கர்நாடகத்தில், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்பட, அனைத்து கல்லூரிகளிலும் பயோமெட்ரிக் அமைப்பை அறிமுகப்படுத்த, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதன்மூலம், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரிகளின் இதர பணியாளர்களின் வருகைப் பதிவை கண்காணிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 38 பாலிடெக்னிக்குகள் மற்றும் 9 பொறியியல் கல்லூரிகள் போன்றவை, இந்த பயோமெட்ரிக் முறையை நடைமுறைப்படுத்தியுள்ளன.
பயோமெட்ரிக் முறையில் வருகைப் பதிவை கண்காணிப்பதால், ஆசிரியர்கள் சரியாக வகுப்புக்கு வருவதில்லை என்று மாணவர்களிடமிருந்து வரும் புகார்களை களைவதற்கு வழியேற்படும்.
தற்போது மாநிலத்தில் 362 முதல்நிலை அரசு கல்லூரிகள் உள்ளன. பயோமெட்ரிக் மூலம், ஒவ்வொரு பேராசிரியரின் வருகைப் பதிவையும் தனிப்பட்ட முறையில் கண்காணிக்கலாம்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.