ஆத்தூர் அருகே, வீரகனூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவியரிடம், 'சில்மிஷ'த்தில் ஈடுபட்ட ஆசிரியர், ஆசிரியை இருவரையும், நேற்று, தமிழக கல்வித் துறை, "சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டு உள்ளது. சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, வீரகனூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, கணித ஆசிரியர்
கிருஷ்ணகுமார், உடற்கல்வி ஆசிரியை வாசுகி ஆகிய இருவரும், சில்மிஷ செயல்களில் ஈடுபட்டு வந்ததுடன், மாணவியரிடம் தகாத முறையில் பேசி வந்தனர். இவர்கள் மீது, ஐந்து பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிந்த நிலையில், சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஈஸ்வரன், கிருஷ்ணகுமாரை, லத்துவாடி அரசு உயர்நிலைப் பள்ளிக்கும், வாசுகியை, செந்தாரப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கும், பணிமாறுதல் செய்து உத்தரவிட்டார். "பெயரளவில்' நடவடிக்கை எடுக்கப்பட்டது குறித்து, "தினமலர்' நாளிதழில், செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, தமிழக பள்ளிக்கல்வித் துறை, இணை இயக்குனரும், என்.எஸ்.எஸ்., திட்ட இயக்குனருமான உமாராணி தலைமையிலான அதிகாரிகள், 16ம் தேதி, காலை, 11:00 மணி முதல், மாலை, 5:30 மணி வரை, தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவியரிடம், தனித் தனியாக விசாரணை நடத்தினர். அன்று இரவு, 8:00 மணியளவில், ஆசிரியர்கள் மீதான புகார் குறித்த விசாரணை அறிக்கை விவரங்களை, தமிழக பள்ளிக்கல்வித் துறை, இயக்குனருக்கு, "ரகசிய விசாரணை அறிக்கை' என, அனுப்பப்பட்டது. சில்மிஷ புகாரில் சிக்கிய ஆசிரியர் கிருஷ்ணகுமார், ஆசிரியை வாசுகி ஆகிய இருவரையும், "சஸ்பெண்ட்' செய்து, தமிழக பள்ளிக்கல்வித் துறை இயக்குனர், நேற்று உத்தரவிட்டார். ஆசிரியர்களின் சஸ்பெண்ட் உத்தரவை, அவர்களது வீட்டில் வழங்கும்படியும், அவர்கள் இல்லையெனில், வீட்டின் கதவில் ஒட்டி வரும்படியும், பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.