Pages

Tuesday, December 31, 2013

பூம்புகார் கடலில் தத்தளித்த மாணவர்களை காப்பாற்றிய ஆசிரியர் நீரில் மூழ்கி சாவு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள், அரையாண்டு தேர்வு முடிந்து சுற்றுலா சென்றனர். 6, 7, 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 28 பேர், பிளஸ் 2 கம்ப்யூட்டர் ஆசிரியர் பிரசாந்த் (25) உட்பட 3 ஆசிரியர்கள் என 31 பேர் ஒரு வேனில் பயணம் செய்தனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள பூம்புகாருக்கு சென்று அங்கே உள்ள கலைக்கூடத்தை நேற்று கண்டு ரசித்தனர். அதன்பிறகு ஒரு சில மாணவர்கள் கடலில் இறங்கி குளித்தனர். அவர்களை ஆசிரியர் பிரசாந்த் கண்காணித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று 4 மாணவர்களை கடல் அலை இழுத்து சென்றது. இதை பார்த்த பிரசாந்த், உடனடியாக கடலில் குதித்து போராடி 4 மாணவர்களையும் மீட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக ராட்சத அலை பிரசாந்தை கடலுக்குள் இழுத்து சென் றது. அங்கிருந்த மீனவர்கள் காப்பாற்றி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.