கோடநாட்டில் முதல்வரை சந்தித்து மனு கொடுக்க சென்ற மதுரை சட்ட கல்லூரி மாணவிக்கு பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மதுரை சட்ட கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருபவர் நந்தினி, 21. பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி சில மாதங்களுக்கு முன் மதுரையில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் நேற்று முன் தினம் சென்னையில் தமிழக முதல்வரை சந்தித்து பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி மனு கொடுத்த தனது தந்தை ஆனந்தனுடன் பைக்கில் சென்றார். ஆனால், முதல்வர் சென்னையில் இல்லை.
நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் தங்கி இருப்பது தெரிய வந்தது. நேற்று தன் தந்தையுடன் பைக்கில் கோடநாடு நோக்கி சென்றார். இதுகுறித்து ஈரோடு மாவட்டம், பெருந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பெருந்துறை நால்ரோடு பகுதியில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி தமிழக முதல்வரை சந்திக்க செல்வதாக தெரிவித்தனர்.
மேலும் தான், நான்கு நாட்களாக தான் சாப்பிடவில்லை என்று நந்தினி, போலீஸாரிடம் தெரிவித்தார். இதையடுத்து பெருந்துறை அரசு மருத்துவமனையில் புற நோயாளியாக அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது தந்தை ஆனந்தனும் நந்தினியுடன் உள்ளார். போலீஸார் வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.