Pages

Thursday, December 26, 2013

2014ம் ஆண்டில் 8.5 லட்சம் புதிய பணியிடங்கள்?

2014ம் ஆண்டில், பல்வேறு துறைகளில் 8.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பணி வாய்ப்புகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட விஷயங்களைத் தாண்டி, 2013ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட 7.9 லட்சம் பணியிடங்களைவிட, 2014ம் ஆண்டில் உருவாக்கப்படும் பணியிடங்கள் அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

12க்கும் மேற்பட்ட தொழில் பிரிவுகளைச் சேர்ந்த, 5,600க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, மேற்கண்ட தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த பணி வாய்ப்புகள், FMCG தவிர, மருத்துவத் துறை, ஐ.டி., சில்லறை வணிகம் மற்றும் விருந்தோம்பல் துறை உள்ளிட்டவைகளில் அதிக பணி வாய்ப்புகள் உருவாகும். கடந்த காலண்டர் ஆண்டு, பணி தேடுநர்களுக்கும், பணி வழங்குநர்களுக்கும் மகிழ்ச்சியான ஆண்டாக இருக்கவில்லை. நிலையற்ற பொருளாதார மற்றும் அரசியல் சூழல்களே அதற்கு காரணம்.

ஆனால் வரும் 2014ம் ஆண்டு, அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படக்கூடிய சாதகமான அம்சங்களைக் கொண்டுள்ளது. மேலே கூறியுள்ளபடி, 8.5 லட்சம் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 comment:

  1. i have finished mba finance & hr any job vacant for me

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.