Pages

Saturday, December 21, 2013

அதிகமாக பொரித்த உணவை சாப்பிட கூடாது: மாணவர்கள் மூலம் பெற்றோருக்கு விழிப்புணர்வு

பொரித்த உணவை அதிகமாக உட்கொள்வதால் இதயநோய் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளதால் மாணவர்கள் மூலம் இதனை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போட்டிகள் நடந்தது.


இன்றைய சூழ்நிலையில் பாஸ்புட் உணவுகள், பொரித்த உணவு பண்டங்கள் போன்றவற்றை அதிகமாக வாங்கி சாப்பிடுகிறோம். அதிக எண்ணிக்கை பொரித்த உணவு பொருட்கள், குடிப்பழக்கம், உடற்பயிற்சி இல்லாமை போன்ற காரணங்களால் 30 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களின் இதயநோய் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சதவீதம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு (வேல்டு ஹெல்த் ஆர்கனைசேஷன்) தெரிவித்துள்ளது.

இதன்படி பொதுமக்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பள்ளி மாணவர்கள் மூலம் மக்களுக்கு அறிவுறுத்தும் வண்ணம் தமிழ்நாடு சுகாதார நிறுவனத்துடன் அனைவருக்கும் கல்வி இயக்கம் இணைந்து விழிப்புணர்வு போட்டிகள் 6,7,8 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு நடத்தியது.

போஸ்டர் போட்டியில் தோழப்பன்பண்ணை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர் தங்கமும், ஸ்லோகன் போட்டியில் கமலாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர் சைலப்பனும், எஸ்சை ரைட்டிங் போட்டியில் தூத்துக்குடி தாகூர் நடுநிலைப்பள்ளி மாணவி இளவரசியும், டிராயிங் அயின்ட் பெயிண்டிங் போட்டியில் தூத்துக்குடி லசால் மேல்நிலைப்பள்ளி மாணவர் சதீஷ்குமார் ஆகியோர் முதல் பரிசினை பெற்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.