Pages

Sunday, December 29, 2013

உடல் வளர்ச்சியின்றி தவிக்கும் மாணவி: அரசு உதவிக்கு எதிர்பார்ப்பு

பாப்பிரெட்டிப்பட்டி அருகே கவுண்டம்பட்டியை சேர்ந்த உடல்வளர்ச்சி இல்லாத ஏழாம் வகுப்பு மாணவி அரசின் உதவிக்காக காத்திருக்கிறார்.


பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் பெருமாள், 60. இவரது மனைவி பழனியம்மாள், 57. இவர்களுக்கு, நாற்பது ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து 25 ஆண்டுக்கு பின் மோகனப்பிரியா, 12, என்ற பெண் குழந்தை பிறந்தது. பிறந்த போது நல்ல நிலையில் இருந்த மோகனப்ரியாவுக்கு திடீரென ஏற்பட்ட காய்ச்சலால், உடலும், உடல் உறுப்புகளும் வளர்ச்சி இல்லாமல் போனது. குறைவான உயரத்தால் நடக்க முடியாமல் மோகனப்ரியா அவதிப்பட்டு வந்தார்.

வசதி வாய்ப்பின்றி தவித்த மோகனப்ரியா, சில தொண்டு நிறுவனங்கள் மூலம் பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் சேர்ந்து படித்தார். பள்ளி பருவத்தில் அவரது உடல்நிலை மேலும் மோசமானதால், கால் முட்டியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு அவர் தள்ளப்பட்டார். தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் மோகனப்ரியாவின் சிகிச்சை செலவுக்கு போதிய வசதியின்றி அவரது பெற்றோர் தவித்து வருகின்றனர்.

அரசு உதவிக்கு ஏங்கும் மோகனப்ரியா, பல முறை மாவட்ட நிர்வாகத்திடமும், கல்வித்துறை அதிகாரிளிடமும் பல முறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புதுவாழ்வு எனும் வறுவை ஒழிப்பு சங்கம் மூலமாகவும் மாற்றுத்திறனாளிக்கு வழங்கப்படும் உதவி கூட மோகனப்ரியாவுக்கு வழங்கப்படவில்லை.

புதுவாழ்வு திட்டத்தில் உதவித்தொகை பெற சிபாரிசும், லஞ்சமும் கேட்பதால் மோகனப்ரியாவின் பெற்றோர் தடுமாறி வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மோகனப்ரியாவும், அவரது பெற்றோரும் கோரிக்கை விடுத்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.