர்வுத்துறைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு மார்ச் 3 ல் பிளஸ் 2 வகுப்புகளுக்கும், மார்ச் 26 ல், 10 ம் வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வுகள் துவங்க உள்ளன.

ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப முன்னுரிமை தர வேண்டும், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி

உயர் கல்வி நிறுவனங்கள் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார்.

சத்துணவு மையப் பொறுப்பாளர்கள் நிம்மதி:காய்கறி, மளிகைக்கான நிதி வழங்கல்

சத்துணவு மையங்களுக்கு கடந்த 9 மாதங்களாக வழங்காமல் இருந்த காய்கறி, விறகு மற்றும் மளிகை பொருட்களுக்கான நிதி தற்போது 6 மாதத்திற்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு தமிழக அரசு சத்துணவு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

ஆங்கில பொது தேர்வுக்கு விடுமுறை இல்லையா? மாணவர்கள் புகார்

பிளஸ் 2 பொதுத்தேர்வில், ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படாததால், பள்ளி கல்வித் துறைக்கு, மாணவர்கள் புகார் அனுப்பியுள்ளனர்.

கல்வி உபகரணங்களை தயாரிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

கல்வி உபகரணங்களை வரும் ஜனவரி மாதத்திற்குள் தயாரிக்க வேண்டும் என தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடலூர் வட்டத்துக்குள்பட்ட தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான மீளாய்வு கூட்டம் புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அனைவருக்கும் கல்வி திட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள்மொழிதேவி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

‘அட்மிஷன்’ பதற்றம்அதற்குள் ஆரம்பம்!

புதிய கல்வியாண்டு வருகிறதென்றால் கூடவே பெற்றோர்களுக்குப் பதற்றங்களும் வந்துவிடும். குறிப்பாக முதல் முறையாகப் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்க வேண்டியவர்களும், வேறு பள்ளிக்கு மாற்ற விரும்புகிறவர்களும் அடைகிற மன உளைச்சல்களுக்கு அளவே இல்லை.

தொழில் வரி இந்த அரையாண்டு முதல் உயர்வு

தமிழகத்தில் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில், (அக்.,1) முதல் தொழில் வரியை 35 சதவீதமாக உயர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு, தொழில் வரி வசூலிக்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சீராய்வு செய்து, வரி நிர்ணயம் செய்யப்படும். இதற்குமுன் 1.10.2008ல் தொழில் வரி சீராய்வு செய்யப்பட்டது.

தமிழ் முதுகலை ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்கு இன்றைய விசாரணைப் பட்டியலில் இட ம்பெறவில்லை

முதுகலைப்பட்டதாரிதமிழ்ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வில், பி வரிசை வினாத்தாளில் 40 கேள்விகள் எழுத்துப்பிழைகளுடன் இருந்தன. பிழையான கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் எனக்கோரி சென்னை உயர்நீதிமன்றமதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

விடுமுறையிலும் சிறப்பு வகுப்பு நடப்பதால் சர்ச்சை

அரசு, தனியார் பள்ளிகளில், விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்புகளை நடத்துவது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், அரசுப் பள்ளிகள், உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் பல செயல்படுகின்றன. இந்நிலையில், உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் பல, மாணவ, மாணவியரின் தேர்ச்சி விகிதத்தில் முனைப்பு காட்டுகின்றன.

1,000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் பதவி உயர்வு

தமிழகத்தில் உள்ள சுமார் ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு சில நாள்களில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

முதுகலை தமிழ் ஆசிரியர் தேர்வு முடிவு வெளியாவதில் மீண்டும் சிக்கல்

முதுகலை தமிழ் ஆசிரியர் தேர்வு முடிவை வெளியிடுவதில், மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,891 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஜூலையில், போட்டித் தேர்வு நடந்தது. தமிழ் பாடம் தவிர, இதர பாடங்களுக்கான தேர்வு முடிவை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) வெளியிட்டு, சான்றிதழ் சரிபார்ப்பையும், நடத்தி முடித்துவிட்டது.

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவது தொடர்பான அரசாணையை தமிழக அரசு செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 17) வெளியீடு

இந்த சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதும் பார்வையற்றவர்களுக்கும், அவர்களது உதவியாளர்களுக்கும் பயிற்சி வழங்குவதற்காக ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பிளஸ் 2, 10ம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு : ஏப்ரல் 2ம் வாரத்துக்குள் முடிக்க நடவடிக்கை

லோக்சபா தேர்தலை, ஏப்ரல் மாதத்தில் நடத்துவதற்கான சாத்தியக்கூறு உள்ளதால், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை, ஏப்ரல் இரண்டாவது வாரத்துக்குள் முடித்து விட, தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகள், மார்ச்சில் துவங்கி, ஏப்ரல், 12 வரை, நடத்தப்படுகிறது.

மாணவி கர்ப்பம் - ஆசிரியர் கைது

ராஜஸ்தானில், தனியார் பள்ளி ஒன்றில், ஆசிரியராக இருக்கும், புவனேஷ், 42, என்பவர், அப்பள்ளியில் படிக்கும், 16 வயது மாணவியை, ஏமாற்றி, அடிக்கடி உடலுறவு கொண்டதில், அச்சிறுமி கர்ப்பம் தரித்து, நேற்று முன்தினம், பள்ளியில் குழந்தை பெற்றார்.

