Pages

Tuesday, December 24, 2013

தொடக்க வகுப்புகளில் தமிழ் வழிக் கல்வி மட்டுமே தொடர ஆசிரியர்கள் கோரிக்கை

தொடக்க வகுப்புகளில் தமிழ் வழிக் கல்வி மட்டுமே தொடர வேண்டும் என்று, தமிழ்நாடு ஆசிரியர்கள் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் அமைப்பின் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பொதுச் செயலாளர் செ.முத்துச்சாமி தீர்மானங்களை விளக்கிப் பேசினார்.


இதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

இலவசக் கட்டாயக் கல்விச் சட்டத்தின்படி தொடக்கக் கல்வியில் தமிழ் வழிக் கல்வி மட்டுமே தொடர வேண்டும்.

6-ஆவது ஊதியக் குழு பரிந்துரையின்படி, மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்துக்கு இணையாக தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கும் 2006 ஜனவரி 1 முதல் வழங்க வேண்டும். தவிர, 6-ஆவது ஊதியக் குழுவில் தேர்வுநிலை, சிறப்பு நிலைப் பிரிவுகளுக்கு தனியாக ஊதிய விகிதம், தர ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். பங்களிப்பு ஓய்வூதியத்தை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும்.

கல்வித் துறையில் அரசாணைகளை அரசு நிர்வாகங்கள் அமலாக்காமல் நிறுத்தி வைத்து மக்கள் அரசுக்கு எதிராகச் செயல்படுவதை தடுக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீதிமன்ற உத்தரவுகளையும் உடனடியாக அமல்படுத்த வேண்டும். நாள்தோறும் புள்ளி விவரங்கள் கேட்டும், வருவாய்த் துறை உள்ளிட்ட இதர துறைகளில் இருந்து சான்றுகள் பெற்று வரவும் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை கைவிடவும், ஆசிரியர்களை கல்விப் பணியில் மட்டுமே ஈடுபடுத்த வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.