Pages

Saturday, December 21, 2013

பண்டிகைகால முன்பணத்தை 10 நாட்களுக்கு முன்பாக வழங்க கோரிக்கை

பண்டிகைகால முன்பணத்தை 10 நாட்களுக்கு முன்பாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்து உள்ளது.


செயற்குழு கூட்டம்

ராதாபுரம் வட்டார தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம் ராதாபுரத்தில் நடந்தது. வட்டார தலைவர் அ.ஷேக்முகமது ஜின்னா தலைமை தாங்கினார். வட்டார துணை தலைவர் சு.சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். துணை செயலாளர் செ.நம்பிராஜன் வரவேற்றுப் பேசினார்.

வட்டார செயலாளர் ஆ.ராஜகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வட்டார பொருளாளர் எட்வின் செல்வகுமார் நன்றி கூறினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

பண்டிகைகால முன்பணம்

ராதாபுரம் உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தில், 2 உதவியாளர்கள், ஒரு ஆவண எழுத்தர், ஒரு அலுவலக உதவியாளர் போன்ற காலிபணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்று நெல்லை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் வழியாக மாநில தொடக்கக்கல்வி இணை இயக்குனருக்கு கடிதம் அனுப்பது.

பண்டிகைகால முன்பணம் ரூ.5 ஆயிரத்தை குறைந்தது பண்டிகைக்காலத்துக்கு 10 நாட்களுக்கு முன்பாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலரின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அரசு அறிவித்து உள்ள தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதியத்தை டிசம்பர் மாதத்திலேயே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் மற்றும் நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் பலன்கள் உடனடியாக வழங்க வேண்டும்.

மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.