நேரடியாக விண்ணப்பம் பெறக்கூடாது நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்ய குழு

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்டம் தோறும் தேர்வுக்குழு அமைத்து வரும் 31ம் தேதிக்குள் தேர்வு செய்த ஆசிரியர் விபரங்களை அனுப்பி வைக்க பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

எம்.பில், பி.எச்டி., படிப்புக்கு இக்னோ அழைப்பு

இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், 2014ம் கல்வியாண்டில் ஜூலை மாதத்தில் சேர்க்கை பெற அழைப்பு விடுத்துள்ளது. எம்.பில், (எஜூகேஷன், எகனாமிக்ஸ, சோசியலாஜி, அரசியல் அறிவியல்)பி.எச்டி., (மெக்கானிக்கல், வராலாறு, பொருளாதாரம், சோசியாலஜி, நூலக மற்றும் தொழில்நுட்ப அறிவியல், அந்திரோபாலஜி,

"சில்மிஷ' ஆசிரியர், ஆசிரியை "சஸ்பெண்ட்' : தமிழக கல்வி துறை அதிரடி நடவடிக்கை

ஆத்தூர் அருகே, வீரகனூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவியரிடம், 'சில்மிஷ'த்தில் ஈடுபட்ட ஆசிரியர், ஆசிரியை இருவரையும், நேற்று, தமிழக கல்வித் துறை, "சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டு உள்ளது. சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, வீரகனூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, கணித ஆசிரியர்

1947=2014, 67 ஆண்டுகளுக்கு பின் ஒரே மாதிரி காலண்டர்

சில சமயங்களில் எப்போதாவது சில அதிசயங்கள் நிகழும். அப்படிப்பட்ட ஓர் அதிசயம் வருகிற 2014ம் ஆண்டில் நிகழ்கிறது. அதாவது 1947ம் ஆண்டு காலண்டர் போலவே, 2014ம் ஆண்டின் காலண்டரும் அமைகிறது. 1947ம் ஆண்டு புதன்கிழமை பிறந்தது. அதேபோல் இந்த ஆண்டும் புதன்கிழமைதான் பிறக்கிறது.

Thursday, December 19, 2013

7-வது சம்பள கமிஷன் அமைக்கும் திட்டம் ஓரிரு வாரங்களில் அமைச்சரவையில் தாக்கல்

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை திருத்தம் செய்வதற்காக 7-வது சம்பள கமிஷன் அமைப்பதற்கு பிரதமர் மன்மோகன் சிங் கடந்த செப்டம்பர் மாதம் ஒப்புதல் அளித்தார்.   எனினும் 7-வது சம்பள கமிஷன் அமைப்பதற்கு முறைப்படி திட்டம் தயாரிக்கப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வைக்கப்படவில்லை.  இந்நிலையில், 7-வது சம்பள கமிஷன் அமைப்பதற்கான திட்டம் இன்னும் ஓரிரு வாரங்களில் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது.  

உதவிப் பேராசிரியர் நியமனம்: தமிழ்வழி ஒதுக்கீட்டில் சிக்கல்

தமிழகத்தில் 81 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளும், 163 அரசு உதவி பெறும் கல்லூரிகளும் உள்ளன. அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 1093 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.

21.12.2013 அன்று விடுமுறையா, வேலை நாளா? தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் குழப்பம்

சிவகங்கை மாவட்டத்தில் தொடக்கக்கல்வித்துறையில் கடந்த சில நாட்களாக குறுந்தகவல்கள் ஆசிரியர்களை குழப்பி வருகிறது. பள்ளி வேலை நாட்கள் பொதுவாக மாவட்டத்திற்கு ஏற்ப மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்களே திட்டமிடும் வழக்கம்தான் இது நாள் வரை இருந்து வருகிறது.

தேர்தல் பணியாளர் ஆலோசனை கூட்டம்: ஆரம்பமே குழப்பம்; ஆசிரியர்கள் தவிப்பு

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பணியாளர் பட்டியல் தயாரிப்பதற்கான விண்ணப்பங்கள் பெற, ஒரே நேரத்தில் 2000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் குவிந்ததால், குழப்பம் ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில், லோக்சபா தேர்தலுக்கான பணியாளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

விளையாட்டு மைதானங்கள் இல்லாததால்; வீணாய்போகும் இளைஞர்களின் திறமைகள்

கிராமப்புற இளைஞர்களின் விளையாட்டு திறமைகளை வெளிக்கொண்டுவர, கொம்யூன் வாரியாக அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானங்கள் அமைக்க அரசு முன்வர வேண்டும். மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கு அடித்தளமாக உள்ளது விளையாட்டு. மேலும், உடல் நலம், மன நலம், சமுதாய நலத்திற்கும் விளையாட்டு அவசியம்.

"ராஜ்ய புரஸ்கார்" விருது: 110 மாணவர்கள் தேர்வு

பரமக்குடி கல்வி மாவட்டத்தில் பாரத சாரண - சாரணியர் இயக்கம், தமிழ்நாடு பிரிவின் கீழ் 110 மாணவ மாணவிகள் "ராஜ்ய புரஸ்கார்" விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.

மாணவரின் தேர்வு பயத்தை குறைக்க ஆசிரியர்களுக்கு சிறப்பு கலந்தாய்வு

பொதுத்தேர்வை சந்திக்கும் எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 மாணவரின் மன அழுத்தம் மற்றும் தேர்வு பயத்தை குறைக்க, ஆசிரியர்களுக்கு  சிறப்பு, "கவுன்சலிங்" வழங்கப்படுகிறது.

நேரடியாக பறக்கும் படை நியமிக்கிறது மாநில பள்ளி கல்வித்துறை

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டது முதல் பல்வேறு மாற்றங்களை கல்வித்துறை செய்து வருகிறது. தற்போது, தேர்வறையை கண்காணிக்கும் மேற்பார்வையாளர் மற்றும் பறக்கும் படை அதிகாரிகளை கல்வித்துறை உயரதிகாரிகளே நேரடியாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.