Pages

Sunday, December 29, 2013

முதுகலை ஆசிரியராக 733 பேருக்கு பதவி உயர்வு

முதுகலை ஆசிரியராக 733 பேருக்கு நேற்று நடந்த கலந்தாய்வில் பதவி உயர்வு உத்தரவுகள் வழங்கப்பட்டன. பட்டதாரி ஆசிரியரில், முதுகலை ஆசிரியர் தகுதி வாய்ந்த 897 பேருக்கு பதவி உயர்வு வழங்க மாநிலம் முழுவதும் நேற்று கலந்தாய்வு நடந்தது. 3,000 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள், காலியாக இருந்தும், கடைசியில், 733 பேர் மட்டுமே, பதவி உயர்வு பெற, முன் வந்தனர்.

இவர்களுக்கு மட்டும், பதவி உயர்வுக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன.பதவி உயர்வு இடம், எதிர்பார்ப்பிற்கு மாறாக, நீண்ட தொலைவில் இருந்ததால், 164 பேர், பதவி உயர்வை புறக்கணித்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், 40, திருவள்ளூரில், 31, வேலூரில், 47, சேலத்தில், 48 பேர், பதவி உயர்வு பெற்றனர். சென்னை மாவட்டத்தில், ஐந்து காலி பணியிடங்கள் மட்டுமே இருந்தன.கலந்தாய்வில், 26 பேர், பங்கேற்றபோதும், "சீனியர்' ஐந்து பேர், காலியிடங்களை தேர்வு செய்தனர். இதனால், 21 பேர், பதவி உயர்வை புறக்கணித்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.