தமிழகத்தில் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசாணை விவரம்: பேரவையில் 2013-14ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்தபோது, அரசு ஊழியர்களுக்காக தனியாக உடல்நல காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இந்த திட்டத்தை ஓய்வூதியதாரர் மற்றும் அவரது வாழ்க்கைத்துணை அல்லது குடும்ப ஓய்வூதியதாரர் ஆகியோருக்கும் விரிவுபடுத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்தப் புதிய காப்பீட்டு திட்டம் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகள் வரை ரூ.2 லட்சம் அளவுக்கு ஓய்வூதியதாரர் மற்றும் அவரது வாழ்க்கைத் துணை அல்லது குடும்ப ஓய்வூதியதாரர் பயனடையலாம். ஒரு குடும்பத்தில் இரண்டு அரசு ஊழியர் இருந்தால், அதில் ஒருவர் மட்டும் இந்த திட்டத்துக்கான பிரிமியம் செலுத்தினால் போதுமானது. இந்தத் திட்டம், அரசு கருவூலம் மற்றும் கணக்கு ஆணையர் அலுவலகம் மூலம் அமலாக்கப்படும். காப்பீட்டு நிறுவனத்தை தேர்வு செய்த பிறகு, இந்த திட்டத்தில் ஓய்வூதியதாரரின் பங்களிப்பு எவ்வளவு என்பது குறித்து முடிவு செய்யப்படும் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.