Pages

Tuesday, December 31, 2013

தேர்வு எழுதுவோர் விவரம் அடுத்த வாரம் வெளியாகிறது

பொது தேர்வு எழுதுவோர் விவரங்களை, அடுத்த வாரம் வெளியிட, தேர்வுத் துறை திட்டமிட்டு உள்ளது. பிளஸ் 2 தேர்வு, மார்ச், 3ல் துவங்கி, 26 வரையிலும், 10ம் வகுப்பு தேர்வு, மார்ச், 26ல் துவங்கி, ஏப்ரல், 9 வரையிலும் நடக்கிறது.
இதில் பங்கேற்கும் மாணவ, மாணவியர் விவரங்களை, மாவட்ட வாரியாக, தேர்வுத் துறை பெற்றுள்ளது. பெற்ற விவரங்கள் சரியானவையா என்பதை, மீண்டும் ஒரு முறை சரிபார்த்து, தவறு இருந்தால், அதை சரிசெய்து, 5ம் தேதிக்குள், மீண்டும் சமர்ப்பிக்க, தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தற்போது, தேர்வு எழுதும் மாணவர் பட்டியல், பள்ளிகளில், சரிபார்க்கப்பட்டு வருகின்றன. இந்த பணி முடிந்ததும், அடுத்த வாரத்தில், தேர்வெழுதும் மாணவர் எண்ணிக்கை குறித்த விவரங்களை வெளியிட, தேர்வுத் துறை, முடிவு செய்துள்ளது. பிளஸ் 2 தேர்வை, 8.5 லட்சம் பேரும், 10ம் வகுப்பு தேர்வை, 10.5 லட்சம் பேரும் எழுதலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.