Pages

Monday, December 30, 2013

பழைய முறைப்படி அரையாண்டு விடுமுறையை அறிவிக்க வேண்டும்

விடுமுறை நாட்களை குறைக்க கல்வித்துறை திட்டமிட்டு இருப்பதாக மாநில பட்டதாரி ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து சங்க பொதுச்செயலாளர் பாரி விடுத்துள்ள அறிக்கை:


புதுவை கல்வித்துறையில் இருந்து பள்ளிகளுக்கு முதலில் வந்த சுற்றறிக்கையில் ஜனவரி2முதல்10வரைய விடுமுறை எனவும், 11, 12ம்தேதி பள்ளிகள் இயங்கும் எனவும், 14,15,16ம்தேதி பொங்கல் விடுமுறை எனவும், 17ம்தேதி முதல் பள்ளிகள் இயங்கும் எனவும் கூறப்பட்டிருந்தது. பின்னர் வந்த சுற்றறிக்கையில் ஜன.2முதல்11வரை பள்ளிகள் இயங்கும் எனவும், 12முதல்20வரை அரையாண்டு விடுமுறை எனவும், 21ம்தேதி முதல் பள்ளிகள் இயங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இதில் வேடிக்கை என்னவெனில்12முதல்20வரை உள்ள நாட்களில்2நாட்கள் சனிக்கிழமை, 2நாட்கள் ஞாயிற்றுக்கிழமை, 3நாட்கள் பொங்கல் விடுமுறையாகும். 

இந்த நாட்களை கழித்து பார்த்தால் அரையாண்டு விடுமுறையாக கல்வித்துறை அறிவிப்பது வெறும்2நாட்கள் மட்டுமே.மேலும் ஜன.2முதல்11ம்தேதிவரை பள்ளிகள் எப்படி இயங்கும் என்பதை கல்வித்துறை கட்டாயம் தெளிவுப்படுத்த வேண்டும்.1முதல்8ம் வகுப்பு மாணவர்களுக்கு அளிக்க வேண்டிய3ம் பருவ பாட புத்தகங்கள் இன்றி வகுப்புகள் நடைபெறும். இதுதான் உண்மை நிலை.இதுமட்டுமின்றி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் அதேநாளில் ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி என்று கூறியிருப்பது மற்றொரு அவலநிலையாகும். மேலும் அந்த நாள் பள்ளியின் வேலைநாளாம். மாணவர்கள் பள்ளிக்கு வராமல் அந்த நாளை பள்ளியின் வேலைநாளாக கணிக்கும் இந்தபோக்கு புதுவையில் மட்டுமே அரங்கேறுகிறது. இவையெல்லாமே அந்த220வேலை நாட்களில் பள்ளியை நடத்த துறை எடுக்கும் அவலநிலையாகும்.எனவே அரையாண்டு விடுமுறையை பழைய முறைப்படி ஜன.1முதல்17வரை அறிவிக்க வேண்டும். மாணவர்கள்,ஆசிரியர்களின் மனநிலையை உணர்ந்து பள்ளி கல்வித்துறை செயல்பட வேண்டும். இப்பிரச்னையில் முதல்வர் உடனடியாக தலையிட்டு மாணவர்கள்,ஆசிரியர்களின் நலனை பாதுகாக்க வேண்டும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.