Pages

Tuesday, December 31, 2013

பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கும் யு.பி.எஸ்.சி

பேராசிரியர், உதவிப் பேராசிரியர், கண்காணிப்பாளர், சீனியர் லெக்சரர் உள்ளிட்ட பல பணி நிலைகளுக்கு ஆட்களை நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்களை UPSC வரவேற்கிறது.


இதற்குரிய முக்கிய தேதி விபரங்கள்

* பதிவு செய்வதற்கான தொடக்க தேதி - டிசம்பர் 28

* பதிவு செய்தல் முடியும் தேதி - ஜனவரி 16

* விண்ணப்பம் பிரின்ட் செய்வதற்கான கடைசித் தேதி - ஜனவரி 17

* 18 பணி நிலைப் பிரிவுகளில், மொத்தம் 21 பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு

* அசோசியேட் பேராசிரியர் (சிவில் இன்ஜினியரிங், டெக்னிக்கல்)  - 55 வயது

* சீனியர் லெக்சரர் - 50 வயது

* அசோசியேட் பேராசிரியர் (ஐ.டி) - 50 வயது

* உதவிப் பேராசிரியர் மற்றும் கண்காணிப்பாளர் - 35 வயது.

விண்ணப்பிக்க விரும்புவோர் www.upsconline.nic.in என்ற வலைதளம் செல்ல வேண்டும். தபால் மூலமாக விண்ணப்பம் அனுப்ப தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.