Pages

Saturday, December 21, 2013

அனைவருக்கும் கல்வி இயக்கம் கலைக்கப்படாது - முதன்மை செயலர் சபிதா

அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தை, ( எஸ்.எஸ்.ஏ.,), அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கத்துடன் இணைப்பது குறித்து, எவ்வித ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை' என, பள்ளிக்கல்வித்துறை, முதன்மை செயலர் சபிதா தெரிவித்தார்.

கடந்த, 2000ம் ஆண்டில், அனைவருக்கும் கல்வித்திட்டத்தை, மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல், பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மாற்றுத்திறனாளி மாணவர்களின் வாழ்கை தரத்தை மேம்படுத்துதல், இடைநிற்பதை தவிர்த்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்ட காலம், 2010ல், முடிந்தது; தொடர்ந்து, மூன்றாண்டுகள் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய மனித வளமேம்பாட்டு துறை இத்திட்டத்தை, அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தில் இணைக்க, ஆலோசித்து வருவதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சமீபத்தில், அனைவருக்கும் கல்வி இயக்க முக்கிய பணியான, வட்டார வள மைய மேற்பார்வையாளர் பணியிடங்கள் கலைக்கப்பட்டு, அதில் பணிபுரிந்தவர்கள், கலந்தாய்வின் மூலம் மீண்டும் பள்ளிகளுக்கே அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, சம்பளம் வழங்குவதற்கான நிதியை, மத்திய அரசு நிறுத்தியதே காரணம் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் பணியிடங்கள் கலைப்பு,, இத்திட்டத்தை நிறுத்துவதற்கான, மறைமுக நடவடிக்கை என்று கூறப்பட்டது. திட்டம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்துடன் இணைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் கிளம்பியுள்ளது. இதுகுறித்து, பள்ளிக்கல்வி முதன்மை செயலர் சபிதாவிடம் கேட்டபோது, ""அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தை, அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்கத்துடன் இணைப்பது தொடர்பாக எவ்வித ஆலோசனைகளும், மேற்கொள்ளப்படவில்லை. தற்போதைக்கு, அனைவருக்கும் கல்வி இயக்கம் கலைக்கப்படாது,'' என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.