Pages

Thursday, December 26, 2013

தேர்வெழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை வழங்க கெடு

தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை "ஆன்லைன்" மூலம் பதியாத பள்ளிகள், புதிய பள்ளிகளுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.


பிளஸ் 2 மற்றும் 10 ம் வகுப்பு, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை, டிச.,10க்குள் ஆன்லைனில் பதிய அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டிருந்தது. ஆனால் சில பள்ளிகள் பதிவு செய்யவில்லை. பதிவு செய்யாத பள்ளிகள் சரிபார்ப்பு பெயர் பட்டியல் (நாமினல் ரோல்) பெறாத பள்ளிகள் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை நாளைக்குள் சென்னை அரசு தேர்வுத்துறை அலுவலகத்தில் கொடுக்க வேண்டுமென, தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆன்லைனில் பதிவு செய்த பள்ளிகள், சரிபார்ப்பு பெயர் பட்டியலில் உள்ள மாணவர்களின் பெயர், "இன்சியல்", மதம், இனம் ஆகியவற்றை சரிபார்த்து 2014 ஜன., 4ல் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலங்களில் ஒப்படைக்க வேண்டும். அதேபோல் "ஆன்லைன்" மூலம் ஜன.,1 முதல் 3 ம் தேதி மாலை 5:00 மணிக்குள் மாணவர்கள் பட்டியலில் உள்ள திருத்தங்களை சரிசெய்து கொள்ள வேண்டும் எனவும் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.