Pages

Monday, December 30, 2013

உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு அவசியம்: மத்திய அமைச்சர்

கல்வியில் இடஒதுக்கீடு என்பது அவசியம் வேண்டும். ஏனெனில், நாட்டின் பெரும்பகுதி மக்களுக்கு நெடுங்காலமாக, கல்வி உரிமை உள்ளிட்ட பல்வேறு உரிமைகள் மறுக்கப்பட்டே வந்துள்ளன. இடஒதுக்கீடுதான் அவர்களை பொது களத்திற்கு அழைத்து வந்துள்ளது.

இதைக் கூறியிருப்பவர் மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சர் ஜெயராம் ரமேஷ்தான். அவர் மேலும் கூறியுள்ளதாவது:

இந்தியாவின் பப்ளிக் பள்ளிகள், பணக்கார குழந்தைகளுக்காக மட்டுமே அதிகம் பயன்படுகின்றன. அதேசமயம், கீழ் மட்டங்களைச் சேர்ந்த அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள், கல்வியிலிருந்து பின்தள்ளப்படுகின்றனர்.

நமது நடப்பு கல்வியமைப்பில், ஏழை - பணக்காரர் வித்தியாசம் பெரியளவில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. முன்னேறிய மேற்கு நாடுகளைப் பொறுத்தவரை, கல்வி என்பது முற்றிலும் பொதுப்படையானதாக இருக்கிறது. ஆனால், இந்தியா போன்ற நாட்டிலோ, பணக்கார குழந்தைகள் மட்டுமே பப்ளிக் பள்ளிகளை அணுக முடிகிறது.

அரசுப் பள்ளிகளின் நிலைமை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. கட்டாய கல்வி உரிமைச் சட்டம், அனைவருக்கும் தரமான கல்வி என்ற இலக்கினை அடைய ஓரளவு துணைபுரிகிறது.

கல்வித் துறையில் அதிக முதலீடுகள் செய்யப்பட வேண்டும். ஏராளமான குழந்தைகளுக்கு, கற்கும் வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கையில், அவர்களால் எப்படி எதிர்காலத்தில் நல்ல வேலை வாய்ப்புகளைப் பெற முடியும்?

கேரளாவை எடுத்துக்கொண்டால், அங்கே அரசின் கல்விக்கான நிதியில் 60%, கம்யூனிட்டி பள்ளிகளுக்கே செல்கிறது. அரசுப் பள்ளிகளுக்கு அல்ல. அந்த நிதி, சர்ச்சுகள் மற்றும் தனியார் அமைப்புகளால் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.