நாட்டின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் வழங்கும் பட்டப் படிப்புகளுக்கென்று உருவாக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகள், டிப்ளமோ படிப்புகளுக்கு பொருந்தாது என்று மனிதவள அமைச்சகம் மற்றும் யு.ஜி.சி ஆகியவை அறிவித்துள்ளன.
இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது: புதிய விதிமுறைகள் இணைப்புக் கல்லூரிகள் மற்றும் அவை வழங்கும் பட்டப் படிப்புகளுக்கு மட்டுமே பொருந்தும். மற்றபடி அனைத்து டிப்ளமோ படிப்புகளையும் வழங்கும் கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது.
UGC -ன் புதிய வரைவு விதிமுறைகளை எதிர்த்து, நாட்டின் பெரும்பாலான தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் உச்சநீதிமன்றம் செல்ல முடிவெடுத்துள்ளன. ஏனெனில், இந்த புதிய வரைவு விதிமுறைகளால், ஏற்கனவே இயக்கத்தில் இருக்கும் மாணவர் சேர்க்கை செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளதால் அவை இந்த முடிவை எடுத்துள்ளன. இதையடுத்துதான் இந்த விளக்கத்தை UGC தெரிவித்துள்ளது.
2013ம் ஆண்டின் இறுதியில், AICTE அதிகாரம் குறித்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு கூறியதைத் தொடர்ந்தே, தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கான புதிய விதிமுறைகளை UGC வகுத்தது. ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பை மேலாண்மை கல்வி நிறுவனங்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை.
இதனால், இணைப்பு பெறாத கல்வி நிறுவனங்கள் வழங்கும் டிப்ளமோ படிப்புகளுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்பதை அவை புரிந்துகொள்ள வேண்டும். மேலும், விதிமுறைகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இதற்கு இன்னும் சற்று காலஅவகாசம் தேவை. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.